Published:Updated:

9 வருஷ லவ்...

9 வருஷ லவ்...
பிரீமியம் ஸ்டோரி
9 வருஷ லவ்...

சந்திப்பு: சி.காவேரி மாணிக்கம், படம் /ச.இரா.ஸ்ரீதர்

9 வருஷ லவ்...

சந்திப்பு: சி.காவேரி மாணிக்கம், படம் /ச.இரா.ஸ்ரீதர்

Published:Updated:
9 வருஷ லவ்...
பிரீமியம் ஸ்டோரி
9 வருஷ லவ்...
9 வருஷ லவ்...

 “நமக்குப் பிடிச்ச காரியத்தைச் செய்யும்போது அதில் உள்ள கஷ்டங்கள் எதுவுமே தெரியாது. விரும்பிச் செய்யும் வேலையே... சொர்க்கமாகத் தெரியும்!'' - தத்துவம் போல் அனுபவ மொழி பேசுகிறார் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். தன்னை இசையின் மடியில் அமர்த்தி வைத்த திருப்பங்களைப் பகிர்ந்து கொள்கிறார்... 

''படிப்பு..?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'சின்ன வயதில் இருந்தே என்னுடைய கனவு, லட்சியம் எல்லாமே இசைதான். ஐந்து வயதிலேயே கீ-போர்டு வாசிக்க ஆரம்பித்து விட்டேன். அடையாறு செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் படித்தேன். அங்கு, கல்சுரல் செக்ரெட்டரி நான்தான். இசையில்தான் என்னுடைய மொத்தக் கவனமும் இருந்தது. பிளஸ்-1 வந்ததும் 'போதும்டா சாமி’னு ஸ்கூலுக்கு டாடா காட்டிட்டு, ஜி.என்.செட்டி ரோட்டுல உள்ள எஸ்.ஏ.இ. காலேஜ்ல சவுண்ட் இன்ஜினீயரிங் வகுப்பில் சேர்ந்து விட்டேன். அப்படியே ஏ.ஆர்.ரஹ்மான், ஹாரீஸ் ஜெயராஜ், அனுமாலிக், வித்யாசாகர், பரத்வாஜ்னு நிறைய இசை அமைப்பாளர்களிடம் வேலை பார்த்தேன்.''

9 வருஷ லவ்...

''சினிமா வாய்ப்பு..?''

''முதலில் விளம்பரப் படங்களுக்கு இசை அமைத்தேன். கல்யாணக் கச்சேரியும் நிறைய செய்தேன். வசந்தபாலன் என்னுடைய சி.டி. ஒன்றைக் கேட்டு ரசித்துவிட்டுத்தான், 'வெயில்’ படத்துக்கு இசை அமைக்கும் வாய்ப்பு கொடுத்தார். முதன்முதலில், ஷங்கர் சாரிடம்தான் அட்வான்ஸ் வாங்கினேன். அந்தப் படம் செம ஹிட். அதற்குப் பிறகு, டைரக்டர் விஜய் இயக்கத்துல அஜித், த்ரிஷா நடித்த 'கிரீடம்’ பட வாய்ப்பு கிடைத்தது. டைரக்டருக்கு அது முதல் படம், எனக்கு இரண்டாவது படம். அப்புறம், டைரக்டர் வெற்றிமாறனின் முதல் படமான 'பொல்லாதவன்’. நான், விஜய், வெற்றிமாறன் மூவருமே ஒரே நேரத்தில் சினிமாத் துறையில் களம் இறங்கியவர்கள்.''

''வேறு மொழிகளில்?''

''தெலுங்கு இயக்குநர் கருணாகரன் இயக்கிய 'உல்லாசம்ஹா உத்சஹம்ஹா’ என்ற படம்தான் என்னுடைய முதல் தெலுங்கு காலடி. இதுவரை, அவருடைய மூன்று தெலுங்குப் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறேன். அதில், இரண்டு படங்கள் சூப்பர் ஹிட். இந்தியில் அக்ஷய் குமாரின் 'ஜோக்கர்’ படத்துக்கு நான்தான் இசை.''

''வாழ்க்கையில் இழந்தது..?''

''சிலவற்றை இழந்தால்தான் நாம் விரும்பியது கிடைக்கும். இதுதான் வாழ்க்கை நியதி. ஆனால், நான் பெரிதாக எதையும் இழந்து விடவில்லை. எனக்குத் தேவையான நேரத்தை என்னால் ஒதுக்கிக்கொள்ள முடிகிறது. ஊர்சுற்றுவது எனக்குப் பிடிக்காது. ஆனால், இப்போது... அடிக்கடி வெளி மாநிலங்களுக்கோ, வெளிநாடுகளுக்கோ செல்ல வேண்டியிருக்கு. இருந்தாலும், விருப்பத்தோடு செல்வதால் கஷ்டமாகத் தெரியவில்லை. இசை அமைப்பாளர் ஆன பிறகு ரொம்ப சந்தோஷமாக இருக்கேன்.''

9 வருஷ லவ்...

''நண்பர்கள்?''

'எனக்கு கூச்ச சுபாவம். என் கூண்டுக்குள்தான் இருப்பேன். அவ்வளவு சீக்கிரம் யாரிடமும் பழகிவிட மாட்டேன். அதனால், நண்பர்கள் ரொம்பவும் குறைவு. மிக நெருங்கிய நண்பர்களின் பார்ட்டிக்கு மட்டும்தான் போவேன். நியூயார்க்ல பிரவீன், நியூஸிலாந்துல ப்ரீத்தினு ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாட்டில் இருக்காங்க.  பள்ளித் தேர்வில் பிட் அடிக்கும்போதுதான் ப்ரீத்தியுடன் நட்பானேன். அப்படிப்பட்ட கிரேட் ஃபிரெண்ட்ஷிப் எங்களுடையது. என் காதலுக்காக நிறைய தூது போயிருக்கா ப்ரீத்தி. ஸ்ரீஹரி, நவீன் அய்யர்னு என்கூட சேர்ந்து கச்சேரி செய்த நட்பு வட்டங்களும் இருக்கு.''

''பிடித்த பாடல்கள்?''

''பூக்கள் பூக்கும் தருணம் (மதராசப்பட்டினம்), தாய் தின்ற மண்ணே (ஆயிரத்தில் ஒருவன்), இந்தப் பாதை எங்கு போகும் (ஆயிரத்தில் ஒருவன்)... இதெல்லாம் நான் இசை அமைத்ததில் எனக்குப் பிடித்த பாடல்கள். ஏ.ஆர்.ரஹ்மான் மியூஸிக்ல, நியூயார்க் நகரம் (சில்லுனு ஒரு காதல்) ரொம்பப் பிடிக்கும். அப்புறம், 'அலைபாயுதே’, 'தில்சே’ படங்களில் மொத்தப் பாடல்களும் பிடிக்கும். இளையராஜான்னா, 'மௌனராகம்’, 'மூன்றாம்பிறை’, தளபதி’ பிடிக்கும். மற்றபடி நிறைய ஹிந்திப் பாடல்களைத்தான் விரும்பிக் கேட்பேன். பின்னணி இசையைப் பொறுத்த வரை, என்னுடைய, 'ஆடுகளம்’, 'ஆயிரத்தில் ஒருவன்’, 'மதராசப்பட்டினம்’, 'தெய்வத்திருமகள்’ பிடிக்கும்.''

''கல்யாணம்..?''

''பெரும்பாலான நண்பர்களுக்குத் திருமணம் ஆயிடுச்சு. நானும் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் கல்யாணம் பண்ணிக்கப் போறேன். அது யாருன்னு உங்களுக்கே தெரியும். யெஸ், சைந்தவி! பத்தாம் வகுப்பு படிக்கும்போதே அவளைத் தெரியும். ஒன்பது வருஷமா லவ் பண்றோம். நான் பார்த்ததுலேயே ஒன் ஆப் த பெஸ்ட் பெர்சன். ரொம்ப ஸ்வீட். ஸ்ட்ரெயிட் ஃபார்வேர்டு. கோபம் வந்தா சட்டுனு காட்டமாட்டா. மெதுவா எடுத்துச்சொல்லி புரிய வைப்பா. அவளுக்கு பொறுமை ஜாஸ்தி. நான் நேர்எதிர். இந்த முரண்பாடுதான் எங்களுக்குள்ள நெருக்கத்தை ஏற்படுத்தியிருக்கணும்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism