Published:Updated:

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

இளசுகளின் இன்ஸ்பிரேஷன் தொடர் season 4, episode 4

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

இளசுகளின் இன்ஸ்பிரேஷன் தொடர் season 4, episode 4

Published:Updated:
வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!
வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

"சிறகுகள் விரித்தேன்... வானில் பறந்தேன்!"

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்!

னக்கு வந்த புரபோசல், என்னோட ஃப்யூச்சர் பிளான் பத்தி எல்லாம் பேசறேன்னு போன இதழ்ல சொல்லியிருந்தேன்ல.... இப்ப பேசுவோம்!

என் காதல்!

லவ் இஸ் பியூட்டிஃபுல். என்னோட காதல், மோட்டிவேஷனலானது. அதுதான் என் உலகம். அதுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்.

ஓ வெய்ட்... நான் சொல்றது ஒரு நபர் மேலான காதல் இல்லைங்க... ஸ்குவாஷ் மேலான என் காதல். என்னோட இப்போதைய காதல், கவனம் எல்லாம் ஸ்குவாஷ் மட்டும்தான். அதுதான் என் வாழ்க்கையின் அச்சு. என்ன பார்க்கிறீங்க..? மனசு முழுக்க குவிச்சு அர்ப்பணிப்போட இருக்கிறதுதானே காதல்? ஸ்குவாஷ் எனக்கு அப்படித்தான்!

மத்தபடி நான் யாரையும் காதலிக்கல. அந்த எண்ணமும் இல்ல; அதுக்கு நேரமும் இல்ல. தினமும் பிராக்டீஸ், ஜிம், அப்புறம் வீடு... இதுதான் என் வாழ்க்கை. பெரும்பாலும் என் பெர்சனல் விஷயங்களை யார்கிட்டயும் பகிர்ந்துக்க மாட்டேன். ஆனா, இப்போ உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு தோணுது.

என்னைப் பெண் கேட்ட பெரியவர்!

ஒருமுறை ஒரு ஸ்குவாஷ் டோர்னமென்ட் முடிச்சுட்டு, ஒரு பார்ட்டியில் இருந்தோம். பெரியவர் ஒருத்தர் வந்து, ‘நீதான் எங்க வீட்டு மருமகளா வரணும். என் மகனைக் கல்யாணம் பண்ணிக்கணும்’னு ரொம்ப சீரியஸா பேசினார். எங்க எல்லாருக்கும் ஒரே ஷாக் ஆயிடுச்சு. அப்புறம் அவர்கிட்ட என் விளையாட்டுக் கனவுகளைச் சொல்லி, ‘ஸாரி’ சொல்லிட்டு வந்தோம்.

ஒரு ஸ்குவாஷ் வீராங்கனையா நான் சாதிக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கு. அதனால இன்னும் கொஞ்ச நாளைக்கு இந்தக் காதல், கல்யாணம் பத்தியெல்லாம் நோ ஐடியா. ‘உங்க வீட்டுல என்ன சொல்றாங்க?’னு கேட்கிறீங்களா? எல்லா வீடுகளிலும் மாதிரிதான் ‘கல்யாணம் பண்ணிக்கோ’னு சொல்றாங்க. எங்க தாத்தா, ‘குறிப்பிட்ட வயசுக்குள்ள கல்யாணம் பண்ணிக்கணும்டா’னு சொல்லிட்டுதான் இருக்கார். ஆனால், எனக்கு இப்போ என் கரியர்தான் எல்லாமே.

அர்ஜுனா அவார்டு!

சரி, பேக் டு மை ஸ்குவாஷ் ஸ்டோரி. என் விளையாட்டு வாழ்க்கையின் பெரிய மகிழ்ச்சி, மிகப் பெரிய அங்கீகாரம், அர்ஜுனா அவார்டு. இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உச்சகட்ட கௌரவமான அர்ஜுனா விருது, 2013-ம் ஆண்டு எனக்குக் கிடைச்சப்போ, அந்த உணர்வை சந்தோஷம், மகிழ்ச்சி, ஆனந்தம்னு இந்த வார்த்தைகளில் எல்லாம் சொல்றது ரொம்பச் சின்னதா தோணுது. அதுக்கும் மேல. சிறகுகள் விரித்தேன், வானில் பறந்தேன் மாதிரி. அதுவும் காலில் ஏற்பட்ட காயம், ஓய்வு, விளையாட்டில் இடைவெளினு எல்லாத்தையும் தாண்டி மறுபடியும் அந்த விருதுக்கு என்னைத் தகுதிப்படுத்திக்கிட்ட பெருமை, பெரிய எனர்ஜி பூஸ்டா இருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வரலாறு முக்கியம் ஃப்ரெண்ட்ஸ்!

ராஷ்டிரபதி பவன்ல ஜனாதிபதி கையால அந்த விருதை வாங்கின தருணத்தில், என்னை இன்னும் பொறுப்பானவளா உணர்ந்தேன். `இந்தக் கௌரவத்தை நமக்குக் கொடுத்த நம்ம நாட்டுக்காக, இன்னும் பல சாதனைகளைச் செய்யணும்’னு உறுதி ஏத்துக்கிட்டேன். ‘சின்ன வயசுல உன் ஆர்வத்தில் விளையாட ஆரம்பிச்ச விளையாட்டில் அர்ப்பணிப்புடன் பயணிச்சு இப்போது அர்ஜுனா விருது வரை வந்திருப்பதில் எங்களுக்கு ரொம்பப் பெருமை’னு எங்கப்பாவும், அம்மாவும் அவ்ளோ சந்தோஷப்பட்டாங்க. இன்னும் விளையாட்டுத் துறையினர், நண்பர்கள், உறவினர்கள்னு எல்லோரும் கொடுத்த ஊக்கத்தில், முன்னைவிட அதிகமா உழைக்க ஆரம்பிச்சேன்.

