Published:Updated:

'துருவ நட்சத்திரம்' படத்தில் விக்ரமுக்கு இவர்தான் வில்லன்!

கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்நிலையில், படத்தின் வில்லன் யாரென்ற தகவல் வெளியாகி உள்ளது.

'துருவ நட்சத்திரம்' படத்தில் விக்ரமுக்கு இவர்தான் வில்லன்!
'துருவ நட்சத்திரம்' படத்தில் விக்ரமுக்கு இவர்தான் வில்லன்!

கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகிவரும் 'துருவ நட்சத்திரம்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்தப் படத்தில் விக்ரம் சால்ட் அன்ட் பெப்பர் கெட்டபில் மாஸாக இருப்பதைப் பார்த்ததிலிருந்து இவருக்கு வில்லன் யாராக இருக்கும் என்ற கேள்வி அனைவருக்குள்ளும் எழுந்தது.

இந்நிலையில், அந்தப் படத்தில் விக்ரமுக்கு வில்லனாக மலையாள நடிகர் விநாயகன் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இவர், தமிழில் 'திமிரு', 'மரியான்' ஆகிய படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கெளதம் மேனன் படம் என்றாலே ஹீரோவுக்கு நிகராக வில்லனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படும். 'காக்க காக்க' பாண்டியா, 'வேட்டையாடு விளையாடு' அமுதன் - இளமாறன், 'என்னை அறிந்தால்' விக்டர் என இவர் படங்களில் மிரட்டல் வில்லன்களைப் பார்க்கமுடிகிறது. விநாயகனும் இந்தப் படத்தின்மூலம் மிரட்டல் பட்டியலில் இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கலாம். இவரைத் தொடர்ந்து, ஐஸ்வர்யா ராஜேஷ், ரீத்து வர்மா, பார்த்திபன், சிம்ரன், ராதிகா எனப் பலர் படத்தில் இருப்பது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை வேற லெவலுக்கு அழைத்துச்செல்கிறது என்றே சொல்லலாம்.