Published:Updated:

சினிமா புகழ் ரதி யானை மரணம்... சோகத்தில் முதுமலை!

ரதி எனும் 80 வயது கொண்ட யானை, முதுமலை முகாமில் இறந்தது. இதன் மீது பிரியத்துடன் இருந்த வன ஊழியர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் முதுமலைப் பகுதியில், யானைகள் முகாம் உள்ளது. இந்த முகாமில் 25-க்கும் மேற்பட்ட யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில் அதிக வயது கொண்ட யானையின் பெயர் ரதி. இந்த யானைக்கு வயது 80.

13 குட்டிகளை ஈன்றெடுத்த ரதி யானையை, 1942-ஆம் வருடம் முதுமலை வனப்பகுதியில் பிடித்த போது, ஒன்பது வயதாம்! இந்த ரதி, எம்.ஜி.ஆர். நடித்த நல்லநேரம், ரஜினிகாந்த் நடித்த அன்னை ஓர் ஆலயம் ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறதாம்!

 உடல் ஆரோக்கியத்துடன் இருந்த ரதி யானை, சமீபத்தில் கூட தெப்பக்காடு பொங்கல் விழாவில் உற்சாகத்துடன் கலந்து கொண்டது. திடீரென்று உடலில் கோளாறு ஏற்படவே, வழக்கமான சுறுசுறுப்புடன் இல்லாமல் போனது. உடல் தளர்ந்து, நடையும் தளர்ந்துவிட... படுத்த படுக்கையாகவே கிடந்தது ரதி. நேற்று ரதி யானை, இறந்து போகவே... வன ஊழியர்கள் பலரும் சோகத்தில் மூழ்கினார்கள்.

இனி, நல்லநேரமும் அன்னை ஓர் ஆலயமும் பார்க்கும் போதெல்லாம் எம்.ஜி.ஆர்., ரஜினியை விட்டுவிட்டு ரதியையைப் பார்த்திருப்பார்கள் மக்கள். அதுதான் இறந்த ரதிக்கு ரசிகர்களின் அஞ்சலி!