அர்ஜுனா விருதுக்குப் பிறகு, 2015 டிசம்பரில் உலக ஸ்குவாஷ் தரவரிசை பட்டியலில் 13-வது இடத்தைப் பிடித்து என் கரியரின் உச்சபட்ச ரேங்கை எட்டினேன். இன்னும் ஓடிட்டே இருக்கேன். அர்ஜுனா விருதுக்கு அப்புறம் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து நிறைய உதவிகள், நல்ல ஸ்பான்சர்கள் கிடைச்சாங்க. 

ஸ்போர்ட்ஸுக்கு மரியாதை!

பொதுவா, நம்ம சமுதாயத்துல விளையாட்டு வீரர்கள் வெற்றிபெற்று பெரிய லெவலுக்குப் போனதுக்கு அப்புறம் ஸ்பான்சர்ஸ் அவங்களுக்கு ஆர்வமா முன்வந்து உதவி செய்றாங்க. ஆனா, பொருளாதாரச் சூழல்ல பின்தங்கியிருக்கிற விளையாட்டு வீரர்களுக்கு ஆரம்ப நிலையிலேயே அந்த உதவிகள் கிடைக்கப்பெற்றா, அவங்க எல்லாம் பணம் இல்லை என்ற காரணத்தால மட்டுமே விளையாட்டை கைவிட்டு துவண்டு போகும் துயரம் மாறும். இந்தியாவில் தகுதியுள்ள விளையாட்டு வீரர்கள் பலர் இருக்காங்க. தக்க உதவி கிடைச்சா, உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிரச் செய்வாங்க. என்னோட ஆசை, ஏக்கம், வேண்டுகோள் இது. வருங்காலத்திலாவது, டாக்டர் ஆகணும், இன்ஜினீயர் ஆகணும்னு குழந்தைகள் தங்களோட கனவு சொல்ற மாதிரி, விளையாட்டு வீரர், வீராங்கனை ஆகணும்னு சொல்ற அளவுக்கு அவங்களுக்கான மரியாதையும், பொருளாதார பலமும் கிடைக்கணும்.

ஃப்யூச்சர் பிளான்!

குழந்தைகளுக்காக ஒரு ஸ்குவாஷ் அகாடமி தொடங்கி நானே ஒவ்வொரு குழந்தைக்கும் பயிற்சி கொடுக்கணும். இது என் எதிர்காலத் திட்டம். இந்தியாவில் கிரிக்கெட்டைப்போல ஸ்குவாஷையும் பிரபலமாக்கணும். நிறைய பெண் குழந்தைகளை இந்தத் துறைக்கு கொண்டுவந்து, ஒரு சீனியரா நம்பிக்கை தந்து நல்வழி காட்டி, விளையாட்டுத் துறை பெண்களுக்கானது அல்ல போன்ற கற்பிதங்களை எல்லாம் தகர்த்தெறியணும்.

பெற்றோருக்கு சில வார்த்தைகள். படிப்பைக் காரணம் சொல்லி, குழந்தைகளை விளையாட்டில் இருந்து விலக்கிவைக்காதீங்க. அவங்களுக்கு எந்த விளையாட்டு பிடிக்குதோ, அதை விளையாடட்டும். உங்க குழந்தைகள் மாவட்ட, மாநில மதிப்பெண்கள் வாங்குவதைவிட முக்கியமானது, குழந்தைப் பருவத்தில் அவங்க ஆரோக்கியமாவும் மகிழ்ச்சியாவும் இருப்பது.

உங்களை நம்புங்கள்!

எனக்கு யாரு இன்ஸ்பி ரேஷன்? நானேதான். குறிப்பா, என்னோட தோல்விகள் ஒவ்வொன்றிலும் இருந்து நான் எப்படி மீண்டேன் என்பதுதான், எனக்கான பெரிய தன்னம்பிக்கைப் பாடங்கள். பெர்சனலா, எனக்கு பி.டி.உஷா மேடம் ரொம்ப பிடிக்கும். அவங்களோட தன்னம்பிக்கை அசாத்தியமானது. அவங்களப்போல நிறைய ஸ்போர்ட்ஸ் பெண்கள் இந்தியாவுக்குத் தேவை.

வெல் ஃப்ரெண்ட்ஸ்... தொடர்ந்து சில இதழ்களா உங்ககிட்ட நிறைய விஷயங்களைப் பகிர்ந்துகிட்டதில் எனக்கு ரொம்ப சந்தோஷம். அட்வைஸ் எல்லாம் எனக்குக் கொடுக்கத் தெரியாது. ஆனா, என் அனுபவத்தில் இருந்து உங்ககிட்ட ஒண்ணு சொல்லத் தோணுது. எப்போ நீங்க உங்க தகுதியின் மீதும், உழைப்பும் மீதும் சந்தேகப்படுறீங்களோ, அந்த நொடியே நீங்க தோல்வியின் திசையில் திரும்பிடுவீங்க. நீங்க உங்களை நம்பத் தொடங்கும் அடுத்த நொடி, இந்த உலகமும் உங்களை நம்பத் தொடங்கும். 

நீங்க பெறப்போகும் வெற்றிகளுக்கு என் வாழ்த்துகள்!

எஸ்.கே.பிரேம்குமார், கோ.இராகவிஜயா,படங்கள்: எம்.உசேன், பா.அபிரக்‌ஷன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism