Published:Updated:

பிப்.2 ல் 'விஸ்வரூபம்' டி.டி.எச்.சில் ஒளிபரப்பு: கமலஹாசன் அறிவிப்பு

பிப்.2 ல் 'விஸ்வரூபம்' டி.டி.எச்.சில் ஒளிபரப்பு: கமலஹாசன் அறிவிப்பு
பிப்.2 ல் 'விஸ்வரூபம்' டி.டி.எச்.சில் ஒளிபரப்பு: கமலஹாசன் அறிவிப்பு

சென்னை: இம்மாதம் 25 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள 'விஸ்வரூபம்' திரைப்படம், பிப்ரவரி  2 ஆம் தேதியன்று டி.டி.எச். மூலம்  ஒளிபரப்பாகும் என்று நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

மேலும், எந்தெந்த டி.டி.எச். சேவைகளில் இந்த படம் ஒளிபரப்பாகும் என்பதை விரைவில் அறிவிக்க உள்ளதாகவும், அத்துடன் டிடிஹெச் மூலம் தொலைக்காட்சியில் விஸ்வரூபம் படத்தை பார்ப்பதற்கான கட்டணத்தை குறைக்க ஆலோசித்து வருவதாகவும் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மூன்று நேரங்களில் 'விஸ்வரூபம்' படத்தை ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாகவும், இதில் ஏதேனும் ஒரு நேரத்தை பார்வையாளர்கள் தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

##~~##
முன்னதாக 'விஸ்வரூபம்' திரைப்படத்தை திரையங்குகளில் வெளியாகும் முன்னர்  டி.டி.எச். மூலம் ஒளிபரப்ப,திரையங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து, அப்படத்தை திரையங்குகளில் திரையிடமாட்டோம் என அறிவித்து இருந்தனர்.
இதனைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கு பின்னர் இம்மாதம் 25 ஆம் தேதியன்று இப்படம் முதலில் திரையரங்குகளில் வெளியாகும் என கமலஹாசன் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.