Published:Updated:

மிஸ்டர் மியாவ்: ஆந்திர பந்தம்!

மிஸ்டர் மியாவ்: ஆந்திர பந்தம்!
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்: ஆந்திர பந்தம்!

சினிமா

மிஸ்டர் மியாவ்: ஆந்திர பந்தம்!

சினிமா

Published:Updated:
மிஸ்டர் மியாவ்: ஆந்திர பந்தம்!
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்: ஆந்திர பந்தம்!
மிஸ்டர் மியாவ்: ஆந்திர பந்தம்!

விஜய்யின் ‘தெறி’ படத்தில் மகேந்திரன் வேஷத்துக்கு நடிக்க அழைத்தபோது ‘நோ’ சொன்ன பாரதிராஜா, இப்போது ‘குரங்கு பொம்மை’ படத்தில் விதார்த்துக்கு அப்பாவாக நடிக்க ‘எஸ்’ சொல்லி இருக்கிறார். வில்லன் கேரக்டரில் தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் துணைத்தலைவர்
பி.எல்.தேனப்பன் நடிக்கிறார்.

மிஸ்டர் மியாவ்: ஆந்திர பந்தம்!

கேரளாவைச் சேர்ந்த விஜய் ரசிகர் அவர். கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வையை இழந்து வருகிறார். பார்வையை இழப்பதற்குள் விஜய்யை ஒரு தடவை நேரில் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறார். அதைக் கேள்விப்பட்ட விஜய், அவரை அழைத்து அவருடன் போட்டோ எடுத்து மகிழ்ச்சிப்படுத்தியிருக்கிறார்.

சூப்பர் ஸ்டாரின் கபாலியில் நடித்துள்ள ராதிகா ஆப்தேவுக்கு இந்தியின் முன்னணி இயக்குநர்கள் சிலரிடமிருந்தும் அழைப்பு வந்திருக்கிறதாம். நாயகியை மையப்படுத்திய கதையொன்றில் நடிக்க, இயக்குநர் மதுர் பண்டார்கர் அவரை அணுகியிருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்: ஆந்திர பந்தம்!

‘பில்லா 2’ படத்துக்காக ஹெலிகாப்டரில் தொங்கி சண்டைக்காட்சியில் நடித்துக் கொடுத்தார் அஜித். ‘இருமுகன்’ படத்துக்காக விக்ரமும் ஹெலிகாப்டரில் தொங்கியபடியே சண்டைக்காட்சியில் நடிக்க இருக்கிறாராம்.

இது காதல் சீஸன். நாகார்ஜுனா மகன் நாக சைதன்யாவை சமந்தா காதலிக்கிறார், விரைவில் திருமணம் என்று செய்தி. தெலுங்கு நடிகரும், சிரஞ்சீவியின் தங்கை மகனுமான சாய் தரண் தேஜுக்கும், நம்ம ஊரு ரெஜினா கெஸாண்ட்ராவுக்கும் காதல். விரைவில் திருமணம். பரபரக்கிறது ஆந்திரம். அடுத்து திரிஷா, ராணா கல்யாணம் நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

மிஸ்டர் மியாவ்: ஆந்திர பந்தம்!

மியாவ் பதில்கள்

ஆன்மிகப் பாதைக்குத் திரும்புகிறாராமே தமன்னா?

காஜல் அகர்வால், அனுஷ்காவுடன் கடுங்கோபத்தில் இருந்தவர், திடீரென அவர்களிடம் பாசமழை பொழிவதைப் பார்த்தால்... அப்படித்தான் தெரிகிறது!

‘லட்சுமி’கரமான பெண்தான் எனக்கு மனைவியாக வருவார் எனச் சொல்லியிருக்கிறாரே விஷால்?

லட்சுமி மேனன்... வரலட்சுமி... இப்படி குழப்பிவிட்டாரே!

வடிவேலு மீண்டும் காமெடியனாக நடிக்கச் சம்மதம்னு சொல்லிட்டாராமே?

வடிவேலுவை வெச்சு வடிவேலுதானே காமெடி பண்ண முடியும்?