Published:Updated:

பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்
பிரீமியம் ஸ்டோரி
பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்

Published:Updated:
பிட்ஸ் பிரேக்
பிரீமியம் ஸ்டோரி
பிட்ஸ் பிரேக்
பிட்ஸ் பிரேக்

வன் குமார்... `இவர்தான் ரியல் `பாகுபலி'' எனக் கொண்டாடுகிறார்கள் கர்நாடகாவின் சிவமோகா மக்கள். தன் தாய், தினமும் தண்ணீருக்காக அலைவதைக் காண சகித்துக்கொள்ள முடியாமல், தன் வீட்டுக்குப் பின்னால் தனி ஆளாக இறங்கி, கிணறு ஒன்றைத் தோண்ட ஆரம்பித்திருக்கிறார் 17 வயது இளைஞர் பவன். இரண்டு மாதக் கடும் உழைப்புக்குப் பிறகு, 53 அடியில் தண்ணீர் கொப்பளிக்க, ஊரே உற்சாகமாகிவிட்டது. `இவ்வளவு காலமாக என் அம்மா பட்ட கஷ்டத்துக்கு முன்னால, நான் பட்ட கஷ்டம் ஒண்ணும் பெருசு இல்லை' என்கிறார் பவன். 

பிட்ஸ் பிரேக்

ந்த ஊருக்குப் போனாலும் ஹோட்டல்களில் தங்குவதைத் தவிர்க்கிறார் ப்ரியங்கா சோப்ரா. `நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவதற்கு எனக்கு பயமாக இருக்கிறது. ரகசிய கேமராக்கள் எங்கே வேண்டுமானாலும் இருக்கலாம் எனச் சந்தேகப்படுகிறேன். மும்பையைத் தாண்டி எந்த ஊருக்குப் போனாலும் நண்பர்கள் வீட்டில்தான் தங்குகிறேன். இப்போது அடிக்கடி அமெரிக்கா செல்வதால், அங்கே சொந்தமாகவே வீடு வாங்க முடிவுசெய்துவிட்டேன்' என்கிறார் ப்ரியங்கா!

பிட்ஸ் பிரேக்

ந்தியாவில், 90-களின் முதல் சூப்பர் ஹீரோ சக்திமான். ஆள்காட்டி விரலை தலைக்கு மேல் தூக்கி பம்பரம்போல் சுழன்று, தீய சக்திகளிடம் இருந்து மக்களைக் காப்பாற்றும் அந்தச் சக்திமான், இப்போது மீண்டும்வருகிறார். ` `சக்திமான்' என்றாலே என் முகம்தான் மக்களுக்கு ஞாபகம் வரும். அதனால் அந்தக் கதாபாத்திரத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்' என தினமும் ஜிம்மில் தனது பழைய லுக்குக்காகப் போராடிக் கொண்டிருக்கிறார் முகேஷ் கண்ணா. இந்தச் சக்திமானுக்கு வயது 57.

பிட்ஸ் பிரேக்

`லண்டனின் முதல் முஸ்லிம் மேயராக’ப் பதவி ஏற்றுள்ளார் 44 வயதான சாதிக் கான். தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டு, 57 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றிபெற்றிருக்கிறார் சாதிக். இவரது பெற்றோர், பாகிஸ்தானில் இருந்து லண்டனில் குடியேறியவர்கள். `முஸ்லிம்கள் மீதான தேவையற்ற பயத்தை மக்கள் கைவிட வேண்டும். பயத்தால் எதையும் சாதிக்க முடியாது. கடந்த 40 ஆண்டுகளாகத் தீர்வுகாணப்படாமல் இருக்கும் வெளிநாட்டு மக்களின் பிரச்னைகளுக்கு, நான் தீர்வு கிடைக்கச் செய்வேன்' என நம்பிக்கையோடு சொல்கிறார் சாதிக் கான்.

பிட்ஸ் பிரேக்

ந்திராவில் இலவச மோர் வழங்கும் திட்டத்தைத் தொடங்கிவைத்து, அதற்கு 39 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறார் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு. ஆனால், இந்தத் திட்டத்துக்கு தனது உறவினரின் ஹெரிடேஜ் நிறுவனத்திடம் இருந்துதான் தயிர் வாங்க வேண்டும் என உத்தரவிட்டிருப்பது கடும் கண்டனங்களைக் கிளப்பியிருக்கிறது. `மோர் வழங்கும் திட்டம் ஏழைகளின் வளர்ச்சிக்கானதா அல்லது சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்துக்கான வளர்ச்சித் திட்டமா, மற்ற நிறுவனங்களில் இருந்து தயிர் வாங்கினால் அது மோர் ஆகாதா?' என எதிர்க்கட்சிகள் கொந்தளிக்கின்றன!

பிட்ஸ் பிரேக்

`எப்பவும் சீரியஸ் படங்களிலும் அவார்டு படங்களிலுமே நடித்துக்கொண்டிருக்கிறீர்களே, கமர்ஷியல் படங்களில் நடிக்க விருப்பம் இல்லையா?' எனக் கேட்க, `எனக்கு அந்த ஆசை இருக்கிறது. `சார்லீஸ் ஏஞ்சல்ஸ்'போல ரகளையாக ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என விரும்புகிறேன் என்கிறார் கல்கி கோச்சலின்.

பிட்ஸ் பிரேக்

பாலிவுட்டின் பயோபிக் ட்ரெண்டில் லேட்டஸ்ட், அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு. மராத்திய மொழி இயக்குநர் பர்மோட் கோர், கலாமின் வாழ்க்கையை இயக்குகிறார். `நான் ராமேஸ்வரம் சென்று கலாம் இல்லத்தை பார்த்து அவர் குடும்பத்தினருடன் இந்தப் படம் பற்றிப் பேசிவிட்டு வந்தேன். அவர் எழுதிய அனைத்துப் புத்தகங்களையும் வாங்கிப் படித்துக்கொண்டிருக்கிறேன். அவரது முழு வாழ்க்கையையும் இரண்டரை மணி நேரத்தில் கொண்டுவருவது சவால்தான். ஆனால், கலாமின் அர்ப்பணிப்பை அடுத்த தலைமுறைக்குச் சொல்லவேண்டிய கடமை எனக்கு இருக்கிறது' என்கிறார் இயக்குநர் பர்மோட். படத்தில் அப்துல் கலாமாக நடிக்கப்போவது இர்ஃபான் கான்!