Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

சினிமா

மிஸ்டர் மியாவ்

சினிமா

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

ம்பி ராமையா மகன் உமாபதி பொறியியல் படித்தவர். முதன்முதலில் உமாபதி ஹீரோவாக அறிமுகமான  ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ திரைப்படம் இன்னும் வெளிவரவில்லை. அடுத்து அப்பா தயாரிப்பில் உருவான ‘தேவதாஸ்- 2016’  முதல்பிரின்ட் ரெடி. ‘விதி’ படத்தில் சங்கர் கணேஷ் இசையில் உருவான ‘தேவதாஸும் நானும்...’ பாடலை அவரிடம் அனுமதி பெற்று ‘தேவதாஸ்-2016’ படத்தில் பயன்படுத்தி உள்ளனர். அந்தப் பாட்டுக்கு உமாபதியுடன் சங்கர் கணேஷும் சேர்ந்து கெட்ட ஆட்டம் போட்டு இருக்கிறார்.

விஜயகுமார் ‘உறியடி’ படத்தின்  ஹீரோ மட்டுமல்ல... தயாரிப்பு, இயக்கமும் அவரே. இசையமைப்பாளர் பாதியிலேயே பைபை காட்டிவிட்டுச் செல்ல, மனம் தளராமல் விஜயகுமாரே கீ-போர்டை கையில் எடுத்து முடித்தார். ‘உறியடி’ படத்தில் இரண்டு வருடங்களைச் செலவிட்டு மனம் நொந்தார். பட ரிலீஸுக்குப் பிறகு  மக்கள், மீடியாக்கள் கொடுத்த விமர்சன வைட்டமின் விஜயகுமாரை மீண்டும் தெம்பாக்கி இருக்கிறது. அடுத்த படத்துக்கான வேலைகளில் சுறுசுறுப்பாக இறங்கி​விட்டார்.

மிஸ்டர் மியாவ்

திகம் பழக்கம் இல்லாத ஆட்களின் படங்களைப் பிரமாண்ட விளம்பரம் செய்யும் உதயநிதி, ஏனோ தனது மாமா மகன் ஹீரோவாக நடித்த ‘திருட்டு ரயில்’ திரைப்படம் ரிலீஸானபோது கண்டுகொள்ளவில்லை. ஸ்டாலின் மனைவி துர்க்காவின் தம்பி மகன் ரக்‌ஷன் ஹீரோவாக நடித்த ‘திருட்டு ரயில்’ வெளியாகி வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தன்போல் மீண்டும் ஹீரோவாக நடிக்கும் முயற்சியில் இறங்கி வருகிறார் ரக்‌ஷன்.

சினிமா பின்புலம் சிறிதும் இல்லாதவர், ‘மெட்ரோ’ பட ஹீரோ சிரிஷ். இவர் ஐ.ஏ.எஸ் படித்து பெரிய கலெக்டராக வருவார் என்று கனவு கண்ட பெற்றோருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு கூத்துப்பட்டறை சென்று நடிப்புப் பயிற்சி பெற்று கலைச்சேவை செய்ய வந்து இருக்கிறார். சிம்பு பெயரை பச்சைக் குத்திக்கொள்ளும் அளவுக்கு அவரது தீவிரமான ரசிகர். ‘‘சினிமா உலகத்துல மனசுல என்ன தோணுதோ அதை ஓபனா பேசுற ஒரே நடிகர் சிம்புதான்’’ என்று நெகிழ்கிறார் சிரிஷ்.

மியாவ் பதில்கள்

தமிழ் சினிமாவில் வேலை செய்தவுடன் உடனடியாக சம்பளம் பெறுபவர்கள் யார்?

மைக் பிடித்து பாடும் முன்பே வவுச்சரில் கையெழுத்துப் போட்டுப் பேசிய பணத்தைக் கையோடு பெறுவது பாடகர்கள் மட்டுமே.

எங்கள் படங்களுக்குத் தியேட்டர்களே இல்லையென்று சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் குமுறுகிறார்களே?

தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான சினிமா தியேட்டர்கள் இரண்டு பெரிய கட்சிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால் சின்ன பட்ஜெட் படங்களுக்குத் திரையரங்கம் கிடைப்பதில்லை.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் பிரசார பீரங்கியாக உலாவந்த விந்தியாவுக்கு ஜெ. ஒரு பதவியும் தரவில்லையே?

சட்டமன்றத் தேர்தலின் போது, ‘‘உன் பிரசாரம் நல்லா இருக்கும்மா’’ என்று ஜெ. பாராட்டியதையே பெரும் பாக்கியமாக நினைக்கிறார் போலிருக்கிறது.