Published:Updated:

``ஶ்ரீ ரெட்டி போதாது, இப்போ இது வேறயா... அவங்களை சும்மா விடமாட்டேன்!" - ஜீவிதா ராஜசேகர்

``ஶ்ரீ ரெட்டி போதாது, இப்போ இது வேறயா... அவங்களை சும்மா விடமாட்டேன்!" - ஜீவிதா ராஜசேகர்

``ஶ்ரீ ரெட்டி போதாது, இப்போ இது வேறயா... அவங்களை சும்மா விடமாட்டேன்!" - ஜீவிதா ராஜசேகர்

``ஶ்ரீ ரெட்டி போதாது, இப்போ இது வேறயா... அவங்களை சும்மா விடமாட்டேன்!" - ஜீவிதா ராஜசேகர்

``ஶ்ரீ ரெட்டி போதாது, இப்போ இது வேறயா... அவங்களை சும்மா விடமாட்டேன்!" - ஜீவிதா ராஜசேகர்

Published:Updated:
``ஶ்ரீ ரெட்டி போதாது, இப்போ இது வேறயா... அவங்களை சும்மா விடமாட்டேன்!" - ஜீவிதா ராஜசேகர்

 தமிழில் முன்னணி நடிகையாகயிருந்த ஜீவிதா, தன்னுடன்  பல படங்களில் சேர்ந்து நடித்த டாக்டர் ராஜசேகரனைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்.  தற்போது தெலுங்கு சினிமாவில் தயாரிப்பாளராக வலம் வருகிறார். தங்களது முதல் மகள் ஷிவானியைத் தமிழில் நடிகையாக்கும் முயற்சியில் தீவிரமாக இருக்கிறார்கள், ராஜசேகர் -  ஜீவிதா தம்பதி. 

இந்நிலையில்,  இந்தத் தம்பதிகளின் மீது சமூக ஆர்வலர் சந்தியா என்பவர், ``ஜீவிதா தனது கணவர் ராஜசேகரனுக்காக பல இளம் பெண்களைக் கட்டாயப்படுத்திப் படுக்கைக்கு அனுப்பியிருக்கிறார். இதைப் பலரும் சொல்ல, நான் கேள்விப்பட்டிருக்கிறேன்" என டி.வி ஷோ ஒன்றில் கூறியுள்ளார். இதனால் மிகவும் அதிர்ச்சியடைந்த நடிகை ஜீவிதா, சந்தியா மீது அவதூறு வழக்கு ஒன்றைப் பதிவு செய்துள்ளார். ஏற்கெனவே நடிகை ஶ்ரீ ரெட்டி கிளப்பியிருக்கும் பல்வேறு பாலியல் விவகாரங்களுக்கு இடையில், இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. இதுகுறித்து, நடிகை ஜீவிதாவிடம் பேசினேன். 

``தெலுங்கு சினிமாவை நடிகை ஶ்ரீ ரெட்டி ரொம்பவே அசிங்கப்படுத்தி, கேவலப்படுத்திக்கிட்டு இருக்காங்க. சினிமாவைப் பொறுத்தவரைக்கும் எல்லா விதமான பெண்களும் இருப்பாங்கனு இந்தத் துறையில இருக்கிற எல்லோருக்கும் தெரியும். சிலர், `சினிமா வாய்ப்புக்காக நான் என்ன வேணாலும் பண்ண ரெடி'னு சொல்லி, எல்லாத்துக்குமே தயாரா இருப்பாங்க. தன் திறமையை வளர்த்துக்கிட்டு, இயக்குநர்களையே தங்களைத் தேடி வரவைக்கிற நடிகைகளும் இருக்காங்க. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எந்தவொரு நடிகையும் திறமையை விட்டுக் கொடுத்துட்டு போயிடமாட்டாங்க. ஆனா, இந்த ஶ்ரீ ரெட்டி, ``எல்லா சினிமாத்துறைகளும் விபசாரம் நடக்குற இடம். இங்கே நடிகையாக இருக்குற எல்லாப் பெண்களும் அப்படிதான். பெண்கள் தங்களைப் பகிர்ந்துக்கிட்டாதான் சினிமா வாய்ப்பே கிடைக்கும். அதுமட்டுமல்லாம, தயாரிப்பாளர் இஷ்டப்படி இருக்கணும்னுதான் பாலிவுட்டிலிருந்து பல பெண்களை சினிமாவுக்குக் கொண்டு வர்றாங்க. இந்தியிலிருந்து சினிமாவுக்கு வந்த எல்லா ஹீரோயின்ஸூம் இப்படிதான்'னு கன்னாபின்னானு பேசுறாங்க. கூடவே, சில தயாரிப்பாளர்களோட மகனுடன் அவர் இருக்கும் புகைப்படங்களையும் லீக் பண்ணியிருக்காங்க. ஆனா, அந்தப் போட்டோக்களையெல்லாம் பார்த்தா, எந்தவிதமான பாலியல் துன்புறுத்தலும் அதுல இல்லை.   

ஶ்ரீ ரெட்டியாவே இஷ்டப்பட்டு அந்தப் பையனை கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுக்குற மாதிரிதான் இருக்கு. நெட்ல பார்த்தா உங்களுக்கே தெரியும். இந்தப் பிரச்னைக்குத் தெலுங்கு டி.வி சேனல் ஒன்று, தினமும் ஶ்ரீ ரெட்டி, ஜூனியர் ஆர்ட்டிஸ்ட், சமூக சேவகர்னு சிலபேரைக் கூப்பிட்டுப் பஞ்சாயத்து பண்ணிக்கிட்டு இருக்காங்க. அப்படி ஒரு ஷோவுலதான், சந்தியாங்கிற பொண்ணையும் பேச வெச்சிருக்காங்க. அப்போ அந்த அம்மா, `ஜீவிதா ராஜசேகர் ஒரு பேட்டியில சொல்லியிருக்காங்க. சினிமாத்துறை ரொம்ப நல்லாயிருக்கு. இங்கே தப்பே நடக்கலைனு. ஜீவிதா தன்னுடைய கணவருக்காகவே பொண்ணுங்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புனது எனக்குத் தெரியும். அமீர்பேட்டை ஏரியாவுல இருக்கிற ஹாஸ்டலுக்குப் போன் பண்ணி நிறைய பொண்ணுங்களை மிரட்டி தன் கணவருக்கு சப்ளை பண்ணாங்க. எங்ககிட்ட அந்தப் பொண்ணுங்க வந்து அழுதாங்க. நாங்க அப்போ அதைப் பெருசாக்க வேணாம்னு விட்டுட்டோம்!"னு பேசியிருக்காங்க. 

ஆக்சுவலா, சினிமாத்துறையில் நடக்கும் பிரச்னைகளைக் கண்காணிக்க ஒரு கமிட்டி அமைக்கணும்னு அரசிடமிருந்து ஆர்டர் வந்தது. அந்தக் கமிட்டிக்கு என்னையும், ஜெயசுதா மேடமையும் தலைவியா நியமிக்க பரிசீலனை பண்ணியிருக்காங்க. இந்தக் கமிட்டிக்கு நான் தலைவியா வரக் கூடாதுனுதான், இப்படி ஒரு புரளியைக் கிளப்பி விட்டிருக்காங்க. சினிமாத்துறையில இருக்குறவங்களும் இதைத்தான் பேசிக்கிறாங்க. ஆனா, சந்தியா ஏன் அப்படிப் பேசணும்னு எனக்குத் தெரியலை!"  

என்னைப் பத்தி சந்தியா இவ்வளவு கேவலமா சொல்லியிருக்காங்க. டி.வியில பேசுனது மட்டுமல்லாம, யூ-டியூப்லேயும் இதை ஷேர் பண்ணி, அதைப் பல யூ-டியூப் சேனல்கள்ல ஒளிபரப்பியிருக்காங்க. எங்க குடும்பத்தையே அசிங்கப்படுத்தியிருக்காங்க. நான் சில வருடங்களாகவே எந்தவொரு டி.வி சேனல்களோட  நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கிறதில்லை. ஏன்னா, அவங்க இஷ்டத்துக்குக் கேள்வி கேட்பாங்க. நாம சொல்ற பதிலையும் எடிட் பண்ணி, அவங்களுக்கு என்ன தேவையோ  நம்ம சொல்லுற பதிலையும் எடிட் பண்ணி அவங்களுக்குத் தேவையானதை மட்டும் ஒளிபரப்புவாங்க. இதை நான் ஒரு பிரஸ் மீட் வெச்சே சொல்லியிருக்கேன். இப்போம் சந்தியா மேல கிரிமினல் வழக்கு தொடுத்திருக்கேன். அந்த டி.வி சேனல் மீதும் வழக்கு கொடுத்திருக்கேன். 

ஶ்ரீ ரெட்டி பத்து வருடமா சினிமாத் துறையில இருக்காங்க. ஒருதடவை ஏமாந்து போனாங்கன்னா பரவாயில்லை. தொடர்ந்து பத்து வருடத்துக்கு ஏமாந்துக்கிட்டே இருப்பாங்களா... சின்னக் குழந்தையா அவங்க? யார் எதைச் சொன்னாலும் டிவியில போட்ருவாங்களா... இதனாலதான், நான் எந்த டிவி நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கிறதில்லை.  

தவிர, சந்தியாவோட வேலையே டி.வி டாக் ஷோக்கள்ல கலந்துக்கிறதுதான். எல்லா டி.வியிலேயும் அவங்களைப் பார்க்கலாம். எப்போ பார்த்தாலும் அந்த அம்மா சினிமாவைப் பத்தி தப்பாதான் பேசுறாங்க. நேற்றுகூட ஒரு டி.வி ஷோவுல, `நான் ஜீவிதா மேடமை குறைசொல்லலை. அவங்க கணவரைத்தான் தப்பா சொன்னேன், இவங்க ஏன் கோப்படுறாங்க'னு இவங்களே பதில் சொல்றாங்க. என்னைப் பத்தி பேசிட்டு, என்னைப் பத்தி சொல்லலைனா என்ன அர்த்தம்? தவிர, பலர் சொன்னதை வெச்சுதான் அதைச் சொன்னேன்னு சொல்றாங்க. இந்தப் பிரச்னைக்கு கோர்ட் மூலமா நிச்சயம் தீர்வு கிடைக்கும்னு நம்புறேன். ஏன்னா, சினிமான்னாலே தப்பான விஷயம் நடக்குற இடம்ங்கிற அடையாளத்தைக் கொடுத்துட்டாங்க சந்தியா. அதை மாத்தணும். 

என் குடும்பம் நல்ல குடும்பம். எங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க இருக்காங்க. என் கணவர் டாக்டராக இருந்து, நடிகர் ஆனவர். அவரோட சகோதரர்கள் எல்லாரும் போலீஸ் டிபார்ட்மென்டை சேர்ந்தவங்க. இப்போ என் பொண்ணு நடிக்க வந்துட்டா, அவளும் டாக்டருக்குப் படிச்சிட்டுதான் வந்திருக்கா... நாளைக்கு இன்னோரு வீட்டுக்குப் போய் மருமகளா வாழப்போறா. அப்படியிருக்கும்போது எங்க குடும்பத்தைப் பத்தி அவதூறா பேசுனது தப்பு. 30 வருடமா சினிமாத்துறையில இருக்கோம். யாரும் புகார் சொல்ற மாதிரி இதுவரைக்கும் எங்க ஃபேமிலி நடந்துக்கிட்டது இல்லை. என்னைப் பத்தி மட்டுமல்ல, யாரைப் பத்தி சினிமாவுல பேசியிருந்தாலும் சினிமாவைச் சேர்ந்தவங்க வந்து கேட்கணும். இதையெல்லாம் கேட்டுட்டு சும்மா இருக்க, எனக்கே கேவலமா இருக்கு. தப்பு எல்லா இடத்துலேயும் நடக்குது. எங்கே தப்பு நடக்குதுனு ஆதாரத்தோட சொல்லட்டும்... நானே செருப்பால அடிக்கிறேன். 
 
சந்தியா பேசுனதுனால எங்க குடும்பமே மன வருத்தத்தில் இருக்கோம். என் கணவர் இப்போதான் அவங்க அம்மா இறந்த துக்கத்திலிருந்து மீண்டு வந்திருக்கார். கண்டிப்பா, இவங்களுக்குத் தண்டனை வாங்கித் தரணும்" என்கிறார். இவ்வாறு ஆதங்கத்துடன் சொல்லி முடித்தார் ஜீவிதா. 


 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism