Published:Updated:

60 வயது நடிகை ஜீனத் அமன் மறுமணம்; காதலர் சிவசேனா பிரமுகர்?

 60 வயது நடிகை ஜீனத் அமன் மறுமணம்; காதலர் சிவசேனா பிரமுகர்?
60 வயது நடிகை ஜீனத் அமன் மறுமணம்; காதலர் சிவசேனா பிரமுகர்?
 60 வயது நடிகை ஜீனத் அமன் மறுமணம்; காதலர் சிவசேனா பிரமுகர்?

மும்பை: இந்தி நடிகை ஜீனத் அமன், மறுமணம் செய்ய முடிவு செய்து இருக்கிறார்.இவருக்கு வயது 60. மீண்டும் இளமையை உணர்வதால் இந்த திருமணம் என்கிறார் அவர்.

கடந்த 1970 ஆம் ஆண்டுகளில் இந்தி சினிமா  உலகின் கவர்ச்சி  கன்னியாக‌ நடிகை ஜீனத் அமன். இருந்தார்.  அவர் சினிமாவுக்கு வரும் முன்பு மாடல் அழகி. இந்திய அழகிப் போட்டியில் இரண்டாவது  இடம் பிடித்தவர்.

யாதோங்கி பாரத், ஹரே ராமா ஹரே கிருஷ்ணா போன்ற படங்களில் பாடல் காட்சிகளின் மூலம் பிரபலமான ஜீனத் அமன், முதலில் நடிகர் சஞ்சய்கானுடன் கிசுகிசுக்கப்பட்ட ஜீனத் அமன், பின்னர் நடிகர் மாசர்கானை திருமணம் செய்து கொண்டார்.

கடந்த 1998 ஆம் ஆண்டில் மாசர்கான் இறந்துவிட்டார். ஜீனத் அமனுக்கு அஜான் (வயது 26), ஜகான் (23) என‌ இரு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில், 60 வயதை எட்டிய ஜீனத் அமன் மீண்டும் திருமணம் செய்ய முடிவு செய்து இருக்கிறார்.

இது குறித்து செய்தியாளர்கள் அவரை சந்தித்தபோதும், தான் மறுமணம் செய்யப்போவது யார்? என்பதை தெரிவிக்க மறுத்த ஜீனத், அவர் இந்தியாவை சேர்ந்தவர் என்று மட்டும் தெரிவித்தார். மறுமண முடிவால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். மீண்டும் இளமையை உணர்கிறேன் என்றும், அவர் குறிப்பிட்டுள்ளார். .மகன்கள் இருவரும்  இத்திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்து இருப்பதாகவும் ஜீனத் அமன் கூறியுள்ளார்.

சிவசேனா பிரமுகர்

இதனிடையே புனேவை சேர்ந்த சிவசேனா தலைவர் சர்ஃபரஸ் அகமத் என்பவரையே கைப்பிடிக்க இருப்பதாகவும், கடந்த 6 மாதங்களாகவே அவர்கள் இருவரும் அவ்வப்போது சந்தித்து வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.