Published:Updated:

கேபிள் கலாட்டா!

கேபிள் கலாட்டா!
பிரீமியம் ஸ்டோரி
கேபிள் கலாட்டா!

‘‘மணியான புருஷன் கிடைச்சாச்சு!’’

கேபிள் கலாட்டா!

‘‘மணியான புருஷன் கிடைச்சாச்சு!’’

Published:Updated:
கேபிள் கலாட்டா!
பிரீமியம் ஸ்டோரி
கேபிள் கலாட்டா!
கேபிள் கலாட்டா!

விஜய் டி.வி ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் ‘மைனா’ கேரக்டர்; அதே சேனலின் ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் நடுவராக இருந்து சிறப்பித்தார். அத்துடன், ‘வம்சம்’ சீரியலில் பரபரப்பாக இருப்ப தோடு, ‘ஒருநாள் கூத்து’ திரைப்படத்திலும் நடித்து அசத்திய நந்தினி, இவற்றுக்கெல்லாம் நடுவில் தன் திருமணத்தை அதிக பரபரப்பில்லாமல் முடித்திருக்கிறார்.

‘‘மாப்பிள்ளை பேரு கார்த்திகேயன். செலிப்ரிட்டி ஜிம் டிரெயினர். காதலிக்க ஆரம்பிச்ச நாலாவது நாள் எங்க வீட்டுல வந்து பொண்ணு கேட்டிருச்சு பயபுள்ள. எல்லாம் சுபம். அப்புறம் என்னத்துக்கு காத்திருக்க.! உடனே நிச்சயதார்த்தம், அடுத்த நாளு கல்யாணம். மதுரையில தடபுடலா நடந்துருச்சுல்ல! தாலி கட்டுன கையோட துபாய்ல வேலை இருக்குனு கிளம்பிப் போயிட்டாரு. தலைவனைப் பிரிஞ்ச தலைவியா நான் சோகத்துல இருக்கேன். கொஞ்ச நாள் கழிச்சு அவர் ஊர்ல இருந்து வந்தவுடனே ரிசப்ஷன் வெச்சுருவோம். ஆனா, அதுக்கான வேலைகள்தான் இன்னும் ஆரம்பிக்காம கெடக்கு. கார்த்தி இருக்க கவலை ஏன்? எல்லாம் அவர் பார்த்துக்குவாரு.

செம கேரக்டருங்க என் வீட்டுக்காரரு. ‘நான் போன ஜென்மத்துல செஞ்ச புண்ணியம்தான் இப்படி ஒரு புருஷன் கிடைச்சது’னு எல்லாம் யாராச்சும் சொன்னா, ‘ரொம்ப ஓவரு’னு அவங்களைப் பார்ப்பேன். இப்போ அதையேதான் நானும் சொல்றேன். பாருங்க, கன்னமெல்லாம் செவக்குது! எனக்கு ஒண்ணுனா பதறிடுவாரு. நந்தினியைக் கல்யாணம் பண்ணிட்டு கேமராவைப் பார்க்காம இருக்க முடியுமா? ஜோடியா, ஜீ தமிழ் ‘மிஸ்டர் அண்ட் மிசஸ் கில்லாடிகள்’ நிகழ்ச்சியில் கலக்குறோம். பாருங்க, பாராட்டுங்க, ஆசீர்வாதம் பண்ணுங்க!’’

வீட்டுல மீனாட்சி ஆட்சிதானா?!

‘வள்ளி’ 1000

ன் டி.வி-யின் ‘வள்ளி’ சீரியல் 1000 எபிசோடுகளை எட்டியிருக்கிறது. சந்தோஷத்தில் இருக்கிறார் `சரிகம’ நிறுவனத்தின் தயாரிப்பு மேலாளர் குமார்.

கேபிள் கலாட்டா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

‘‘புதுசு புதுசா சேனல்கள், 100-க்கும் மேலான சீரியல்கள். இதுக்கு நடுவுல ஒரு சீரியலை ஹிட் பண்ணி, அதை 1000 எபிசோட் எடுத்துட்டுப் போறது ரொம்பவே சவாலான விஷயம். அதை நாங்க சாதிச்சிருக்கோம். இதை சின்னக் கொண்டாட்டமா முடிச்சுட முடியுமா என்ன? எங்களோட ‘சந்திரலேகா’, ‘வள்ளி’, ‘பைரவி’ இந்த மூணு சீரியல்கள்லயும் நடிக்கிற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள்னு எல்லாரையும் ஒருங்கிணைச்சு ஒரு நிகழ்ச்சி நடத்தப்போறோம். அதில் அவங்க எல்லோரும் தங்களோட சிறப்புத் திறமைகளை வெளிப்படுத்த இருக்காங்க. எங்க சீரியல்களுக்கு ஆதரவு கொடுத்துட்டு இருக்கிற மக்களுக்கும், சன் டி.வி-க்கும் இந்த நேரத்தில் எங்களோட நன்றிகளைச் சொல்லிக்கிறோம்!’’

டீம் வொர்க்!

ஸ்மார்ட் ஜாஸ்!

