Published:Updated:

"விஸ்வரூபம் 2, காலா, இரும்புத்திரை.. கோடை விடுமுறைக்கு எந்தெந்த படங்கள் ரிலீஸ்?"

"விஸ்வரூபம் 2, காலா, இரும்புத்திரை.. கோடை விடுமுறைக்கு எந்தெந்த படங்கள் ரிலீஸ்?"
"விஸ்வரூபம் 2, காலா, இரும்புத்திரை.. கோடை விடுமுறைக்கு எந்தெந்த படங்கள் ரிலீஸ்?"

48 நாட்களாக தமிழ் சினிமாவில் நடந்த 'சீரமைப்பு' பணிகளைத் தொடர்ந்து ரிலிஸுக்கு ரெடியாக இருக்கும் படங்களின் நிலை குறித்த அப்டேட்ஸ்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலைநிறுத்தம் முடிந்து கிட்டத்தட்ட 50 நாட்கள் கழித்து, புதிய தமிழ்ப் படங்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன. ஸ்ட்ரைக் காரணமாக பல படங்கள் ரிலீஸ் ஆகாமல் தேங்கின. அதை சரிசெய்ய, இரு சிறப்புக் குழு அமைக்கப்பட்டு ரிலீஸுக்குத் தயாராக இருக்கும் படங்களைத் தயாரிப்பாளர்களின் விருப்பத்திற்கேற்ப தேதிகளை ஒதுக்கி முறைப்படுத்தி வருகின்றன. வழக்கமாக, தமிழ்ப் புத்தாண்டு மற்றும் கோடை விடுமுறை வெளியீடாக பல பெரிய நட்சத்திரங்களின் படங்கள் ரிலீஸ் ஆகும். "தமிழ் சினிமாவில் ஏப்ரல் 14 ரிலீஸ் என்ற பாரம்பரியம் ஆரம்பித்த நாளிலிருந்து, இந்த வேலை நிறுத்தம் காரணமாக இந்த வருடம் மட்டும்தான் படங்கள் வெளியாகவில்லை" என்பது பலரின் கருத்து.    

"தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தை எந்தத் தேதியில் வெளியிட வேண்டும் என்று பட்டியல் கொடுத்திருக்கிறார்கள். ஒரு வாரத்திற்கு எத்தனை படங்கள் வெளியிடலாம் என்பதை வர்த்தக சூழ்நிலைகளை வைத்து முடிவெடுக்க வேண்டும்" என்கிறார், தயாரிப்பாளர் சங்கப் பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு. 

அதன் அடிப்படையில் ஏப்ரல் 27-ஆம் தேதி 'பக்கா', 'தியா', 'பாஸ்கர் ஒரு ராஸ்கல்' ஆகிய படங்கள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. கோடை விடுமுறை ஒரு பக்கம் இருக்க, பெரிய நடிகர்களின் படங்கள் ஆந்திரா, கேரளா, கர்நாடகா என பிற மாநிலங்களிலும், அதில் சில படங்கள்  தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஒரே சமயத்தில் ரிலீஸ் ஆகி வருகின்றன. இந்நிலையில், அந்தந்த மாநில மொழிப் படங்களின் வெளியீடுகளை அனுசரித்துக்கொண்டு படங்களை ரிலீஸ் செய்வதில் சில சிக்கல்கள் உண்டு எனப் பிற மாநில விநியோகஸ்தர்கள் கூறுகிறார்கள்.

மேலும், மே 15-ஆம் தேதி முதல் ரம்ஜான் மாத நோன்பு ஆரம்பிக்கவிருப்பதால், தமிழ் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் மலேசியா, ஐக்கிய அரேபிய எமிரேட்ஸ் போன்ற நாடுகளில் படங்களை வெளியிடுவதும் வர்த்தக ரீதியில் சரியாக இருக்காது என்று வெளிநாட்டு விநியோகஸ்தர்களும் சொல்கிறார்கள். இப்படிப் பல சிக்கல்களை எதிர்கொண்டு, கோடை விடுமுறையில் பல படங்கள் ரிலீஸுக்கு ரெடியாக இருக்கின்றன.  

டீஸர் வெளியீட்டுக்குப் பிறகு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாலும், ரஜினியின் அரசியல் அறிவிப்புக்குப்பின் வெளியாகவுள்ள படம் என்பதாலும் 'காலா' ரிலீஸ் பற்றிய பரப்பரப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கிறது. ‘காலா’ படம் ஜூன் 7-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனவர் 26-ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்த 'டிக் டிக் டிக்' திரைப்படத்தைத் தற்போது, மே 11-ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாகவிருந்த 'கீ', 'இரும்புத்திரை' ஆகிய இரு திரைப்படங்கள் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 'ரிலீஸ் ரெகுலேசன் கமிட்டி ' முடிவுக்காகக் காத்திருக்கிறது.. 

மார்ச் 23-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட 'கோலிசோடா 2' திரைப்படம் மற்றும் 'விஸ்வரூபம் 2', 'செம', 'பார்ட்டி', 'நட்புனா என்னானு தெரியுமா', 'காளி', 'மிஸ்டர் சந்திரமௌலி', 'ஆர்.கே. நகர்', 'கஜினிகாந்த்', 'நடிகையர் திலகம்' ஆகிய படங்கள் மே மாதம் கோடை விடுமுறை வெளியீடாக திரைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

அமேஸான், நெட்ஃப்ளிக்ஸ் போன்ற இணையதளங்கள் பல்வேறு நாடுகளிலிருக்கும் படங்கள், தொடர்கள் என போன்களுக்கே கொண்டுவந்து மக்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு வாரமும் ரிலீஸாகும் படங்களின் எண்ணிக்கை குறைவாகவும், தரமான படங்களாவும் இருக்கும் பட்சத்தில், புதிய தமிழ்ப்படங்கள் ரசிகர்களுக்கும், தயாரிப்பாளருக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கலாம்!     

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு