Published:Updated:

’’முதலமைச்சரைப் பார்த்தால் இந்த ரூல்ஸைப் போடச் சொல்லுவேன்..!’’ - பிக்பாஸ் பரணி

’’முதலமைச்சரைப் பார்த்தால் இந்த ரூல்ஸைப் போடச் சொல்லுவேன்..!’’ - பிக்பாஸ் பரணி

பிக்பாஸ் பரணியுடன் ஒரு ஜாலி சாட்...

’’முதலமைச்சரைப் பார்த்தால் இந்த ரூல்ஸைப் போடச் சொல்லுவேன்..!’’ - பிக்பாஸ் பரணி

பிக்பாஸ் பரணியுடன் ஒரு ஜாலி சாட்...

Published:Updated:
’’முதலமைச்சரைப் பார்த்தால் இந்த ரூல்ஸைப் போடச் சொல்லுவேன்..!’’ - பிக்பாஸ் பரணி

உதவி இயக்குநர் வாய்ப்புக் கேட்டு இயக்குநர் பாலாஜி சக்திவேல் அலுவலகத்துக்குச் சென்ற பரணிக்கு, ’கல்லூரி’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்க, அந்தப் படம் மூலமா நடிகராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் பரணி. ’நாடோடிகள்’, ’தூங்கா நகரம்’  படங்கள் மூலம் பரணிக்கு பிரபலம் எனும் அந்தஸ்து கிடைத்து. அதன் மூலம் பிக்பாஸுக்குச் சென்ற பரணியை, இப்போது பிக்பாஸ் பரணி என்றால் தமிழ்நாட்டில் பலருக்கும் தெரிகிற வகையில் ஃபேமஸாகி விட்டார். அவருடன் அமர்ந்து உரையாடிய போது...

``8 வருஷம் கழிச்சு மீண்டும் ’நாடோடிகள்’ டீமோடு சேர்ந்து நடிக்கிறீங்க.. எப்படியிருக்கு இந்த அனுபவம்..?''

``தாய் கழகத்துலேயே மீண்டும் சேர்ந்துட்டேன்னு அரசியல்ல சில பேர் சொல்ற மாதிரி, நான் இப்போ ’நாடோடிகள்’ படத்தில் நடிக்கிறது, தாய் வீட்டுக்குப் போன மாதிரி இருக்கு. ஏன்னா, சமுத்திரக்கனி அண்ணன் படத்துல ஒவ்வொரு நடிகரும் என்ன பண்ணணும்னு அவரே நடிச்சுக்காட்டுவார். அதை நாம காப்பி பண்ணுனா போதும். நாமளும் நடிகனா நல்ல பெயரை எடுத்திடலாம்.’’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``சினிமா ஸ்டிரைக் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க..?''

``யாருமே ஒரு போராட்டத்தைப் பொழுதுபோக்குக்காக பண்ண மாட்டாங்க. அதேசமயம் ஒரு விஷயத்தால் பல பேர் பாதிக்கப்பட்டால் அதுக்காகப் போராட்டம் பண்ணுவாங்க. அப்படி ஒரு விஷயம் பல தயாரிப்பாளர்களை பாதிப்படைய செய்ததால் இந்தப் போராட்டத்தை நடத்திட்டு இருக்காங்க. சீக்கிரம் நல்ல முடிவோடு இந்தப் போராட்டம் முடிவுக்கு வரணும்னு ஆசைப்படுறேன். ஏன்னா, தயாரிப்பாளர்கள் நல்லா இருந்தால்தான் என்னைப் போன்ற நடிகர்கள் நல்லா இருக்க முடியும்; புதுமுக நடிகர்கள் அதிகமா வர முடியும்.’’

''இந்த 13 வருஷ சினிமா பயணத்தை எப்படிப் பார்க்குறீங்க..?''

``வேற துறைகளில் நான் வேலைப் பார்த்திருந்தால் எனக்கு இந்தளவுக்கு புகழ் கிடைச்சிருக்காது. நான் என்னதான் என் உழைப்பை அள்ளிக் கொட்டியிருந்தாலும் ’யார் இவரு’னு தான் கேட்பாங்க. ஆனால், சினிமாத்துறை அப்படியில்லை. நம்ம உழைப்புக்கு ஏற்ற மாதிரி புகழ் கிடைக்கும். அதுதான் இந்த துறையோட ப்ளஸ். நான் முதல் முறையா கார் வாங்கிட்டு அதில் எங்க அம்மாவை அழைச்சுட்டுப் போனேன். போயிட்டு இருக்கும்போது காருக்குள்ள தூசி வந்ததால் உடனே கண்ணாடியை ஏத்திவிட்டுட்டேன். உடனே எங்க அம்மா, ‘ஏன்பா... கண்ணாடியை இறக்கிவிட்டா காத்து வரும்ல’னு சொன்னாங்க. ’இல்லமா இது ஏசி கார். தூசு உள்ள இருக்கக்கூடாது’னு சொன்னேன். அப்போ எங்க அம்மா, ‘தூசியைக்கூட உன் மேல படவிடாம வாழ ஆரம்பிச்சுட்ட. இப்படியே உன் வாழ்க்கை இருக்கணும்பா’னு சொன்னாங்க. இன்னைக்கு வரைக்கும் அந்த இடத்தை தக்க வெச்சுக்கத்தான் போராடிட்டு இருக்கேன்.’’

முழு பேட்டியைக் காண... (முதல் பாகம்)

''முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைப் பார்த்தால் என்ன கேட்ப்பீங்க..?''

``தமிழ்நாட்டுல 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் கிராமங்கள் இருக்கு. அந்தக் கிராமங்களில் எல்லாம் கண்மாய், குளம் இருக்கு. அதிலெல்லாம் நீரை சேமித்து வைக்க வழி செய்யுங்க; நீர்நிலைகளைக் காப்பாத்துங்கனு சொல்லுவேன். அதேமாதிரி கருவேல மரங்களை அகற்றவும், நாட்டுப் பனை மரங்களை வளர்க்கவும் ரூல்ஸ் போடச் சொல்லுவேன்.’’

``கமல்ஹாசன் - ரஜினிகாந்த் இவங்ககிட்ட பிடித்தது, பிடிக்காதது என்ன..?''

’’ஒழுங்கா நேர்மையா இந்த நாட்டுக்கு வரிகட்டுற மனிதரா, நல்ல நடிகரா கமல் சாரை பிடிக்கும். பிடிக்காததுனு எதுவும் இல்ல. ரஜினி சார்கிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது, அவரோட ஆன்மிகம். பிடிக்காததுனு எதுவும் இல்ல.’’