ஜாஸ் ஜென்னிங்ஸ் (Jazz Jennings)... ஜான்ஸன் அண்ட் ஜான்ஸன் நிறுவனத்தின் ‘க்ளீன் அண்ட் க்ளியர்’ வரிசை அழகு சாதனப் பொருட்களின் விளம்பர மாடல் மற்றும் விளம்பரத் தூதர். விளம்பரங்களில் நாம் பார்க்கும் இந்த 16 வயது அழகுப் பெண், ஒரு திருநங்கை. ஓரினச்சேர்க்கை, இனப்பாகுபாடு என சமூகத்தின் பல பிரச்னைகளுக்கும் குரல்கொடுத்து வருகிறார். `யூடியூப்’பில் திருநங்கைகள் குறித்தும் அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும் பேசும் 11 பகுதிகள் கொண்ட இவரின் ‘ஐயம் ஜாஸ்’ வீடியோக்களுக்கும் ரசிகர்கள் அதிகம்.

கேபிள் கலாட்டா!

அக்டோபர் 2000-ல் பிறந்த ஜாஸ் மிகச்சிறு வயதிலேயே திருநங்கையாக மாறியவர். அவருடைய அப்பா, அம்மாவும் ஜாஸின் மனதைப் புரிந்துகொண்டு அவரை ஒரு பெண்ணாகவே உலகுக்கு அறிமுகப்படுத்தியதில் இருந்து, ஜாஸின் ஒவ்வொரு முயற்சிக்கும் பக்கபலமாக நிற்கிறார்கள். இளம் வயதிலேயே பாலியல் சார்ந்த விஷயங்களைத் தைரியமாகப் பேசி, அதற்குத் தீர்வுகளும், ஆலோசனைகளும் கொடுத்துவரும் ஜென்னிங்ஸ், ‘டைம்’ பத்திரிகையின் ‘100 எடுத்துக்காட்டுக்குரிய மனிதர்கள்’ பட்டியலில் இடம் பிடித்தவர். அமெரிக்காவில் பிறந்த ஜாஸ் தற்போது உலகம் முழுக்க தொலைக்காட்சி மற்றும் யூடியூப் என செம வைரல்.

சல்யூட் ஜாஸ்!

மனம் போல வாழ்க்கை!

கேபிள் கலாட்டா!

நியூஸ் 7 சேனலில் ‘கேட்ஜெட் யுகம்’, ‘வலையில் கிடைத்தவை’ நிகழ்ச்சிகளால் பாமர மக்களையும் டிஜிட்டல் யுகத்துக்கு அப்டேட் செய்கிறார், தொகுப்பாளினி அனிதா.

‘‘பள்ளியில் படிக்கும்போதே என் தமிழ் ஆர்வம் ஆரம்பமாயிடுச்சு. பிரேயர்ல நான்தான் செய்திகள் வாசிப்பேன். அதுதான் என்னோட நியூஸ் ரீடர் ஆசைக்கு பிள்ளையார்சுழி. ஆனா, வீட்டுல என்னை இன்ஜினீயரிங்கில் சேர்த்துவிட்டுட்டாங்க. காலேஜ்ல மேடைகளில் கலக்கினேன். இறுதியாண்டு படிச்சப்போ, மகளிர் தின கருத்தரங்குல நான் பேசிய பேச்சுக்கு ஆடிட்டோரியம் அதிர கைதட்டல் கிடைச்சப்போ, ‘இனி மீடியாதான் எதிர்காலம்’னு தீர்க்கமா முடிவெடுத்துட்டேன். ‘நியூஸ் 7’ தொலைக்காட்சியில செய்தி வாசிப்பாளரா வாய்ப்புக் கிடைக்க, வாழ்க்கை விரும்பியபடியே போயிட்டிருக்கு. ஒருநாள் பிரவுஸ் செய்துட்டு இருந்தப்போ பார்த்த ஃபன்னி வீடியோஸ் என்னை ரொம்பவே சிரிக்கவைக்க, தொடர்ந்து அதுமாதிரியான வீடியோக்களைத் தேடித் தொகுத்து ‘வலையில் கிடைத்தவை’ மற்றும் ‘கேட்ஜெட் யுகம்’ நிகழ்ச்சிகளின் மூலமா பார்வையாளர்களை சென்றடைஞ்சு இருக்கேன்!’’

கூகுள் கூகுள் பண்ணிப் பார்க்கும் பொண்னு!

விவரம் தெரிந்த `விஜே’!

சிந்துஜா... சுட்டி டி.வி-யின் `விஜே’. ‘‘பி.காம் இறுதியாண்டு மாணவி’’ என்று கெத்து காட்டுகிறார்.

‘‘எல்லார்கிட்டயும் உடனே ஃப்ரெண்ட் ஆயிடுவேன். அதுதான் என் ப்ளஸ். காலேஜ், சுட்டி டி.வி-னு வாழ்க்கை ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு. என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாம், ‘குழந்தைகளை எப்படித்தான் சமாளிக் கிறியோ?’னு கேட்பாங்க. ஆனா, அவங்க போக்கிலேயே போய், அவங்களுக்குப் பிடிக்கிற மாதிரி பேசினா, அப்புறம் நாம சொல்றதை எல்லாம் அவங்க கேட்பாங்க.

