பிரீமியம் ஸ்டோரி
பிட்ஸ் பிரேக்

தய அறுவைசிகிச்சை காரணமாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிஃப் ஓய்வில் இருக்க, நிழல் பிரதமராக இருப்பவர் அவரது மகள் மரியம் நவாஸ். 43 வயதான மரியம்தான் பாகிஸ்தானுக்கு வரும் வெளிநாட்டுத் தூதுவர்களைச் சந்திப்பது, கட்சியில் முக்கிய முடிவு எடுப்பது என பரபரப்பாக இருக்கிறார். `2018-ம் ஆண்டு தேர்தலில் இம்ரான்கானைச் சமாளிக்க மகள் மரியம் நவாஸே சரியான சாய்ஸாக இருப்பார் என்பதால், அரசியலில் மகளை முன்னிலைப்படுத்துகிறார் நவாஸ் ஷெரிஃப்' என்கிறது கட்சித்தலைமை. `அப்பா ஓ.கே சொன்னால் 2018-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தயாராகவே இருக்கிறேன்' என்று மரியமும் ரேஸுக்கு ரெடியாகிவிட்டார்!

பிட்ஸ் பிரேக்

ஆர்குட், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என எது வந்தாலும் முதலில் சிம்பு அங்கே இருப்பார். சோஷியல் மீடியாவின் லேட்டஸ்ட் அறிமுகமான பெரிஸ்கோப்பில் கடந்த வாரம் லைவ் சாட்டில் வந்தார் சிம்பு. கிட்டத்தட்ட 40 நிமிடங்களுக்கு ரசிகர்களின் கேள்விகளுக்கு சளைக்காமல், செம கேஷுவலாக பதில் சொன்னார். பேச்சுலர் பாய்ஸுக்கு அட்வைஸ், காதல், கல்யாணம், பீப் சாங்... என எல்லா கேள்விகளுக்கும் பதில் சொன்னவர், சர்ப்ரைஸாக ரஜினி, அஜித்துக்கு அடுத்து, தான் `பில்லா’ படத்தில் நடிக்க இருப்பதாகச் சொல்ல ஆன்லைனில் #பில்லா2018 ட்ரெண்டிங் ஆனது!

பிட்ஸ் பிரேக்

நான்காவது முறையாக ஃப்ரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் பட்டத்தை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட செரீனா வில்லியம்ஸைத் தோற்கடித்து, சாம்பியன் பட்டத்தைத் தட்டியிருக்கிறார் ஸ்பெயினின் முகுருஸா. 22 வயதான முகுருஸாவின் உயரம் 6 அடி என்பதால், ஹைஸ்பீடு ஏஸ்களால் எதிரில் விளையாடும் வீராங்கனைகளைத் தெறிக்கவிடுகிறார். ஃப்ரெஞ்சு ஓப்பன் டென்னிஸில் முதல் போட்டியில் இருந்து சாம்பியன் பட்டம் வெல்லும் வரை ஒரே ஒரு செட்டில் மட்டுமே தோல்வியடைந்திருக்கிறார் முகுருஸா. `அடுத்த 10 ஆண்டுகளுக்கு இவர்தான் டென்னிஸ் உலகை ஆள்வார்' என்கிற கணிப்புகளுக்கு இடையே நம்பர் 1 இடத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார் முகுருஸா.

பிட்ஸ் பிரேக்

தெருக்களில் விளையாடும் `கல்லி கிரிக்கெட்'போல, கூடைப்பந்தாட்ட மைதானங்களில் நடைபெறும் கால்பந்து போட்டிக்கு `ஃபுட்ஸால்' எனப் பெயர். இப்போது கால்பந்து விளையாட்டில் கலக்கிக்கொண்டிருக்கும் மெஸ்ஸி, ரொனால்டோ, ரூனே என அனைவருமே ஃபுட்ஸால் விளையாடி வந்தவர்கள்தான். இந்த ஃபுட்ஸால் விளையாட்டு லீக், வரும் ஜூலை மாதம் இந்தியாவில் நடைபெற இருக்கிறது. ஐ.பி.எல்., ஐ.எஸ்.எல் போல சென்னை, பெங்களூர், மும்பை என மொத்தம் 8 அணிகள் இதில் மோதவிருக்கின்றன. இதற்கான தொடக்கப் பாடலை கோஹ்லி பாட, இசையமைத்திருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான்!

பிட்ஸ் பிரேக்

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க்கின் ட்விட்டர் மற்றும் பின்ட்ரஸ்ட் பாஸ்வேர்டுகள் ஹேக் செய்யப்பட்டுவிட்டன என்பதுதான் கடந்த வார ஆன்லைன் வைரல். ஹேக் செய்யப்பட்டதோடு மட்டும் அல்லாமல் மார்க் ஸூக்கர்பெர்க் `DaDaDa’ என்கிற பாஸ்வேர்டைத்தான் உபயோகித்தார் என்கிற பாஸ்வேர்டு ரகசியத்தையும் உடைத்துவிட்டது ஹேக் செய்த `அவர்மைன்' என்னும் ஹேக்கர்ஸ் டீம். ஹேக் செய்யவே முடியாது என்று கெத்துகாட்டும் பிரபலங்களின் சமூக வலைதளப் பக்கங்களை `சும்மா ஜாலிக்காக' ஹேக் செய்யும் இந்த டீம், ட்விட்டரில் அடுத்து யாருடைய அக்கவுன்ட்டை ஹேக் செய்யலாம் என போட்டி நடத்திக்கொண்டிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு