தமிழ் சினிமாவில் நடிகர்களின் நடிகர்... கமல்ஹாசன். அந்தக் கமல் ரசிக்கும் நடிகர்... நாசர்!

கமீலா நாசர். எம்.எஸ்சி, எம்.ஃபில் பட்டதாரி, பிரபல சீரியலின் கிரியேட்டிவ் ஹெட், தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் எனப் பன்முகம் கொண்ட பெண் முகம்! அன்பும், புரிதலும் கொண்டு கட்டமைந்த இந்தத் தம்பதியின் இல்லம், அந்த மாலை வேளை யில் மிக ரம்மியமாக இருந்தது... ஸ்ருதி சேர்ந்தது போன்ற அவர்களின் பேச்சும்!

''சென்னை, ஒயிட்ஸ் ரோட்ல இருக்குற கமீலா வீட்டுக்கு எதிர் வீட்டுல... என் தம்பியும், அம்மாவும் அப்போ தங்கி இருந்தாங்க. எம்.எஸ்சி. படிச்சுட்டு, ஐ.ஏ.எஸ். பிரிலிமினரி எக்ஸாம் எழுதிஇருந்த கமீலா, எங்கம்மாவுக்கும் தம்பிக்கும் சிநேகமாக, எனக்கும் அறிமுகம் ஆனாங்க. கமீலாவை மருமகள் ஆக்கிக்க எங்கம்மாவுக்கு ஆசை வந்துடுச்சு. எனக்கும் மனைவி ஆக்கிக்க ஆசை. ஆனா, 'சினிமாக்காரனுக்கு பொண்ணு தரமாட்டேன்’னு பிடிவாதம் பிடிச்சாங்க அவங்க வீட்டுல. இன்னொரு பக்கம், நாங்க உருது பேசற முஸ்லிம், அவங்க தமிழ் பேசற முஸ்லிம்னு இன்னொரு சுவரும் எழுந்து நின்னுது.

அதுவரைக்கும் கமீலா முகத்தைப் பார்க்கக்கூட கூச்சப்பட்ட நான், தைரியத்தை வரவழைச்சுட்டு, அவங்கள நேர்ல சந்திச்சேன். அப்போ 'நாயகன்’, 'இணைந்த கைகள்’ திரைப்படங்கள் எனக்கு ஒரு நடிகனா அடையாளம் கொடுத்திருந்தது. கையில் நாலைந்து படங்கள் இருந்தது. அவ்வளவுதான். ஆனாலும், எதிர்கால சினிமாவுல இந்த நாசருக்கு ஒரு தனி இடத்தை கண்டிப்பா உருவாக்குவேங்கிற என் நம்பிக்கையை, அவங்ககிட்ட சொன்னேன். என்னைவிட, என் தன்னம்பிக்கை அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சுருந்தது. சம்மதம் சொன்னாங்க. எல்லாத் தடைகளையும் சரிபண்ணி, நான் 'மிஸ்டர் கமீலா’ ஆனேன்!''

- புன்னகை பிறக்கிறது நாசர் முகத்தில்.

''1989-ல் எங்களுக்குக் கல்யாணம். உடனே ஒரு நடிகரோட மனைவியா என் வாழ்க்கை மாறிப்போயிடல. கல்யாணத்துக்குப் பிறகும் கமீலா வாவே இருக்கிற சுதந்திரத்தை அவர் எனக்குத் தந்தார். எனக்கு வீட்டில் வீணா பொழுதைக் கழிக்கப் பிடிக்கல. குழந்தை வளர்ப்பு மற்றும் குடும்ப உறவுகள் பற்றிப் படிச்சுருந்ததால, அவரோட நண்பர், டாக்டர் ருத்ரனோட கிளினிக்ல நான் ஃபேமிலி கவுன்சலிங் எடுத்தேன். அப்போ விதவிதமான பெற்றோர்கள், குழந்தைகள், குடும்பங்கள் பற்றி அறியும் வாய்ப்பு கிடைச்சுது. நான் பார்த்தவரை, அப்பர் மிடில் கிளாஸைவிட, அடித்தட்டு மக்கள் தங்களோட குழந்தைகளைச் சரியா வளர்க்கிறத உணர்ந்தேன்.

என் மூத்த மகன் பைஸல் பிறந்தப்போ, ஒரு ஃபேமிலி கவுன்சலரா கிடைக்கிற அடையாளத்தைவிட, ஒரு அம்மாவா இருக்கிற பொறுப்பு முக்கியம்னு முடிவெடுத்தேன். வேலைக்கு 'குட் பை’ சொல்லிட்டு, முழுக்க ஹோம் மேக்கர் ஆயிட்டேன். வேலைக்குப் போகணும்னு நான் எடுத்த முடிவுக்கும் சரி, வேலை வேண்டாம்னு நான் எடுத்த முடிவுக்கும் சரி... முழுப் புரிதலோட உடன் இருந்தார் அவர். அவரோட நிறைய முடிவுகள்ல நான் தலையிட்டு இருக்கேன். ஆனா, என்னோட முடிவுகளை என்னிடமே ஒப்படைக்கிற அவரோட மனசு, ரியலி கிரேட்!'' என்று உள்ளம் குளிர்ந்தார் கமீலா.

''சொந்தத் தயாரிப்புல 'அவதாரம்’, 'தேவதை’, 'மாயன்’, 'பாப்கார்ன்’னு படமெடுத்து, பலமா அடிவாங்கினேன். நான் ஒவ்வொரு முறை அந்த ரிஸ்க்ல இறங்கினப்போவும், வேண்டாம்னு எடுத்துச் சொன்னாங்க கமீலா. என் உறுதி மாறல. சட்டுனு தன்னை மாத்திக்கிட்டு, எனக்கு மனபலமாவும், சமயங்கள்ல படத்தை வெளியிடறதுவரை இறங்கி வேலைகள் செஞ்சு, மூளைபலமாவும் இருந்தாங்க. இறுதியா, தோல்வியே எனக்கு மிஞ்சி நின்னது. 'அப்போவே நான் சொன்னேன்ல’னு அவங்க சிடுசிடுக்கல. இதுவும் கடந்து போகும்னு என் கைபிடிச்சு நின்னாங்க. அப்போ கமீலா மட்டும் என்னைத் தாங்கலைனா, நான் மறுபடியும் எழுந்து இருப்பேனான்னு தெரியல. ஒரு மனைவியா எனக்கு ஆறுதல் தந்தாங்க, ஒரு நண்பனா எனக்குத் தைரியம் சொன்னாங்க.

இன்னொரு பக்கம், கோடிக்கணக்கான ரூபாய் நஷ்டத்தால குழந்தைகளோட அத்தியாவசியத் தேவைகளைக்கூட நிறைவேத்த முடியாத நிலை. விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்கள் எல்லாம் நஷ்டஈடு கேட்க, அதுவரை பார்க்காத கமீலாவை நான் அப்போ பார்த்தேன். தனி ஆளா தயாரிப்பாளர் சங்கத்துக்குப் போய், எங்கள் தரப்பை எடுத்துப் பேசினாங்க. நிலைமையைச் சரி செஞ்சாங்க. அதுல இருந்து என் படங்களுக்கான கால்ஷீட் வேலைகளை அவங்களே பார்க்க ஆரம்பிச்சாங்க. 2004-ல் இருந்து இப்போவரைக்கும் நான் நடிச்சுருக்குற 160 படங்களுக்கும் அவங்கதான் எனக்கு கால்ஷீட் மேனேஜர். கஷ்டம் எல்லாம் கரைஞ்சு, இப்போ சந்தோஷத்தையும், செல்வத்தையும் நாங்க மீட்டுட்டோம். முக்கியக் காரணம் இல்லை... முழுக்காரணமும் என் மனைவிதான்னு நம்புறேன்!'' என்ற நாசரின் வார்த்தைகள், கமீலாவின் முகத்தைக் கூச்சத்துடன் மலரச் செய்தது.

''வாழ்க்கைக் கணக்கு சுலபமானது... புரிஞ்சுக்காதவங்களுக்கு சிக்கலானது. கல்யாணமான முதல் 8 வருஷம், கணவன் - மனைவி பரஸ்பரம் புரிஞ்சுக்குறது, ரெண்டு பக்க சொந்தங்களையும் அரவணைச்சுக்கிறது, குழந்தைகளை வளர்க்கிறதுனு போயிடும். அடுத்த 8 வருஷம், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திக்கிறதுல கழியும். கணவன் நிக்காம ஓட, மனைவி குழந்தைகள், வீடுனு சரணடையிற இந்த வருடங்கள்ல, அவங்களுக்குள்ள இடைவெளி ஏற்படாம பார்த்துக்கிறது முக்கியம். இல்லைனா, பணத்தைச் சம்பாதிச்சுட்டு நிமிரும்போது குடும்பம் கரைஞ்சிருக்கும். அதுக்குப் பிறகான 8 வருஷம், வளர்ந்து நிக்கிற பிள்ளைங்களோட எதிர்காலத்தை சீராக்கித் தர்ற பொறுப்புகளோட நமக்காக காத்திருக் கும். தொடர்ற வருடங்களை வயோதிகம், நோய்களோடப் போராடிக் கழிக்கும்போது, துணையோட ஆதரவு ரொம்பத் தேவையா இருக்கும். இப்படி ஒவ் வொரு கட்டத்தையும் புரிதலோட கடக்கிற பிணைப்பும், பாசமும் எங்களுக்கு நிரம்ப இருக்குனு நம்புறோம்!''

- இல்லறக் கணக்குச் சொன்னார் கமீலா.

பைஸல், லூஃபுதீன், அபி என்ற இவர்களின் மூன்று மகன்களில், பைஸல், பெங்களூருவில் சிடி கேம் டிசைனராக வேலை பார்க்கிறார். லூஃபுதீன், மலேசியாவில் சவுண்டு இன்ஜினீயரிங் இரண்டாவது வருடம் படிக்கிறார். கடைக்குட்டி அபி, எட்டாம் வகுப்பு.

''மூத்தவன் பைஸல் 6-வது படிக்கும்போதே அழகா வரைவான். அவன் வரைஞ்ச படங்களை ஆர்ட்டிஸ்ட் மருது சார்கிட்ட காட்டினோம். 'ஆர்ட்ல குதிரைப் படம் வரையுறது ரொம்பக் கஷ்டம். பைஸலுக்கு அந்தக் கோடுகள் சிரமமில்லாம வந்திருக்கு. நிச்சயமா இவன் புரொஃபஷனல் ஆர்ட்டிஸ்ட்டா வருவான்’னு சொன்னார். இப்போ பெங்களூருவுல பெரிய கம்பெனியில சிடி கேமிங் டிசைனரா வேலை பார்க்கிறான், கை நிறைய சம்பாதிக்கிறான். பெற்றோர்கள் நம் கனவுகளை பிள்ளைங்ககிட்ட திணிக்காம, அவங்களோட ஆர்வத்துக்கு எண்ணெய் விட்டோம்னா, நிச்சயமா அவங்க பெருசா ஜெயிச்சுக் காட்டுவாங்க!'' என்று நாசர் சொல்ல, தலையாட்டி ஆமோதித்தார் கமீலா!

இப்படி இவரின் மனதாக அவர் இருப்பதும், அவரின் குரலாக இவர் இருப்பதும் என... இறுகியிருக் கிறது அவர்களின் இல்லறம்!