கேபிள் கலாட்டா!

மாலை நேரக் கல்லூரியில் படிக்கிறதால, காலையில சேனல் வேலையை முடிச்சிட்டு, மதியம் கிளாஸுக்குப் போயிடுவேன். இப்போதைக்கு ‘சுட்டி நியூஸ்’, ‘ஜில்லுன்னு ஒரு சம்மர்’ நிகழ்ச்சிகள் பண்ணிட்டு இருக்கேன். அம்மா, அப்பா ரெண்டு பேரும் வேலைக்குப் போறாங்க. எனக்கு பிடிச்சதை செய்ற சுதந்திரம் கொடுத்திருக்காங்க. அதேசமயம், எனக்கும் என்னோட எல்லைகள் தெரியும். கார்ப்பரேட் ஆபீஸ்ல உக்காந்து அந்த பிரஷர்ல வேலை செய்யுறதை எல்லாம் என்னால நினைச்சுப் பார்க்கவே முடியல. கிரியேட்டிவா, வித்தியாசமா வேலை செய்யணும். அதனால, மீடியாதான் என் எதிர்காலமா இருக்கும்னு நினைக்கிறேன்!’’

சுட்டி... கெட்டி!

ரிமோட் ரீட்டா

படங்கள்: எம்.உசேன், ரா.வருண் பிரசாத்

வாசகிகள் விமர்சனம்

ஒவ்வொன்றுக்கும் பரிசு: ரூ 150

இல்லறம்... இனிது!

``ஒரு சிறு பிரச்னையால் மனைவி சமைத்ததை கணவர் சாப்பிடாமலிருக்க, மனைவியும் அதை சாப்பிடவில்லை. இரவில், பசி எடுக்கவே மனைவி செய்து வைத்திருந்த சப்பாத்தியை சாப்பிடும் கணவர், மனைவியை பாராட்டுகிறார். இதை பார்த்த மனைவி அதை பெருமையாக கூற, கணவர் தன் கோபம் மறந்ததுடன் மனைவியை அமர வைத்து சப்பாத்தியை ஊட்டிவிடுகிறார். அப்போது, `உன் மனசு போலவே சப்பாத்தியும் சாஃப்ட்டாக இருக்கிறது’ என்று பாராட்டுகிறார். இது ஒரு சப்பாத்தி மாவு விளம்பரம்தான் என்றாலும் ஆத்மார்த்தமான தம்பதிகளுக்கிடையே சிறு பிரச்னை வந்தாலும் அவை பனி போல விலகிவிடும் என்ற இல்லற அன்பை விளக்குகிறது’’ என வியந்து பாரட்டுகிறார் சென்னை பெரம்பூரில் இருந்து பி.கே.பிரேமிகா.

அட்டென்ஷன் ப்ளீஸ்..!

``ஜீ தமிழ் சேனலில் அஞ்சறைப்பெட்டி என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் தொகுப்பாளினி தன் தலைமுடியை அடிக்கடி கையினால் கோதிவிடுகிறார். அதே கையால் சமையலுக்குத் தேவையான பொருட்களை எடுத்துப்போடுவது பார்ப்பவர்களுக்கு மிகுந்த சங்கடத்தை தருகிறது. நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் இதனை கவனிக்க வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுக்கிறார் வேலூரில் இருந்து எஸ்.திவ்யா.

பிரித்து வழங்கலாமே..!

``வசந்த் டி.வி-யில் பாலியல் பிரச்னைகள் பற்றிய சந்தேகங்களை தீர்த்து வைக்கும் நோக்கில் `ரகசியக் கேள்விகள்’ என்னும் நிகழ்ச்சி ஒளிபரப்பப்படுகிறது. இதில் நேயர்களின் கேள்விகளுக்கு டாக்டர் பதில் அளிப்பதோடு, சில முக்கிய விஷயங்கள் தொடர்பாக உலக அளவில் நடந்த ஆராய்ச்சிகள் பற்றியும் பேசுகிறார். ஆனால், டாக்டர் பேச ஆரம்பித்த சில நிமிடங்களில் தொலைபேசி அழைப்பு வர, அதற்கு பதில் அளிக்கிறார். அதன்பிறகு திருவிளையாடல் தருமி போல `நான் எங்கே விட்டேன்’ என்று மீண்டும் ஆரம்பிப்பார். அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் தொலைபேசி அழைப்பு வரும். அதற்கு பதில்  கூற, அவர் பேச வந்த விஷயத்தை தெளிவாக பேசமுடியாமல் போய்விடுகிறது. இத்தகைய சிக்கலைத் தீர்க்க கேள்வி-பதில் நேரம் என்று தனியாகவும், டாக்டரின் ஆலோசனை நேரம் என்று தனியாகவும் ஏற்பாடு செய்தால் நிகழ்ச்சி எல்லோருக்கும் பயன்படும்’’ என்று கோரிக்கை வைக்கிறார்  பாளையங்கோட்டையில் இருந்து நா.செண்பகா.