Published:Updated:

'விஸ்வரூபம்' படத்திற்கு தடையா?

'விஸ்வரூபம்' படத்திற்கு தடையா?
'விஸ்வரூபம்' படத்திற்கு தடையா?
'விஸ்வரூபம்' படத்திற்கு தடையா?

கமலின் 'விஸ்வரூபம்' படத்தில் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தி காட்சிகளை  வைத்திருப்பதாகவும், எனவே அந்த படத்தை தடை செய்ய வேண்டும் என்றும் கோரி  முஸ்லிம் அமைப்புகள் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள்.

கடந்த திங்கள்கிழமை 'விஸ்வரூபம்' படத்தை முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு  நிர்வாகிகளுக்கு திரையிட்டு காட்டினார் கமல். படத்தில் முஸ்லிம்களை ரொம்ப  மோசமாக சித்தரித்தரித்திருப்பதாக சொல்லி முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு  நிர்வாகிகள் செவ்வாய்க்கிழமை சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் புகார்  அளித்தார்கள்.

''இஸ்லாமியர்களையும், குர் ஆனையும், தொழுகையையும் திரைப்படத்தில் தவறாக  பயன்படுத்தியிருக்கிறார்கள். முஸ்லிம்களை காயப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் படத்தை  தடை செய்ய வேண்டும்." என கோரிக்கை வைத்தார்கள்.

##~~##
இந்நிலையில் இப்படத்தை தடை செய்ய வலியுறுத்தி இன்று தமிழக அரசின் உள்துறை  செயலாளர் ராஜகோபாலை சந்திக்கிறது முஸ்லிம் கூட்டமைப்பு.
ஏற்கனவே இது போலதான் 'துப்பாக்கி' படத்திற்கு அரசிடம் அவர்கள் முறையிட்ட  பிறகுதான் அந்த படத்தின் ஐந்தாறு காட்சிகள் நீக்கப்பட்டன. இதற்காக முஸ்லிம்  அமைப்புகள் முதல்வர் ஜெயலலிதாவிடம் நேரில் நன்றி தெரிவித்தார்கள்.
'விஸ்வரூபம்' படத்திற்கு தடை விதிக்க சொல்லி கோரிக்கை வைக்கப்பட்டால் அரசு  அதை பரிசீலிக்குமா என்கிற கேள்விகள் எழுந்திருக்கின்றன. 'இன்னோசன்ஸ் ஆப்  முஸ்லிம்' திரைப்படம், 'துப்பாக்கி' என அடுத்தடுத்து போராடி வரும் முஸ்லிம்களின்  கோரிக்கைகள் நிறைவேறுவது பற்றி அரசு வட்டாரத்தில் விசாரித்த போது, ''படத்தை  பார்த்துவிட்டு கமலின் தரப்பையும் கேட்ட பிறகுதான் அரசு இதில் இறுதி முடிவு  எடுக்கும்'' என்றார்கள்.