Published:Updated:

மீண்டும் பிரியங்கா!

மீண்டும் பிரியங்கா!

மீண்டும் பிரியங்கா!
  • எம்.ஜி.ஆர். நடித்த 'எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தைத் தயாரித்த நாகி ரெட்டியாருக்கு அடுத்த வருஷம் 100-வது ஆண்டு. அவருடைய பேரன் வெங்கட்ரமணா ரெட்டி, தாத்தாவின் நினைவாக பிரமாண்டமான ஒரு படத்தை அஜீத்தை வைத்துத் தயாரிக்கிறார். படத்தை இயக்குவது யார் என்று விஷ்ணுவர்த்தனுடன் நடந்த போட்டியில் ஜெயித்து இருக்கிறார், 'சிறுத்தை’ சிவா.
  • '7ஆம் அறிவு’ முடித்த கையோடு அடுத்ததாக விஜய் நடிக்கும் பட வேலையில் விறுவிறுப்பாக இறங்கிவிட்டார் ஏ.ஆர்.முருகதாஸ். நவம்பர் மாசம் படப்பிடிப்பு தொடங்குகிறது. படத்தின் பெரும்பாலான காட்சிகள் மும்பையில் நடக்க இருக்கிறதாம். விஜய்யின் ஜோடியாக நடிக்கிறார், பிரியங்கா சோப்ரா.
மீண்டும் பிரியங்கா!
  • ##~##
    'ராதாவின் இரண்டாவது மகளும் நடிக்கப்போகிறார்...’ என்ற தகவல் பரவி இருப்பதைத் தொடர்ந்து ராதாவை போனில் பிடித்தோம். ''முதல் பொண்ணு கார்த்திகாவுக்கு நல்ல கதையைத் தேர்வு செய்வதற்கே நேரம் இல்லாமல் தவிக்கிறேன். இதுல ரெண்டாவது பெண்ணை எப்படி நடிக்கவைக்கிறது... பார்க்கலாம்!'' என்று சிணுங்குகிறார், அந்தக் கால அழகி ராதா அம்மையார்!
  • கடந்த 15 நாட்களுக்கு முன்பு 'பில்லா 2’ படத்துக்கான சண்டைக் காட்சியில் நடிக்கும்போது, வலது கையில் கட்டைச் சிலாம்பு குத்தி ரத்தம் வழிந்தது. உடனே பெயின் கில்லர் ஸ்பிரே அடிக்கப்பட, தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டார். உண்மை இப்படி இருக்க, மீடியாவில் வந்த பரபரப்பு செய்தியைப் பார்த்து, அஜீத்தே சிரித்துவிட்டாராம்.
  • ராதாரவி, வாகை சந்திரசேகர் இருவரும் வெவ்வேறு கட்சிக் கூடாரத்தில் இருந்தாலும், நெருங்கிய 'வாடா... போடா...’ நண்பர்கள். ராதாரவி மகன் கல்யாணத்தில் சந்திரசேகர் எல்லோரையும் முன்நின்று வரவேற்றுக்கொண்டு இருந்தார். ஜெயலலிதா வந்தபோது மட்டும், அந்த இடத்தைவிட்டு நைசாகக் நழுவிக்கொண்டார்.
மீண்டும் பிரியங்கா!
மீண்டும் பிரியங்கா!