Published:Updated:

`ஆண் தேவதை’ பட ட்ரெய்லரில் சமுத்திரக்கனி கேட்கும் கேள்வி..!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
`ஆண் தேவதை’ பட ட்ரெய்லரில் சமுத்திரக்கனி கேட்கும் கேள்வி..!
`ஆண் தேவதை’ பட ட்ரெய்லரில் சமுத்திரக்கனி கேட்கும் கேள்வி..!

`ஆண் தேவதை’ பட ட்ரெய்லரில் சமுத்திரக்கனி கேட்கும் கேள்வி..!

தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன், ராதாரவி, காளி வெங்கட், சுஜா வருணி பேபி மோனிகா மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் `ஆண் தேவதை’. ஜிப்ரான் இசையில், விஜய் மில்டன் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தை தனது சிகரம் சினிமாஸ் சார்பில் பக்ருதீனுடன் இணைந்து தயாரித்துள்ளார் தாமிரா. இந்தப் படத்தின் ட்ரெய்லரை இயக்குநர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், கெளதம் மேனன், வெற்றிமாறன், மிஷ்கின், பா.இரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், சீனு ராமசாமியும், நடிகர்கள் விஜய் சேதுபதி, ’ஜெயம்’ ரவி, உதயநிதி ஸ்டாலின், விஜய் ஆண்டனியும் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.

வாழ்வதற்காக வேலைப் பார்க்கிறோமா இல்லை வேலைப் பார்ப்பதற்காக வாழ்கிறோமா என்ற கேள்வியோடு தொடங்கும் ட்ரெய்லர், டார்கெட்... டார்கெட் என்று ஓடும் சென்னைவாசிகளின் வாழ்க்கையையும், ஹவுஸ் ஹஸ்பண்ட் முறையைப் பற்றி பேசும் படமாகவும் இது இருக்கும் என்பதை காட்டுகிறது. கோடை விடுமுறைக்கு ஆண் தேவதை வருவார் என எதிர்பாக்கலாம். 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு