Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

சம்பவம்-1

மிஸ்டர் மியாவ்

அஜித்தின் 57-வது படத்தில் நடிக்க இருந்த அனுஷ்கா, ரித்திகா சிங் ஆகிய இருவரும் நீக்கப்பட்டுவிட்டார்கள். இப்போது காஜல் அகர்வால், அக்‌ஷரா நடிக்கிறார்கள். சமீபத்தில் அஜித்துக்கு போன் செய்த ஸ்ருதிஹாசன், ‘என் தங்கை அக்‌ஷரா ‘ஷமிதாப்’ இந்தி படத்துல தனுஷ்கூட நடிச்சிருக்கா. தமிழ் படத்துல அறிமுகமாக ஆசைப்படுறா. உங்க படத்துல நடிச்சா உடனே மாஸ் ஆயிடலாம்’ என்று சொல்ல... தலையை ஆட்டி டபுள் ஓகே சொன்னாராம், தல. இதே படத்தில், அஜித்துடன் கருணாகரன், ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன் இருவரும் காமெடி துவாரபாலகர்களாக வருகிறார்கள்.

சம்பவம்-2

மிஸ்டர் மியாவ்

மணிரத்னத்தின் ‘ரோஜா’ படத்துக்குப் பிறகு, காஷ்மீரில் முழுக்க முழுக்கப் படப்பிடிப்பு நடத்தப்பட்டு இருக்கும் திரைப்படம் ‘வாகா’. ராணுவ வீரராக நடிக்கும் விக்ரம் பிரபு தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடும் கதை கொண்ட இந்தப் படம் சுதந்திர தின வெளியீடாக வருகிறது. ‘வாகா’ ரிலீஸாகக் கூடாது என்று விநியோகஸ்தர்கள் சிலர் தடைபோட, தயாரிப்பாளர் பிரபு வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு களமிறங்கினார். அதன்பின் காக்கிகள் தலையிட, தடை போட்டவர்கள் வேகவேகமாக நடையைக் கட்டினார்கள்.

சம்பவம்-3

மிஸ்டர் மியாவ்

ராஜு முருகன் இயக்கத்தில் உருவான ‘ஜோக்கர்’ ஆகஸ்ட் 12 ரிலீஸ் ஆகிறது. கடந்த 30 ஆண்டுகளாக, சினிமா பிரபலங்களுடன் தொடர்புகொண்டவர் திருவண்ணாமலை எழுத்தாளர் பவா செல்லதுரை. பாலுமகேந்திரா, மிஸ்கின் ஆகியோர் நடிக்க அழைத்தபோது மறுத்தவர், ‘ஜோக்கர்’ படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். தர்மபுரியில், படக்காட்சிக்காக டாஸ்மாக் செட் போட்டு இருக்கிறார், கலை இயக்குநர்.  நிஜ குடிமகன்கள் பலர், மொய்த்துக்கொண்டு ஆளுக்கொரு குவார்ட்டர் கேட்க ‘ஜோக்கர்’ டீம் சீரியஸ் ஆனதாம்.

சம்பவம்-4

மிஸ்டர் மியாவ்

தமிழ் திரைப்பட சங்கத் துணைத்தலைவர் தேனப்பன், ‘பேரன்பு’ படத்தைத் தயாரிக்கிறார். இயக்குநர் ராம் சொன்ன கதையைக் கேட்டு அசந்துபோய், ஒரு ரூபாய்கூட சம்பளம் வாங்காமல் நடித்துக்கொண்டு இருக்கிறார், மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி. தமிழ் சினிமாவில் தம்மாத்தூண்டு நடிகர்கள் எல்லாம் கேரவன் கேட்டு அடம்பிடிக்க...  கேரளாவில் ரூ.2 கோடி செலவில் சொந்தமாய் வாங்கி வைத்துள்ள கேரவனை சென்னை படப்பிடிப்புக்கு எடுத்து வந்ததுடன், தனது வீட்டில் சமைத்த உணவையே படப்பிடிப்பில் சாப்பிடுகிறார் மம்முட்டி. ‘பேரன்பு’ படத்தில் மம்முட்டியுடன் சமுத்திரக்கனி முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்.   

மிஸ்டர் மியாவ்

சந்திரபாபு மாதிரி இப்போதுள்ள காமெடி நடிகர்களுக்கு சொந்தக் குரலில் பாடி ஆடும் திறமை இல்லையே?

வடிவேலுவுக்கு அந்தத் திறமை அதிகம். சில படங்களில் சொந்தக் குரலில் பாடி ஆடி நடித்து இருக்கிறார். அதுமட்டுமல்ல, பழைய எம்.ஜி.ஆர்., சிவாஜி பாடல்களை அச்சு பிசகாமல் அப்படியே வடிவேலு தன் குரலில் பிரமாதமாகப் பாடுவார்.

கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக ரஜினியும், கமலும் போட்டியாளர்களாக இருந்து நட்பு பாராட்டுகிறார்களே. எப்படி?

‘‘நானும், ரஜினியும் 40 ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம். எங்கள் நட்பு பாதிக்காமல் இருப்பதற்குக் காரணம் எங்கள் இருவருவருக்கும் இடையே நாங்கள் இடைத்தரகர்களை அண்டவிடுவதில்லை.’’ - ‘16 வயதினிலே’ விழாவில் கமல்.

இப்போதுள்ள நடிகைகள் பலர் திருமணமான சில வருடங்களிலேயே விவாகரத்து கேட்கிறார்களே?

திருமணத்துக்குப் பிறகு நடிக்கலாமா, கூடாதா என்பதுதான் முக்கியமான பிரச்னை. குழந்தை பெற்றுக்கொள்ளலாமா, கூடாதா என்பது இரண்டாவது பிரச்னை. பிரிவுக்கு இந்த இரண்டும்தான் காரணம்.