Published:Updated:

''ஆபீஸ் போட்டுட்டேன்; ஆந்திராவுக்கு போறேன்" - ஞானவேல் ராஜா விரக்தி!

உ. சுதர்சன் காந்தி.

அல்லு அர்ஜுன் படத்தின் பிரஸ் மீட்டில் நடிகர்கள் தயாரிப்பாளர்கள் நிலைமை அறிந்து சம்பளத்தை குறைக்க வேன்டும் என்று ஞானவேல் ராஜா கூறியுள்ளார்

''ஆபீஸ் போட்டுட்டேன்; ஆந்திராவுக்கு போறேன்" - ஞானவேல் ராஜா விரக்தி!
''ஆபீஸ் போட்டுட்டேன்; ஆந்திராவுக்கு போறேன்" - ஞானவேல் ராஜா விரக்தி!

அல்லு அர்ஜுன் நடிப்பில் தெலுங்கில் உருவாகி இருக்கும் படம், 'நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா'. அது தமிழில், 'என் பெயர் சூர்யா என் வீடு இந்தியா' என்ற பெயரில் டப் செய்யப்பட்டு, அடுத்த மாதம் வெளிவர இருக்கிறது. அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஞானவேல் ராஜா, 

"விஷால் தலைமையில இந்த 50 நாள் ஸ்டிரைக் முடிஞ்சுது. தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் இவங்க எல்லோருடைய ஆதரவோடு சில மாற்றங்களும் தீர்மானங்களும் கொண்டுவரப்பட்டுச்சு. தெலுங்கு இன்டஸ்ட்ரிகிட்ட இருந்து நாம கத்துக்கவேண்டியது நிறையவே இருக்கு. சின்னச்சின்ன விஷயங்களைச் சரி செஞ்சாச்சு. ஆனால், நடிகர்கள் சம்பளம் மாதிரியான பெரிய விஷயங்களை நடிகர் சங்கம் தலையிட்டு நல்ல முடிவைச் சொல்லணும். உதாரணத்துக்கு, தமிழ்ல 100 கோடி ரூபாய் வியாபாரம் இருக்குன்னா, 50 கோடி ரூபாய் சம்பளம் கேட்குறாங்க. அதுல 10 கோடி ரூபாய் அட்வான்ஸா கேட்குறாங்க. ஆனா, தெலுங்குல 15 கோடி ரூபாய் சம்பளமும் 50 லட்ச ரூபா அட்வான்ஸும் கொடுத்தா போதும். அந்த புரிதல் தெலுங்கு நடிகர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் நிறையவே இருக்கு. அதுனாலயே அந்த இன்டஸ்ட்ரியே சுபிக்‌ஷமா இருக்கு.

தமிழ்ல அப்படி இல்லை. சுயநலமா நிறைய விஷயங்கள் நடந்துட்டு இருக்கு. போன மீட்டிங்ல கார்த்தி பேசுன மாதிரி, வியாபாரத்தைக் கணக்கிட்டு நடிகர்கள் சம்பளத்தை நிர்ணயம் பண்ணணும். மத்த செலவு எல்லாம் சேர்க்காமல், நடிகர்கள் சம்பளம் மட்டும் ஒரு நாளுக்கு பல லட்சங்கள் செலவாகுது. எல்லோரும் தயாரிப்பாளர் நிலைமையைப் புரிஞ்சு நடந்துக்கணும். இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள இந்தச் சூழல் மாறணும். நான் ஏற்கெனவே அங்க ஒரு ஆபீஸ் வாங்கிட்டேன். தமிழுக்கு டாடா சொல்லிட்டு, எங்கே வாழ முடியுமோ அதைத் தேடி போகுற சூழல் வந்திடும். படம் எடுத்து நஷ்டமாகுறதைவிட, எங்கே படம் பண்ணா லாபம் வருமோ, அங்கே போய் படம் பண்ற மனநிலைக்கு வந்துட்டேன்" என்றார்.