Published:Updated:

`` `ஆம்பள' விஜய்சேதுபதி அழகு. 'பொம்பள' விஜய்சேதுபதி அதைவிட அழகு!" - காயத்ரி ஷேரிங்ஸ்

தார்மிக் லீ
`` `ஆம்பள' விஜய்சேதுபதி அழகு. 'பொம்பள' விஜய்சேதுபதி அதைவிட அழகு!" - காயத்ரி ஷேரிங்ஸ்
`` `ஆம்பள' விஜய்சேதுபதி அழகு. 'பொம்பள' விஜய்சேதுபதி அதைவிட அழகு!" - காயத்ரி ஷேரிங்ஸ்

`` `ப்பா...' இதுதான் என் அடையாளமாவே இருந்தது. எனக்கு ஒரு நல்ல ரீச் கிடைச்சதே இந்த டயலாக் மூலமாதான். நிறைய படங்கள் பண்ணிட்டேன், எந்தப் படமும் கொடுக்காத ரீச்சை `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படம் கொடுத்தது...'' - உற்சாகத்துடன் உரையாடலைத் தொடங்குகிறார், நடிகை காயத்ரி.

``நல்ல தமிழ் பேசி நடிக்கிற நடிகைகள் நிறைய பேர் இருக்காங்க, அவங்களுக்கான இடம் இன்னும் முழுமையா கிடைக்கலையே ஏன்?"  

``தமிழ் தெரிஞ்ச பொண்ணுங்க என் படத்துல நடிக்கணும்னு ஆசைப்படுற இயக்குநர்கள் ரொம்பக் கம்மி. தமிழ் பேசத் தெரிஞ்ச நடிகைகள் பத்துப் பேர் இருக்காங்கன்னா, அதுக்கு ஷூட் ஆகுற மாதிரி இயக்குநர்கள் ரெண்டு பேர்தான் இருக்காங்க. அதனால அதுக்குக் கொஞ்சம் டைம் ஆகும். அப்படியும் சில இயக்குநர்கள் அவங்களுடைய படங்கள்ல நடிக்க வைக்கிறாங்க. சினிமாவுல நிறைய பெண்கள் வரணும்னு ஆசையா இருக்கு. வெறும் நடிக்க மட்டுமில்லாம சினிமா சார்ந்த எந்த வேலையும் பார்க்கலாம். ஏன், படம்கூட இயக்கலாம். பொண்ணுடைய பாயின்ட் ஆஃப் வியூல கதை எழுதுனாதான், இன்னொரு பொண்ணைப் பத்தி தெரியும். ஒரு நடிகையா, நாங்களும் அதைத்தான் எதிர்பார்ப்போம். இதையும்மீறி `அருவி', `அறம்' மாதிரியான படங்களும் வருது. வருடத்துக்கு ஒரு படம்னு இல்லாம, அடிக்கடி இப்படிப்பட்ட படங்கள் வந்தா நல்லாயிருக்கும்.'' 

``நீங்க நடிச்ச படங்கள்ல பெரும்பாலும் விஜய் சேதுபதிதான் ஹீரோ. எதுவும் ஸ்பெஷல் காரணம் இருக்கா?''

``இந்தக் கேள்வியை நீங்க விஜய் சேதுபதியைப் பேட்டி எடுக்கும்போதும் கேட்கணும். `நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்துல எனக்கும் அவருக்குமான போர்ஷன் ரொம்ப கம்மி. ஆனாலும், அவர்கூட நான் நிறைய டைம் ஸ்பெண்ட் பண்ணியிருக்கேன். நாங்க எல்லோரும் ஒரு ஆபீஸ்லதான் ரிகர்சல் பார்த்தோம். க்ளைமாக்ஸ்ல வர்ற சீனை முழு டீமோட எங்களைச் சும்மா நடிக்க வெச்சுப் பார்த்தாங்க. அதை ரெக்கார்ட் பண்ணி `இதே மீட்டர்லதான் நீங்க பண்ணனும்'னு சொன்னாங்க. அந்த டைம்லதான் சேது நல்லா பழக்கம் ஆனார். ஆனா, அப்போ பழகுனதைவிட இப்போ ரொம்பக் கம்மியாதான் பழகுறோம். ஏன்னா, இப்போ அவர் ரொம்பவே பிஸி ஆகிட்டார்." 

``காயத்ரிக்கு எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ்ல ஆர்வம் அதிகமாமே?''

``எனக்குச் சின்ன வயசுல ஸ்போர்ட்ஸ் மேல பெருசா ஈடுபாடு கிடையாது. காலேஜ் முடிச்சதுக்கு அப்புறம்தான் விளையாடவே ஆரம்பிச்சேன். எனக்கு ஃப்ரிஸ்பீ (Frisbee) விளையாடும்போது திடீர்னு ஏதோ வருதேன்னு புடிக்க மாட்டேன். அப்புறம் விளையாட விளையாடப் பழகிருச்சு. சம்மர் வந்துட்டாலே எங்க அம்மா அப்பா என்னை ட்ரெக்கிங் அனுப்பி வெச்சுருவாங்க. நான் ஆறாவது படிக்கும்போது ஆரம்பிச்சு, இப்போவரைக்கும் ட்ரெக்கிங் போயிட்டு இருக்கேன். முதுமலை, மணாலி, குதுரை மூக்கன்னு நிறைய இடங்களுக்கு ட்ரெக்கிங் போயிருக்கேன். பேட்மின்டனும் நல்லா விளையாடுவேன்."

``2018 எனக்கு செம வருடம்னு ஸ்டேட்டஸ் போட்டிருந்தீங்களே?"

``இந்த வருடம் நிறைய படங்கள்ல கமிட் ஆகியிருக்கேன். `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' ரிலீஸ் ஆகியிருச்சு. நல்ல ரெஸ்பான்ஸ் கிடைச்சது. `சூப்பர் டீலக்ஸ்' படத்தோட ஷூட்டிங் முடியப்போகுது. இன்னும் ரெண்டு சீன் முடிக்க வேண்டியது இருக்கு. ரொம்பநாள் ஆகாதுனு நினைக்கிறேன். இந்தப் படத்துல பெரிய பட்டாளமே இருக்கு. நான், சமந்தா, ரம்யா கிருஷ்ணன் முக்கியமான ஆள், ஷில்பாவா விஜய் சேதுபதி. ஷில்பாவை நானே நிறைய தடவை சைட் அடிச்சிருக்கேன். விஜய் சேதுபதியை நான் நிறைய கெட்அப்ல பார்த்திருக்கேன். லேடி கெட்அப் அவருக்குப் புதுசு. ஐ-லைனர், லிப் க்ளாஸ், லிப்ஸ்டிக் எல்லாம் போட்டு வந்ததைப் பார்த்துட்டு `ச்சே எவ்ளோ அழகா இருக்கார்ல'னு நானே பொறாமைப்பட்டிருக்கேன். ஒரு சிலர் மட்டும்தான் ஆம்பளயாவும் அழகா இருப்பாங்க, பொம்பளயாவும் அழகா இருப்பாங்க. அந்த மாதிரி லக்கியான முகம் விஜய் சேதுபதிக்கும் இருக்கு. அவரை அந்த கெட்அப்ல பார்த்தவுடனேயே இடுப்பைக் கிள்ளிட்டேன். ஷூட்டிங் போற ஒவ்வொரு நாளும் `ஷில்பா எங்கே ஷில்பா எங்கே'னு விஜய் சேதுபதியைத்தான் தேடுவேன். அப்புறம் `சீதாக்காதி' பட வாய்ப்பும் எனக்கு வந்தது. இந்தப் படத்துல ஒரு ஹீரோயின்னு சொல்ல முடியாது. நானும் ஒரு நடிகையா வர்றேன். ஸோ, இந்த வருடம் நல்லதே நடக்கும்." 

``உங்களுக்கு வர்ற கதைகளை எப்படித் தேர்ந்தெடுப்பீங்க?''

``நடுவுல கொஞ்சநாள் ரொம்பக் கம்மியா கமிட் பண்ணிக்கிறோமோனு ஃபீல் பண்ணி சில இயக்குநர்கள்கிட்ட நானே அப்ரோச் பண்ணேன்.  அது வொர்க்அவுட் ஆகலை. எனக்குத் தெரிஞ்ச இயக்குநர்கள்தான், இந்தக் கேரக்டருக்கு நான் பண்ணா நல்லா இருக்கும்னு என்னைத் தேர்ந்தெடுப்பாங்க. அப்படி எனக்கு வந்த வாய்ப்புதான், `சூப்பர் டீலக்ஸ்'. குமாரராஜா சார் என்னைக் கூப்பிட்டு, 'இந்த ரோல் உங்களுக்கு நல்லாயிருக்கும். உங்களுக்குப் பிடிக்கலைனா, நீங்க என்னைக் காரிகூட துப்பலாம்'னு சொன்னார். தேசிய விருது வாங்குன இயக்குநரே இப்படிச் சொல்றார், 'நீங்க என்னைச் சும்மா நில்லுங்கனு சொன்னாக்கூட நடிப்பேன் சார், முக்கியமான ரோல்னு சொல்றீங்க. கண்டிப்பா பண்றேன்'னு இந்தப் படத்துல நடிக்க ஒப்புக்கொண்டேன். இந்தப் படத்தோட கதையே சூப்பரா இருக்கும் தியேட்டர்ல என்ஜாய் பண்ணுங்க.''  

நடிகை காயத்ரியின் மேலும் பல சுவாரஸ்யமான பதில்களுக்கு கீழே உள்ள வீடியோவைப் பார்க்கவும்!