Published:Updated:

என்.டி.ஆர் அவர்களின் வாழ்க்கைப் படத்தில் நடிக்க வித்யா பாலன் தேர்வு!

தார்மிக் லீ
என்.டி.ஆர் அவர்களின் வாழ்க்கைப் படத்தில் நடிக்க வித்யா பாலன் தேர்வு!
என்.டி.ஆர் அவர்களின் வாழ்க்கைப் படத்தில் நடிக்க வித்யா பாலன் தேர்வு!

மறைந்த நடிகரும், ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவின்(என்.டி.ஆர்) வாழ்க்கை படமாக்கப்பட உள்ளது. கடந்த மார்ச் 29-ம் தேதியன்று ராமச்சந்திரா ஸ்டுடியோஸில் ஹைதராபாத்தில் படத்தை வெளியிடுவது குறித்து நிகழ்ச்சி நடந்தது. அதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். 

அதில் வெளிவந்த தகவலின்படி முக்கிய வேடத்தில் வித்யா பாலனும், பரேஷ் ராவலும் அப்படத்தில் நடிக்க  உள்ளனர். வித்யா பாலனை என்.டி.ஆரின் மனைவி கதாபாத்திரத்துக்கும், பரேஷ் ராவலை ஆந்திராவின் முன்னாள் முதலமைச்சரான நடேந்தலா பாஸ்கர ராவ் கதாபாத்திரத்துக்கும் அணுக உள்ளனர். இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவரவில்லை. பரேஷ் ராவல் ஏதேனும் ஒரு முக்கிய வேடத்தில் கெஸ்ட் ரோலில் வருவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் தேஜா இயக்க உள்ளார். படக் குழுவினர் இந்தப் படத்தை இரண்டு பாகங்களாக எடுப்பதாக திட்டமிட்டுள்ளனர்.  

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இயக்குநர் தேஜா, `நான் என்.டி.ஆரின் தீவிர ரசிகர் என்பது எல்லோருக்கும் தெரியும். இந்த வாய்ப்பு என்னிடம் வந்தது எனக்கு மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது. என்னால் முடிந்தளவு முயற்சி செய்து என்னுடைய உழைப்பை இந்தப் படத்திற்காக கொடுப்பேன். அவருடைய வாழ்க்கைப் பயணம் மிகவும் நீண்டது. என்.டி.ஆரின் வாழ்க்கையை எடுத்துக் கூற குறைந்தது ஆறு படமாவது வேண்டும். இருப்பினும், முடிந்தவரை இரண்டு பாகத்துக்குள் அனைத்தையும் சுருக்கி, நல்ல படமாக கொடுப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது' என்று தெரிவித்துள்ளார்.