Published:Updated:

``பாம்பு பயம்; பிடிக்காத ஸ்நாப்சாட், நிவின் பாலி சிரிப்பில் நேர்மை..." - ப்ரியா ஆனந்த் ஷேரிங்ஸ்.

``பாம்பு பயம்; பிடிக்காத ஸ்நாப்சாட், நிவின் பாலி சிரிப்பில் நேர்மை..." - ப்ரியா ஆனந்த் ஷேரிங்ஸ்.
``பாம்பு பயம்; பிடிக்காத ஸ்நாப்சாட், நிவின் பாலி சிரிப்பில் நேர்மை..." - ப்ரியா ஆனந்த் ஷேரிங்ஸ்.

`வாமனன்' படத்தின் மூலம் அறிமுகமாகி இன்று தமிழ், தெலுங்கு, மலையாளம் எனப் பல மொழிகளில் நடித்து வருகிறார், ப்ரியா ஆனந்த். தற்போது, நிவின் பாலியுடன் 'காயங்குளம் கொச்சுண்ணி' படத்தில் பிஸியாக இருப்பவரிடம் ஒரு ஜாலி சாட்டிங். 

எந்த விஷயத்திற்கு அதிகம் பயப்படுவீங்க ?

``எனக்கு ஒஃபிடியோஃபோபியா Ophidiophobia (பாம்பைக் கண்டால் பயம்). எவ்வளவு பெரிய பட்ஜெட் படத்துல நடிக்க வாய்ப்பு வந்தாலும் பாம்பு வர்ற மாதிரியான சீன் இருந்தா சத்தியமா நடிக்கமாட்டேன். அது என்னவோ தெரியலை சின்ன வயசுல இருந்தே பாம்புனா பயம். டிவியில்கூட பாம்பைக் காட்டுனா பார்க்கமாட்டேன். வயசு அதிகமாக அதிகமாக பயமும் அதிகமாகிட்டே இருக்கு."

வீட்ல இருக்கிறவங்க என்ன வார்த்தை சொல்லி உங்களைத் திட்டுவாங்க, உங்களுக்குக் கோபம் வந்தா என்ன வார்த்தை முதல்ல வரும்? 

``வீட்ல என்னை இப்போல்லாம் எதுக்குத் திட்டுறாங்க...? ஸ்கூல் படிக்கும்போது மார்க் சரியா வாங்கலைனா, சரியா படிக்கலைனா `விரக்தியா ஃபீல் பண்ணுவாங்க'. எனக்குக் கோபம் வந்தா என் வாயிலிருந்து வர்ற முதல் வார்த்தை 'இடியட்'தான்."   

சோஷியல் மீடியா ஆப்களில் உங்களை இரிடேட் பண்றது எது? 

" 'ஸ்நாப் சாட்'தான் என்னைக் கடுப்பேத்தும். காரணம், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மாதிரியான ஆப்கள்ல நாம நினைக்கிற விஷயத்தை அப்லோட் செய்யலாம், ஷேர் பண்ணலாம். ஆனா, இதுல ஒவ்வொரு ஃபில்டரா போட்டுப்போட்டு போட்டோஸ் அப்லோடு பண்ணிட்டே இருப்பாங்க. அவங்க அழகை மத்தவங்க பார்க்கணும்னு மட்டும் நினைச்சு போட்டோஸ் போடுறதுனால, ஸ்நாப்சாட் எனக்குப் பிடிக்கவே பிடிக்காது."

முதல்ல க்ளாஸைக் கட் அடிச்ச அனுபவம் ஞாபகம் இருக்கா? 

"சரியா சொல்லணும்னா ஆறாவது படிக்கும்போதுதான் முதன்முதல்லா நானும் என் ஃப்ரெண்டும் சேர்ந்து க்ளாஸ் கட் அடிச்சோம். எங்க ஸ்கூலுக்கு எதிர்லதான் ஃப்ரெண்டோட பாட்டி வீடு இருக்கு. ஸ்கூல் வாட்ச்மேன்கிட்ட சொல்லிட்டு, நாங்க ரெண்டுபேரும் அவங்க பாட்டி வீட்டுக்குப் போயிடுவோம்."

