Published:Updated:

``கார்த்திக்... என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களானு கேட்கணும்போல இருக்கு!" - விஜி சந்திரசேகர்

``கார்த்திக்... என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களானு கேட்கணும்போல இருக்கு!" - விஜி சந்திரசேகர்
``கார்த்திக்... என்னை கல்யாணம் பண்ணிக்குவீங்களானு கேட்கணும்போல இருக்கு!" - விஜி சந்திரசேகர்

`மிஸ்டர். சந்திரமெளலி' படத்தின் இசை வெளியீட்டு விழா சுவாரஸ்யங்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

48 நாள்களாக நடந்த தமிழ் சினிமா ஸ்டிரைக்கிற்குப் பிறகு, முதல் சினிமா நிகழ்ச்சியான 'மிஸ்டர். சந்திரமௌலி' படத்தின் இசை வெளியீட்டு விழா, சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதைக் கொண்டாட்டமான விழாவாக நடத்த வேண்டும் என்பதற்காக பல சினிமா பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். இயக்குநர் திரு, கார்த்திக், கெளதம் கார்த்திக், ரெஜினா, வரலட்சுமி, சூர்யா, ஆர்யா, சதீஷ், விஜி சந்திரசேகர், தயாரிப்பாளர் தனஞ்செயன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசினர். இப்படத்தில் நடிகர் சூர்யாவின் தங்கை பிருந்தா முதல் முறையாகப் பாடகியாக அறிமுகம் ஆகியிருக்கிறார். ``சிறு வயதிலிருந்தே பாட்டு பாடணும்ங்கிறது கனவு. அதை நனவாக்கி வெச்ச தனஞ்செயன் சாருக்கு நன்றி. இந்தப் பாட்டு எனக்காகவே கம்போஸ் பண்ணமாதிரி இருந்துச்சு. என்னோட குரு எனக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைச்சதை நினைச்சு ரொம்பவே சந்தோஷப்பட்டார்" என்று முதலில் மேடையேறிப் பேசினார், பிருந்தா. 

இதுகுறித்து சூர்யா, ``70-களில் பொறந்தவங்களுக்கு மட்டும்தான் சந்திரமௌலியோட அருமை தெரியும். 86-ல 'மௌன ராகம்' படம் ரிலீஸ் ஆச்சு. அந்தக் காலத்துல வாழ்ந்தவங்க எல்லாரும் கார்த்திக் சாரைப் பார்த்துதான் காதலிக்கக் கத்துக்கிட்டாங்க. தனஞ்செயன் சார் எங்க குடும்பத்துல நடக்குற முக்கியமான விசேஷங்கள்ல தவறாம கலந்துக்குவார். அவர், என் தங்கை பிருந்தாவுக்கு இப்படியொரு வாய்ப்பு கொடுத்ததுக்கு நன்றி." என்று கூறினார். 

காமெடி நடிகர் சதீஷ் பேசும்போது, ``வரலட்சுமி முதல் முறையாக இப்படியொரு ரோல்ல நடிச்சிருக்காங்க. ரெஜினா இந்தப் படத்துல ரொம்ப கவர்ச்சியா நடிச்சிருக்காங்க. இனி ரெண்டு மாசத்துக்கு இந்தப் படத்தோட பாடல்கள்தான் எங்கே பார்த்தாலும் பிளே ஆகும்னு நினைக்கிறேன். இசையைப்பாளர் சாம் 'விக்ரம் வேதா' படத்துக்குப் பிறகு தமிழ்ல ஏகப்பட்ட படங்கள்ல கமிட் ஆகியிருக்கார். ஜெகன் இந்தப் படத்துல ரெண்டு சீனுக்கு வந்துட்டு போவார். எங்களுக்குள்ள இருக்கிற நட்புக்காக இந்தப் படத்துல சின்ன ரோல்ல நடிக்க சம்மதிச்சார். இந்தப் படத்துல வாய்ப்பு கொடுத்த திரு சாருக்கு நன்றி" என்றார். 

``எங்க அப்பாகூட வேலை பார்க்கும்போது கார்த்திக் சாரை தூரத்துல நின்னு பார்த்திருக்கேன். இன்னைக்கு அவரோட வேலை பார்க்கிறதுக்கான வாய்ப்பு கிடைச்சிருக்கிறதை நினைக்கும்போது ரொம்பப் பெருமையா இருக்கு. இசையமைப்பாளர் சாம்கூட எனக்கு இது ரெண்டாவது படம். இந்தப் படத்துல நடிக்க ஓகே சொன்னதுக்குக் காரணம், இயக்குநர் திரு சார்தான். திரு என்னுடைய நெருங்கிய நண்பர். ஆன் ஸ்க்ரீன்ல கெளதம் ரொம்ப அழகா இருக்கார். நாங்க எல்லோரும் சேர்ந்து நடித்த இந்தப் படத்தை தியேட்டர்ல போய் பாருங்க." என்றார், நடிகை வரலட்சுமி.  

ரெஜினா பேசும்போது, ``திரு சார் நல்ல இயக்குநர் மட்டுமல்ல. நல்ல எழுத்தாளர், விமர்சகர், நண்பரும்கூட. என் வாழ்க்கையில பார்த்த பெஸ்ட் ஒளிப்பதிவாளர்கள்ல ரிச்சர்ட்டுக்குதான் முதல் இடம். எல்லோரும் காலையில ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரும்போது சாதாரண டி-ஷர்ட்லதான் வருவாங்க. ஆனா, ரிச்சர்ட் ரொம்ப ப்ரொபெஷனலா வருவார். நம்மளை எப்படி அடையாளப்படுத்திக்கணும்னு அவர்கிட்ட இருந்துதான் நான் கத்துக்கிட்டேன். இந்தப் படத்துல வர்ற ஒரு பாடலை கடலுக்கு அடியில ஷூட் பண்ணோம். கேமராமேன், நடன இயக்குநர்கள் எல்லாரும் எங்ககூட சேர்ந்து கஷ்டப்பட்டு அந்த அவுட்-புட் கொண்டுவந்தாங்க. அதுக்கான எல்லா கிரெடிட்டும் பிருந்தா மாஸ்டருக்குத்தான் போய்ச்சேரும். காஸ்டியூம் டிசைனர் ஜெயலட்சுமிக்கு என்னோட நெஞ்சார்ந்த நன்றிகள். ரொம்ப கவர்ச்சியா, அதே சமயம் எந்த நெருடலும் இல்லாமல் காஸ்டியூம்ஸ் டிசைன் பண்ணியிருந்தாங்க" என்றார்.  

விஜி சந்திரசேகர், ``என் இத்தனை வருட சினிமா பயணத்துல தயாரிப்பாளர் தனஞ்செயன் சார் மாதிரி ஒரு மென்மையான மனிதரைப் பார்த்ததில்ல. கார்த்திக் சார்கிட்ட, `என்னைக் கல்யாணம் பண்ணிக்குவீங்களா?'னு கேட்கணும்போல இருக்கு. அந்த அளவுக்கு அவரை நான் காதலிக்கிறேன். திரு சார் ரொம்ப அமைதியா இருந்தாலும், எல்லார்கிட்ட இருந்து ஈஸியா வேலை வாங்கிடுவார். சதீஷ் படத்துல இருக்கிறதுனால காமெடிக்குப் பஞ்சமே இல்லை" என்று கூறினார். 

கார்த்திக் பேசியபோது, ``மகேந்திரன் சார் படத்துல நடிக்கணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். அது நடக்காமலேயே போயிடுச்சு. ஆனா, அவர் ஆசைப்பட்ட மாதிரி ஒரு படத்துல நடிச்சிட்டேன். அகத்தியன் சாரோட படங்கள் பூஜை போட்ட அடுத்த 75-வது நாள் தியேட்டருக்கு வந்துடும். அந்த வேகம் இயக்குநர் திருகிட்டேயும் இருக்கு. 81-ல சினிமாவுக்குள்ள வந்துட்டேன். இப்போவரைக்கும் நான் நடித்த பெஸ்ட் படங்களை சொல்லச்சொன்னா, அதுல 'மிஸ்டர். சந்திரமௌலி' முதல் இடத்துல இருக்கும். இந்தப் படத்தை முதல் முதல்ல அறிமுகப்படுத்தி வெச்சது கெளதம் கார்த்திக்தான். கெளதம் இவ்வளவு நல்லா நடிப்பார்னு இந்த செட்டுல பார்த்துதான் தெரிஞ்சுக்கிட்டேன்." என்றார். 

இறுதியாகப் பேசிய கெளதம் கார்த்தி, ``எங்க டீமை மொத்தமா கைக்குள்ள வெச்சிருக்கிறது, தயாரிப்பாளர் தனஞ்செயன்தான். எங்ககூட அவ்ளோ நட்பா இருப்பார். அதேசமயம் விரட்டி வேலையும் வாங்குவார். இந்தமாதிரி இழுத்துப்போட்டு வேலை பண்ற ஒரு தயாரிப்பாளரை நான் பார்த்ததே இல்லை. எந்த மாதிரியான ஆர்ட்ஸ்ட்டையும் நல்ல முறையில கையாள்றது திரு சாரோட ஸ்பெஷல். யூனிட்ல இருக்கிற எல்லோருக்கும் சமமான மரியாதை கொடுப்பார். எங்க அப்பாகூட சேர்ந்து நடிக்கிற வாய்ப்பைக் கொடுத்த திருவுக்கு நன்றி. சின்ன வயசுல ரெண்டே ரெண்டு தடவை மட்டும்தான் அப்பாவோட ஷூட்டிங்கை நான் வேடிக்கை பார்த்திருக்கேன். ஆனா, இன்னைக்கு முழுக்க முழுக்க அவரோட சேர்ந்து நடிக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு. முதல்நாள் ஷூட்டிங் போனப்போ, என்னால சிரிக்காம இருக்கவே முடியலை. எங்க வீடு எப்போவுமே ரொம்பக் கலகலப்பா இருக்கும். ஷூட்டிங்ல அப்பாவுக்கும் சதீஷுக்கும் யார் நல்ல காமெடி பண்றாங்கனு போட்டி நடக்கும். அதேமாதிரி இந்தப் படமும் செம ஜாலியா இருக்கும். இந்தப் படத்துல சண்டைக்காட்சிகள் பண்ண சில்வா சாருக்கு நன்றி சொல்லணும். இந்தமாதிரி எஃபெக்ட்டான சண்டைக்காட்சிகள் இதுவரை எனக்கு அமைஞ்சதில்லை. இத்தனை வயசுக்கு அப்புறமும் அப்பா எப்படித்தான் சண்டைக் காட்சிகள்ல அவ்ளோ எனர்ஜியோட நடிக்கிறார்னு தெரியலை." என்று முடித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு