கலாய்
சினிமா
Published:Updated:

சுட்ட படம்

சுட்ட படம்
பிரீமியம் ஸ்டோரி
News
சுட்ட படம்

சுட்ட படம்

சுட்ட படம்

ந்த வார சுட்ட படம் சந்தானத்தின் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்! ‘இல்லையே...அது 2010-ல் ராஜமௌலி டைரக்‌ஷன்ல டோலிவுட்ல ஹிட்டடிச்ச ‘மரியாதை ராமண்ணா’ படத்தோட ரீமேக் ஆச்சே?’னு கேட்கிறீங்களா? ஆமா பாஸ். அந்தப் படமும் சுட்ட படம்தான். 1923-ல் காமெடி கிங் பஸ்டர் கீட்டன் நடித்து இயக்கிய ‘அவர் ஹாஸ்பிட்டாலிட்டி’ என்ற க்ளாஸிக் கருப்பு வெள்ளைப் படத்தின் அப்பட்டமான காப்பியேதான் பாஸ்!

சுட்ட படம்

வாங்க... ஒரிஜினல் மௌனப்படமான ‘அவர் ஹாஸ்பிட்டாலிட்டி’ படத்தின் கதையைச் சொல்றேன். கான்ஃபீல்டு மற்றும் மெக்கே குடும்பங்கள் பரம வைரிகளாகத் தலைமுறை தலைமுறையாக சண்டை போட்டுக்கொள்பவர்கள். ஒரு மழைநாள் இரவில் மெக்கேவும் கான்ஃபீல்டும் மாறிமாறி தாக்கிக்கொண்டு செத்து விடுகிறார்கள். மெக்கேவின் மனைவி தன் பச்சிளம் குழந்தையுடன் தப்பித்துச் செல்கிறார். தன் தந்தை கான்ஃபீல்டுவின் மரணத்துக்குக் காரணமான மெக்கேவின் கடைசி வாரிசு வரை பூண்டோடு அழித்துப் பழி தீர்ப்பேன் என சூளுரைக்கிறார் கான்ஃபீல்டுவின் மகன். நியூயார்க் நகரில் இந்த ஃப்ளாஷ்பேக் எதுவும் தன் தாயாரால் சொல்லப்படாமல் வெள்ளந்தியாய் வளர்ந்து 20 வயது இளைஞனாகிறார் பஸ்பர் கீட்டன்.

சுட்ட படம்
சுட்ட படம்

கஷ்டத்தில் இருக்கும்போது தன் அத்தையின் மூலம் தனக்கு கிராமத்தில் சொத்துகள் இருப்பதைத் தெரிந்துகொள்ளும் பஸ்டர், சொத்துகளை விற்றுக் காசாக்கலாம் என அங்கு செல்கிறார். ரயிலில் போகும்போது விர்ஜீனியா என்ற பெண்ணைப் பார்த்துக் காதலாகிறார். நீண்ட பயணத்தின் இடையில் இருவரும் நண்பர்களாகிறார்கள். தன் வீட்டுக்கு வருமாறு அழைக்கிறாள் விர்ஜீனியா. ஆரம்பத்தில் மறுக்கும் பஸ்டர் சஸ்பென்ஸாக அந்தக் கிராமத்திற்குக் கிளம்பிச் செல்கிறார். அவளின் தந்தை வேறு யாருமல்ல, கான்ஃபீல்டுவின் மகன் ஜோ. அதாவது மெக்கேவின் மகன் பஸ்டரை அழிக்கும் சபதம் எடுத்திருக்கும் நபர். ஒருவழியாக விர்ஜீனியா வீட்டுக்கு வந்து சேர்கிறார் பஸ்டர். அதற்குள் வந்திருப்பது தங்கள் எதிரிக் குடும்பத்து வாரிசு என்பதை அறிந்து அவனைக் கொல்லத் திட்டம் போடுகிறார்கள். ஆனால், விருந்தினர்களை உபசரிப்பதை ஒரு கொள்கையாகவே கடைப்பிடிப்பவர்கள். பஸ்டரை எப்படியாவது வெளியே அனுப்பி சுட்டுக் கொல்லத் திட்டம் போடுகிறார்கள். வெளியே சென்றால் தன்னைக் கொன்று விடுவார்கள் என்பதை உணர்ந்ததும் பஸ்டர் போடும் காமெடித் திட்டங்கள், விர்ஜீனியாவோடு நிகழும் ரொமான்ஸ், அது தெரிந்ததும் விர்ஜீனியாவின் குடும்பத்தினரின் கொலவெறி ரியாக்‌ஷன், இந்த ஆடு-புலி ஆட்டம்தான் க்ளைமாக்ஸில் என்னவாகிறது என்ற பதைபதைப்பை உண்டு பண்ணுகிறது.

சுட்ட படம்
சுட்ட படம்

தமிழில் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தின் கதை டிட்டோ இதுதான் எனப் பார்த்தவர்கள் நன்கு அறிவார்கள். காமெடி நடிகர் சுனிலை வைத்து மிகப்பெரிய ஹிட் கொடுத்தார் எஸ்.எஸ்.ராஜமௌலி. இந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் ‘சன் ஆஃப் சர்தார்’, பெங்காலியில் சோஹம் சக்ரபர்த்தியின் நடிப்பில் ‘ஃபாண்டே போரியா போகா கான்டே ரே’,  மலையாளத்தில் திலீப் நடிப்பில் ‘மரியாதை ராமண்ணா’ என எல்லா மொழியிலும் ஹிட்டடித்த படம் இது. ஆனால், ஒரிஜினலை இயக்கி உயிரைப் பணயம் வைத்து பல சேஸிங் காட்சிகளில் நடித்த பஸ்டர் கீட்டனுக்கு சார்லி சாப்ளின் புகழில் கால் பங்குகூட கிடைக்கவில்லை என்பதுதான் சோகம்!

(இன்னும் சுடும்..!)

ஞானப்பழம்