Election bannerElection banner
Published:Updated:

வி.இஸட்.துரை இயக்கும் வெப் சீரிஸில் 'அருவி' நடிகை!

வி.இஸட்.துரை இயக்கும் வெப் சீரிஸில் 'அருவி' நடிகை!
வி.இஸட்.துரை இயக்கும் வெப் சீரிஸில் 'அருவி' நடிகை!

வி.இஸட்.துரை இயக்கும் வெப் சீரிஸில் 'அருவி' நடிகை!

'அருவி' படத்தில் நாயகி அதிதி பாலனின் தோழியாக நடித்த சுவேதா சேகர், இயக்குநர் வி.இஸட். துரை இயக்கத்தில் உருவாகும் வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்க இருக்கிறார்.

அருண் பிரபு இயக்கத்தில் கடந்த ஆண்டு ரிலீஸான திரைப்படம், 'அருவி'. அறிமுக இயக்குநராகக் களமிறங்கிய இவருக்கு, இந்தப் படம் நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. மேலும், படத்தில் நடித்தவர்களில் ஒரு சிலரைத் தவிர, பெரும்பாலானவர்களைப் புதுமுகமாகவே அருண் பிரபு தேர்வுசெய்திருந்தார். படத்தின் கதாநாயகியாக, 'அதிதி பாலன்' அறிமுகமானர். அந்தப் படம், அதிதிக்கு 'நல்ல நடிகை' என்ற பெயரையும் விருதுகளையும் வாங்கிக் கொடுத்தது. இதனால், தனது அடுத்த படம்குறித்து அதிக கவனத்துடன் இருக்கிறார் அதிதி பாலன்.

இந்நிலையில், 'அருவி' படத்தில் அதிதி பாலனின் தோழியாக நடித்த சுவேதா சேகர், வி.இஸட். துரை இயக்கும் வெப் சீரிஸில் நடிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, தனது ஃபேஸ்புக் பக்கத்தில், இயக்குநர் வி.இஸட்.துரையுடன் இருக்கும் போட்டோ ஒன்றைப் பதிவிட்டு, வெப் சீரிஸ் குறித்த தகவலையும் அவர் பதிவிட்டுள்ளார். மேலும், இவர்களின் கூட்டணியில் உருவாகும் வெப் சீரிஸ் இந்தியில் வெளியாகுமாம். அஜித் நடித்த 'முகவரி' படத்தைக் கொடுத்த இயக்குநர் வி.இஸட்.துரை, அதன்பிறகு 'தொட்டி ஜெயா', 'நேபாளி' 'ஆறு மெழுகுவர்த்திகள்' உள்ளிட்ட படங்களை இயக்கினார்.  சமீபத்தில், சமுத்திரக்கனியை வைத்து 'ஏமாலி' படத்தை எடுத்தார். 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு