Published:Updated:

செய்தியாளர்கள் பற்றிய எஸ்.வி.சேகர் கருத்து மன்னிக்க முடியாதது.! ரஜினிகாந்த் கண்டனம்

கார்த்திக் துரைமகாராஜன்.சி
செய்தியாளர்கள் பற்றிய எஸ்.வி.சேகர் கருத்து மன்னிக்க முடியாதது.! ரஜினிகாந்த் கண்டனம்
செய்தியாளர்கள் பற்றிய எஸ்.வி.சேகர் கருத்து மன்னிக்க முடியாதது.! ரஜினிகாந்த் கண்டனம்

செய்தியாளர்களைப் பற்றி எஸ்.வி.சேகர் பதிவு செய்தது மன்னிக்க முடியாத குற்றம் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் பற்றிய எஸ்.வி.சேகர் கருத்து மன்னிக்க முடியாதது.! ரஜினிகாந்த் கண்டனம்

நடிகர் ரஜினிகாந்த், உடல்நல சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அதற்கு முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார் ரஜினிகாந்த். அப்போது பேசிய அவர், ``சீருடையில் இருக்கும் காவல்துறை அதிகாரிகளைத் தாக்கியது தவறு. காவலர்களும் சட்டம்- ஒழுங்கு கையில் இருக்கு என்று வரம்பு மீறக்கூடாது. ஆடிட்டர் குருமூர்த்தி என்னுடைய 25 வருட நண்பர். நாங்கள், அடிக்கடி சந்திப்பது வழக்கம். நான் கட்சி தொடங்குவது உறுதி. ஆனால், இன்னும் நாள் உறுதியாகவில்லை. பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் அனைவருக்கும் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும். செய்தியாளர்கள் பற்றி இழிவாகப் பதிவுசெய்த எஸ்.வி.சேகர் செய்தது மன்னிக்க முடியாத குற்றம். அரசியலில் விமர்சனம் தவிர்க்க இயலாத ஒன்று'' என்று தெரிவித்தார்.