Published:Updated:

காவல் துறை கெடுபிடி: பாதியிலேயே நிறுத்தப்பட்ட விஸ்வரூபம்!

காவல் துறை கெடுபிடி: பாதியிலேயே நிறுத்தப்பட்ட விஸ்வரூபம்!
காவல் துறை கெடுபிடி: பாதியிலேயே நிறுத்தப்பட்ட விஸ்வரூபம்!
காவல் துறை கெடுபிடி: பாதியிலேயே நிறுத்தப்பட்ட விஸ்வரூபம்!

சென்னை: நீதிமன்றம் தடையை நீக்கி உத்தரவிட்டபோதிலும், காவல்துறை மற்றும்  வருவாய்த்துறை அதிகாரிகளின் கெடுபிடி காரணமாக தமிழகத்தின் பல இடங்களில்  இன்று காலை திரையிடப்பட்ட விஸ்வரூபம், பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம் ஏற்படுத்தியுள்ள சர்ச்சைகள் தமிழகத்தில்  விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கி உள்ளது.

விஸ்வரூபம் திரைப் படத்திற்கு தமிழக அரசு விதித்திருந்த தடையை நேற்று சென்னை  உயர் நீதிமன்றம் நீக்கியது. இதையடுத்து தமிழகத்தில் இன்று பல இடங்களில்  விஸ்வரூபம் காலையிலேயே திரையிடப்பட்டது. ஆனால், படம் ஓடத் தொடங்கிய சில  நிமிடங்களில் அங்கு வந்த காவல் துறையினர் மற்றும் வருவாய்

##~~##
துறை அதிகாரிகள்  படத்தை நிறுத்த சொல்லி தியேட்டர் உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டனர். மேலும்  அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டதால்,தியேட்டர் உரிமையாளர்கள்  படத்தை நிறுத்தினர்.
தூத்துக்குடி, கோவை, ஈரோடு மற்றும் நாகை மாவட்டங்களில் பத்து நிமிடத்திலேயே  விஸ்வரூபம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து கடும் ஆத்திரம் அடைந்த கமல் ரசிகர்கள்  சாலை மறியல் மற்றும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தமிழகத்தின்  பல இடங்களில் பதற்ற நிலை ஏற்பட்டு உள்ளது.
அதேபோல் திரைபடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சிலர், சென்னை தேவி தியேட்டர் எதிரில்  வைக்கப்படிருந்த விஸ்வரூபம் பேனரை தீ வைத்து எரித்தனர்.
கோவையில் ஒரு இடத்தில் பெட்ரோல் குண்டுகள் கைப்பற்றப்பட்ட நிலையில்,  விஸ்வரூபம் திரையிட இருந்த தியேட்டர்களில் வீச பதுக்கி வைக்கப்பட்டிருந்ததா? என்ற  கோணத்தில்; காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.