Published:Updated:

" 'ஏன் வில்லனா நடிச்சீங்க'னு 'பாகுபலி' ராணாகிட்ட கேளுங்களேன்!" - சுனைனா லாஜிக்

வெப் சீரியஸில் நடிக்கும் சுனைனாவுடன் நேர்காணல். கெளதம் மேனன் படமான `எனை நோக்கி பாயும் தோட்டா' படம் பற்றியும், நடித்துக்கொண்டிருக்கும் வெப்சீரியஸ் குறித்தும் பேட்டியில் பேசியிருக்கிறார்.

" 'ஏன் வில்லனா நடிச்சீங்க'னு 'பாகுபலி' ராணாகிட்ட கேளுங்களேன்!" - சுனைனா லாஜிக்
" 'ஏன் வில்லனா நடிச்சீங்க'னு 'பாகுபலி' ராணாகிட்ட கேளுங்களேன்!" - சுனைனா லாஜிக்

``பிஸி ஷூட்டிங். இப்போதான் முடிச்சுட்டு வர்றேன். சினிமா ஸ்டிரைக் நடந்துகொண்டிருக்கும் சூழலில் ஷூட்டிங் எப்படினு ஷாக் ஆயிடாதீங்க. இது சினிமா ஷூட்டிங் இல்லை. வெப் சீரிஸ் ஷூட்டிங்!" - எனச் சிரிக்கிறார், சுனைனா. 

``திடீர்னு வெப் சீரிஸ்ல நடிக்கணும்னு ஆசை. பலபேர் வெப் சீரியஸ்ல நான் நடிக்கிறதை `சீரியல்'ல நடிக்கிறதா நினைச்சுக்கிறாங்க. இன்னும் சிலபேர், `சான்ஸ் இல்லாததுனால, இந்த ஏரியாவுக்கு வந்துட்டீங்களா?'னு கமென்ட் பண்றாங்க. `இந்தியில் மாதவன், தெலுங்குல ராணா... தமிழ்லகூட வெப் சீரிஸ் எடுக்குற சூழல் வந்திடுச்சு. நாம பண்ணா என்ன?'னு எதிர்கேள்வி கேட்க ஆரம்பிச்சுட்டேன்." என்கிறார், சுனைனா. 

``இந்த வெப் சீரியஸ் கதையைக் கேட்டேன், ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. உடனே ஓகே சொல்லிட்டேன். இதுக்குமேல இந்த வெப் சீரியஸ் பத்தி இப்போதைக்குச் சொல்லமுடியாது. நிறைய சஸ்பென்ஸ் எலமென்ட்ஸ் இருக்கு. சினிமாவைவிட இந்த வெப் சீரிஸுக்கான ரீச் அதிகமா இருக்கும்னு நம்புறேன். ரிலீஸ் ஆகும்போது பார்த்துட்டு, நீங்களே சொல்வீங்க. `திருதிரு துறுதுறு' படத்தோட இயக்குநர் நந்தினி இந்த வெப் சீரியஸை இயக்கியிருக்காங்க. இந்த வெப் சீரியஸோட கதையை என்கிட்ட சொல்லி, நடிக்கக் கேட்டப்போ எனக்கு ஹாப்பியா இருந்துச்சு. இதுதவிர, சினிமாவிலும் இப்போ நிறைய நல்ல ரோல் பண்ணிட்டிருக்கேன். நான் என்னை எப்போதும் ஒரு ஹீரோயின்னு முன்நிறுத்த விரும்பலை. நல்ல நடிகைனு பெயர் எடுத்தாப் போதும். ஏன்னா, நான் படத்துல கமிட் ஆகும்போது என் கேரக்டருக்கு என்ன வலிமை இருக்குனுதான் பார்ப்பேன். அப்படித்தான் `காளி' படத்துலேயும் கமிட் ஆனேன். ஜனவரியில் எனக்கான ஷூட்டிங் நடந்துச்சு. விஜய் ஆண்டனி சார்கூட என் போஷன் எடுத்தாங்க. எனக்கு ஏற்கெனவே அவரை நல்லாத் தெரியும். என்னோட ரெண்டு படத்துக்கு அவர் மியூசிக் டைரக்டரா வொர்க் பண்ணியிருக்கார். படத்துல அவர்கூட நடிக்கும்போது எந்த இடத்திலேயும் ஒரு மியூசிக் டைரக்டர்கூட நடிக்கிறேங்கிற எண்ணம் வரலை. அவர்கூட நடிக்க எனக்கு ஈஸியா இருந்தது. இந்தப் படத்தோட ரிலிஸூக்காகக் காத்திருக்கேன். அதேமாதிரி கிருத்திகா உதயநிதி டைரக்‌ஷன் எனக்கு ரொம்பப் பிடிக்கும். `பெண் இயக்குநரோட வொர்க் பண்றது எப்படி இருக்கு?'னு என்கிட்ட சிலபேர் கேட்டாங்க. நான் கிருத்திகாவை இயக்குநரா மட்டும்தான் பார்க்கிறேன். ஆண், பெண் பேதம் படைப்பாளிகளுக்கு எதுக்கு? 

எனக்கு ரொம்ப நாளாவே கெளதம் மேனன் சாரோட படத்துல நடிக்கணும்னு ஆசை. அது, `எனை நோக்கி பாயும் தோட்டா' மூலமா சாத்தியம் ஆகியிருக்கு. ஒரு கேரக்டர் ரோல் பண்ணியிருக்கேன். `தெறி' படத்துல விஜய்கூட கேமியோ ரோல் நடிச்ச மாதிரி இந்தப் படத்துல இருக்காது, இது வேறமாதிரி ஒரு கேரக்டர். கேரக்டர் ரோலா இருந்தாலும், என்னைத் தேடி வர்ற நல்ல வாய்ப்புகளை மிஸ் பண்ணக் கூடாதுனு பார்க்குறேன். இந்தப் படத்துல எனக்கு ரொம்ப நல்ல கேரக்டர் கொடுத்திருக்கார், கெளதம் சார். ராணாவும் இந்தப் படத்துல நடிக்கிறார். கெளதம் சாரை நேர்ல பார்த்தப்போ, `` `வம்சம்' படத்துல உங்க கேரக்டர் எனக்கு ரொம்பப் பிடிக்கும்'னு சொன்னார். கேட்டதும் அவ்ளோ சந்தோஷமா இருந்தது. கெளதம் சார் படங்களில் வொர்க் பண்றது ரொம்ப ஈஸியா இருக்கு. அவர் நடிப்பை சொல்லிக்கொடுக்கும்போது அந்தக் கேரக்டரோட எமோஷனலை அவர்கிட்ட பார்க்கமுடியும்.  

அவரோட படங்கள்ல பெண் கேரக்டர்கள் எல்லாமே ரொம்ப பவர்ஃபுல்லா இருக்கும். தவிர, ஒரு யுனிக்னஸைக் கொண்டுவந்துடுவார். என் கேரக்டருக்கும் இந்த ரெண்டும் இருக்கு. எந்தக் கேரக்டர் கிடைச்சாலும், அதை சரியா பண்ணனும்னு நினைக்கிறேன். `பாகுபலி' படத்துல ராணா வில்லன் ரோல் பண்ணார். அதுக்காக அவர்கிட்ட, `ஏன் வில்லன் ரோல் பண்றீங்க?'னு கேட்க முடியுமா... என்கிட்ட அப்படி யாரும் கேட்டதில்லை. கேட்டாலும், எதைப் பத்தியும் பயப்படாம, கவலைப்படாம எந்தக் கேரக்டரா இருந்தாலும் நடிக்க ரெடி!" நம்பிக்கையுடன் முடிக்கிறார், சுனைனா.