Published:Updated:

"விஜயகாந்த் சார் என்னைத் தூக்கி சுத்தும்போது பயந்துட்டேன்!" நடிகை மீனா குமாரி

"விஜயகாந்த் சார் என்னைத் தூக்கி சுத்தும்போது பயந்துட்டேன்!" நடிகை மீனா குமாரி
"விஜயகாந்த் சார் என்னைத் தூக்கி சுத்தும்போது பயந்துட்டேன்!" நடிகை மீனா குமாரி

"15 வருட அனுபவத்தில், மூணு மொழிகளில் பல படங்களில் நடிச்சுட்டேன். ஒவ்வொரு கேரக்டரும் மறக்கமுடியாத மெமரீஸ்".

"15 வருட அனுபவத்தில், மூன்று மொழிகளில் பல படங்களில் நடிச்சுட்டேன். ஒவ்வொரு கேரக்டரும் மறக்கமுடியாத மெமரீஸ்" எனப் புன்னகையுடன் பேசுகிறார், நடிகை மீனா குமாரி. சன் டி.வி 'சந்திரலேகா' சீரியலில் நடித்துவருபவர்.

``முதல் ஆக்டிங் வாய்ப்பு பற்றி..."

"என் பூர்வீகம், ஆந்திரா. சினிமா ஒளிப்பதிவாளரான என் உறவினர் மூலம், `கருப்பு நிலா' படத்தில் வாய்ப்பு கிடைச்சது. விஜயகாந்த் சாருக்கு தங்கச்சியா நடிச்சபோது, பிளஸ் ஒன் படிச்சுட்டிருந்தேன். விஜயகாந்த் சார் தன் முதுகில் என்னைக் கட்டிக்கிட்டு சண்டைப் போடறதும் நானும் சண்டைப் போடுறதும் படத்தில் அல்டிமேட். அவரின் தலைக்கு மேலே என்னைத் தூக்கி சுத்தினப்போ பயந்துட்டேன். முதல் படத்திலயே ஆக்‌ஷன் காட்சியில் நடிச்சது த்ரில்லிங்கா இருந்துச்சு. அப்போ எனக்குத் தமிழ் சரியா தெரியாது. போகப் போக தமிழ் இன்டஸ்ட்ரி எனக்குப் பரிட்சையமாகிடுச்சு. அந்தப் படத்தில் ஶ்ரீவித்யா அம்மா, எனக்குத் தாய் கேரக்டர். மொழி, மேக்கப், ஆக்டிங்னு நிறைய விஷயங்களை அவங்க சொல்லிக்கொடுத்தாங்க."

``விஜயகாந்த் உடன் பழகியதில் மறக்கமுடியாத நினைவுகள் உண்டா?"

``நிறைய இருக்கு. அப்போ, விஜயகாந்த் சார் பெரிய ஹீரோனு மட்டும்தான் தெரியும். முதல் நாள் ஷூட்டிங்கில், 'என் ஃபைட் சீன்ஸ் பார்த்திருக்கியா?'னு கேட்டார். இல்லைங்கிறதுதான் உண்மையான பதில். ஆனால், 'ஆங்'னு தெரிஞ்ச மாதிரி சமாளிச்சுட்டேன். அடுத்து என்ன கேட்பாரோனு மனசுக்குள்ளே பதற்றம். ரொம்ப சென்டிமென்ட் டைப் அவர். நிஜமான தங்கச்சி மாதிரி என் மேலே பாசமா இருந்தார். அப்புறம், ஏவி.எம் ஸ்டுடியோவில் நாங்க வெவ்வேறு படங்களில் நடிச்சுட்டிருந்த சமயத்தில் சந்தித்துப் பேசுவேன். அன்போடு விசாரிச்சு, பழைய நினைவுகளை மறக்காம சொல்வார்."

`` `சந்திரலேகா' சீரியலில் நடிக்கும் சென்டிமென்ட் அம்மா ரோல் பற்றி..."

"என் பொண்ணு என் அண்ணியிடமும், அண்ணியின் பொண்ணு என்னிடமும் மகள்களா வளருவாங்க. இந்த உண்மை எனக்கு மட்டும்தான் தெரியும். பொண்ணுங்களும் வளர்ந்திடுவாங்க. உண்மையை மத்தவங்களுக்குச் சொல்லிடலாம்னு நினைக்கும்போதெல்லாம் ஏதாச்சும் ஒரு பிரச்னை வந்திடும். அதனால், உண்மையைச் சொல்லமுடியாமல் தவிப்பேன். மனசுக்கு மிக நெருக்கமான கேரக்டர். இந்த சீரியல் 1000 எபிசோடுகளை கடந்து போயிட்டிருக்கு. இந்த நாலு வருஷமும் மறக்கமுடியாத அனுபவம்."

``தொடக்கத்தில் அம்மாவா நடிக்க தயங்கினீங்களாமே..."

``நிறைய சீரியல்களில் ஹீரோயினா நடிச்சுட்டேன். அம்மாவா இது முதல் சீரியல். என் வயசு முப்பது பிளஸ். ஆனால், இருபது பிளஸில் இருக்கும் மகளுக்கு அம்மா ரோல்னு சொன்னதும், ஆரம்பத்தில் ரொம்பவே தயங்கினேன். ஆனால், கதையைக் கேட்டதும் ஆடியன்ஸ் மனசுல இடம்பிடிக்கும்னு தோணுச்சு. இந்த மாதிரி வெரைட்டி காட்டி நடிக்கிறதுதானே அனுபவமுள்ள ஆர்டிஸ்டுக்கு உதாரணம். அதனால், கமிட் ஆகிட்டேன். இப்போ எந்தவித தயக்கமும் இல்லை."

``விஜய், அஜித் உடன் நடித்த அனுபவம் பற்றி..."

" 'பத்ரி' படத்தில் விஜய் சாருக்கு அண்ணி. அதில் வரும் 'கலகலக்குது' பாடல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். எல்லோரும் ஃப்ரெண்ட்லியா நடிச்சோம். 'கிரீடம்' படத்தில் அஜித் சாரின் அக்காவா நடிச்சேன். அவர் எல்லோரிடமும் கலகலப்பா பேசுவார். அந்தப் படத்தில் நிறைய காமெடி சீன்ஸ் இருக்கும். பிரேக் டைமிலும் கலகலப்பா பேசுவோம். அதெல்லாம் ஸ்வீட் மெமரீஸ்."

``இப்போ சினிமாவில் உங்களை அதிகமாக பார்க்க முடியறதில்லையே...''

`` `கருப்பு நிலா' வெளியானபோது, அடுத்தடுத்து பல வாய்ப்புகள் வந்துச்சு. பிளஸ் டூ முடிச்சுட்டு, நாலு வருஷம் முழுசா நடிப்பில் கவனம் செலுத்தினேன். அப்புறம், பி.எல்., படிச்சேன். மூணு நாள் படிப்பு, மூணு நாள் நடிப்புனு பிஸியான லைஃப். அந்தத் தருணத்தில்தான் 'மர்ம தேசம்' மூலமா சீரியலில் என்ட்ரி ஆனேன். தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளின் சீரியல்களில் நடிச்சேன். 'வைர நெஞ்சம்', 'மலர்கள்' எனப்  பல மெகா சீரியல்களில் நாயகி. அதனால், சினிமாவில் சரியா கவனம் செலுத்த முடியலை. வந்த சில நல்ல சினிமா வாய்ப்புகளில் மட்டும் நடிச்சேன். இப்பவும் அதுமாதிரியான கேரக்டரில் நடிக்க ஆர்வமா இருக்கேன்."

``வக்கீலாக பிராக்டீஸ் பண்ணும் ஆர்வம் இல்லையா?"

``இருக்கு. ஆனால், ஒரே நேரத்தில் நடிப்பும் பிராக்டீஸூம் ஒத்துவராது. தெலுங்கில் ரெண்டு படங்கள், மலையாளத்தில் ஒரு படம் மற்றும் சீரியல் என வொர்க் பண்ணிட்டிருக்கேன். பார்க்கலாம்... எதிர்காலத்தில் வக்கீலாக வொர்க் பண்ணும் சூழல் ஏற்பட்டால் சிறப்பாக செய்வேன்.''
 

அடுத்த கட்டுரைக்கு