வாழ்க்கையில நடந்த சந்தோஷமான தருணமும், பாராட்டும்? 

"என் வாழ்க்கையில எனக்கு ஏற்பட்ட சந்தோஷமான தருணம், ஶ்ரீதேவி மேடம்கூட நான் நடிச்சதுதான். நான் சின்ன வயசுல இருந்தே அவங்களோட பயங்கரமான ரசிகை. சினிமா, பெர்ஷனல்னு ரெண்டுலேயும் எனக்கு நெகிழ்ச்சியான தருணம் அதுதான். அந்தப் படத்துக்கு எனக்கு கிடைச்ச பாராட்டு, என்னைக்கும் மறக்கமுடியாது!" 

ஒரு வரம் கொடுக்குற சக்தி உங்களுக்குக் கிடைக்குது; என்ன வரம் கொடுப்பீங்க?  

"பெண்களுக்குப் பாதுகாப்பு இருக்கணும், ஆண்களுக்கு இருக்குற சுதந்திரத்தைப் பெண்களுக்கும் கொடுக்கணும். அவ்ளோதான்"

சமீபத்துல பார்த்த மொக்கைப் படம்? 

"நான் அதிகமா சினிமாவே பார்க்கிறதில்லை. ஒரு ட்ரெண்டிலேயே தேங்கி நின்னுட்டு இருக்கு, தமிழ்சினிமா. அந்த செட்டப் மாறுச்சுனா, செம இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்!"  செம இன்ட்ரஸ்டிங்கா இருக்கும்."

இனிமே இப்படிப் பண்ணவேகூடாதுனு நீங்க நினைக்கிறது என்ன? 

``பிடிக்காத ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கிறது. அப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கு. இனிமே இப்படி பண்ணவே கூடாதுனு உறுதியா இருக்கேன்"

உங்க கார், போன் மாடல் என்ன? 

``கார் - ரேஞ்ச் ரோவர், போன் - ஐபோன் 10. "

உங்களோட ப்ளஸ்?

"டிஸிப்ளீன், பன்ச்சுவாலிட்டி"

உங்களை கூகுள் பண்ணச் சொன்னா, முதல்ல என்ன டைப் பண்ணுவீங்க?

"இப்போ கொஞ்ச காலமா நிறைய புத்தகங்கள் படிச்சுட்டு இருக்கேன். ஸோ, புக்ஸ் பெயரை டைப் பண்ணிதான் பார்ப்பேன்"

மாத்திக்கணும்னு நினைக்கிறது? 

"எனக்கு பிரியாணி ரொம்பப் பிடிக்கும். ஆனா, இப்போ ப்யூர் வெஜிடேரியனா மாற முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன். ஆனா, பிரியாணி சாப்பிடாம இருக்கிறதுக்கு கஷ்டமா இருக்கு."

தமிழ், மலையாளம், கன்னடம் இந்தப் படங்கள்ல உங்களுக்கு எது கம்ஃபர்டபிளா இருக்கு?   

``கண்டிப்பா, தமிழ் இன்டஸ்ட்ரிதான். மலையாளத்துல நான் நிறைய என்னை இம்ப்ரூவ் பண்ணிக்கணும்னு நினைக்கிறேன். கன்னடப் படம் ஷூட்டிங் செம ஜாலியா இருக்கும். பந்தாவே இருக்காது."

நிவின் பாலியுடன் நடிக்கும்? 

``வித்தியாசமான ஷூட்டிங் அனுபவத்தை இந்தப் படம் எனக்குக் கொடுத்திருக்கு. லொகேஷனே சூப்பரா இருக்கும். நிவின் நேச்சுரலான நடிகர். அவர் சிரிப்புல ஒரு ஹானஸ்ட் தெரியும். 'காயங்குளம் கொச்சுண்ணி' படம் ரொம்ப சீரியஸான படம். ஆனா, ஷூட்டிங் செம ஜாலியா இருக்கும்."