பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்
பிரீமியம் ஸ்டோரி
News
பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்

பிட்ஸ் பிரேக்

அமிதாப் பச்சன், நவாஸுதின் சித்திக்கி, வித்யா பாலன்... என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கும் படம் `Te3n' (ஆமா, இதை எப்படி உச்சரிக்கிறது?). அமிதாப்புக்கு ஜோடி ஒரு பழையமாடல் பஜாஜ் ஸ்கூட்டர். படத்தின் போஸ்டர், ட்ரெயிலர் என அனைத்திலும் அமிதாப்புடன் நீல வண்ண ஸ்கூட்டரும் வர, இப்போது ஸ்கூட்டருக்கு செம டிமாண்ட். ஸ்கூட்டருக்குச் சொந்தக்காரர் மும்பையைச் சேர்ந்த சுஜித் நாராயண். அவரிடம் அந்த ஸ்கூட்டரை அமிதாப் ரசிகர்கள் விலைக்குக் கேட்டிருக்கிறார்கள். ஒருகட்டத்தில் விலை `ஒரு கோடி ரூபாய்' வரை எகிறியிருக்கிறது. `அந்த ஸ்கூட்டர் எனக்குப் பொக்கிஷம் மாதிரி. அதை விற்பனைக்கு அல்ல, இனி ஷுட்டிங்குக்கே கொடுப்பது இல்லை' எனக் கொந்தளிக்கிறார் சுஜித்!

பிட்ஸ் பிரேக்

நம்ம ஊரில் ஒரு பாலம் கட்ட எவ்வளவு நாட்கள் ஆகும்? முதலில் அதற்குத் திட்டம் போட்டு, டெண்டர் விட்டு, கட்டிங் கொடுத்து... என இரண்டு வருடமாவது இழுத்துவிடமாட்டோமா? சீனாவில் ஒரு பாலத்தை வெறும் 43 மணி நேரத்தில் கட்டி முடித்து மக்கள் பயன்பாட்டுக்குவிட்டிருக்கிறார்கள். சீனாவின் பீஜிங்கில் `சான்யூவன்' என்கிற இந்தப் பாலத்தை, பல்லாயிரம் தொழிலாளர்கள் இணைந்து உழைத்து, தரமாகவும் வேகமாகவும் கட்டி முடித்திருக்கிறார்கள். இதே கூட்டணி சில மாதங்களுக்கு முன்னர் சீனாவில் 57 மாடிக் கட்டடம் ஒன்றை வெறும் 19 நாட்களில் கட்டி சாதனை படைத்தது.

பிட்ஸ் பிரேக்

பாலிவுட்டின் லேட்டஸ்ட் பிரேக்அப் சுஷாந்த்-அங்கிதா ஜோடி. முயல்குட்டிகள்போல மும்பையை வலம்வந்த ஜோடியின் மேல் யார் கண்பட்டதோ, இரண்டுபேரும் முட்டிக்கொண்டு பிரிந்துவிட்டனர். தோனியாக நடித்துவரும் சுஷாந்த் சோகத்தில் மூழ்கியிருக்க, அங்கிதாவோ பிரேக்அப்பில் இருந்து சடாரென வெளியே வந்துவிட்டார். அவருடைய சமீபத்திய போட்டோஷூட் அதற்கு சாட்சியம் சொன்னது. இன்னொரு பக்கம், `இந்த பிரேக்அப் பற்றி மக்களும் மீடியாவும் ஓவராக டார்ச்சர் பண்ணுகிறார்கள்' என்று சுஷாந்த் தன் ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக் பக்கங்களை மூடிவைத்துவிட்டு, தவ வாழ்க்கைக்குப் போய்விட்டார்.

பிட்ஸ் பிரேக்

சமீபத்தில் சீனாவின் குவாங்டோங் பகுதியில் ஒரு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட இருபதாயிரம் பேரில், 12,000 பேர் ஓடும்போதே வாந்தியெடுத்து மயங்கி விழுந்திருக்கிறார்கள். காரணம்? அவர்களுக்கு கொடுக்கப்பட்ட சோப்பு பாக்கெட்டை, பிஸ்கட் என்று நினைத்து சாப்பிட்டதுதான். பாக்கெட்டில் ஆங்கிலத்தில் எழுதியிருந்ததாலும், அந்த சோப் பழங்களின் வாசனைகொண்டது என்பதாலும் அதை ஏதோ எனர்ஜி பிஸ்கட் என நினைத்து அத்தனை பேரும் தின்றுவிட்டு ஓடியிருக்கிறார்கள். ஆமாம், மாரத்தான் போட்டியில் எதுக்கு சோப்பு கொடுத்தாங்க?

பிட்ஸ் பிரேக்

இந்தியாவின் பாட்மின்டன் ஹீரோ கோபிசந்த்தின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. தெலுங்கிலும் இந்தியிலும் வரப்போகும் இந்தத் திரைப்படத்தை இயக்கப்போவது வித்தியாசமான படங்களுக்கு பெயர்போன பிரவீன் சட்டாரு. படத்தில் கோபிசந்தாக நடிக்கப்போவது சுதீர் பாபு. தெலுங்கில் சின்னச் சின்ன கேரக்டர்கள் பண்ணிக்கொண்டிருந்த இவருக்கு, சமீபத்தில் `பாகி' மூலம் பாலிவுட் வாய்ப்பு கிடைத்தது. அதில் கிடைத்த புகழில் இப்போது `கோபிசந்த்' வாய்ப்பு வந்திருக்கிறது. லவ் ஆல்!

பிட்ஸ் பிரேக்

`காக்காமுட்டை' ஐஸ்வர்யாவுக்கு அடுத்தடுத்து அருமையான புராஜெக்ட்ஸ். சில வாரங்களுக்கு முன்பு அர்ஜூன் ராம்பாலுடன் பாலிவுட்டில் ஜோடி சேர்கிற வாய்ப்பு வந்தது. இப்போது, நிவின் பாலியின் அடுத்த படத்தில் நாயகியாகியுள்ளார். மலையாள இயக்குநர் சித்தார்த்தா சிவா இந்தப் படத்தை இயக்குகிறார்.