உலகம் பலவிதம்
கலாய்
சினிமா
Published:Updated:

அந்த மாதிரி கபாலினு நினைச்சீங்களா?

அந்த மாதிரி கபாலினு நினைச்சீங்களா?
பிரீமியம் ஸ்டோரி
News
அந்த மாதிரி கபாலினு நினைச்சீங்களா?

அந்த மாதிரி கபாலினு நினைச்சீங்களா?

வங்க இப்படித்தான் நடிப்பாங்கனு சில ஹீரோஸைப் பற்றிச் சொல்லியே நம்மளை ப்ரைன் வாஷ் பண்ணிருப்பாங்க. ஆனா, ‘நாங்களும் பரட்டைதான்;  சீப்பும் வச்சிருக்கோம்’னு அவங்க வித்தியாசமாகவும் நடிச்சுருப்பாங்க.  அதையெல்லாம் நாம எப்போவாச்சும் கண்டுக்கிட்டோமா பாஸ்? இதோ...

அந்த மாதிரி கபாலினு நினைச்சீங்களா?

எம்.ஜி.ஆர். மட்டும்தான் கத்திச்சண்டை போடுவாருன்னு யாரோ உங்ககிட்ட தப்பா சொல்லியிருக்காங்க. சிவாஜி கெட்டப் மாத்தி மட்டும்தான் நடிப்பாரு, சண்டைலாம் போட மாட்டாருனும் கொளுத்திப் போட்டிருப்பாங்க. ஆனா பாருங்க சிவாஜி நடிச்ச ‘பக்தா துக்காராம்’ கன்னடப்  படத்தில்  குதிரையில் உட்கார்ந்து எதிரிகளோட  காலுக்குள்ள  கத்தியை விட்டு, கதற விட்டு கத்திச்சண்டைலாம் போட்டிருப்பாரு.  அதைக் கவனிச்சீங்களா பாஸ்?

சிவாஜி மட்டும்தான் விதவிதமாக கெட்டப் போடுவாருனு சொல்லிச் சொல்லி  மொட்டை ராஜேந்திரனுக்கெல்லாம் முன்னாடியே மொட்டை போட்டு ‘எங்கள் தங்கம்’ படத்தில் நடிச்ச  எம் ஜி. ஆரைலாம் மறைச்சு வெச்சுட்டீங்களே மக்களே. சரி அந்த மொட்டை கெட்டப்பை விடுங்க, அட்லீஸ்ட் குடுமி மீசைலாம் வச்சு குத்தாட்டம் போட்டு நடிச்ச  ‘ரிக்‌ஷாக்காரன்’ படத்தையாவது வரலாற்றுல கொண்டுவந்தீங்களா வாக்காளப் பெருமக்களே.

அந்த மாதிரி கபாலினு நினைச்சீங்களா?

ரஜினி மட்டும்தான் பன்ச் டயலாக் பேசுவாரு.  பாட்டுல தத்துவங்களைத் தண்ணியாகப் பிழிவார்னு சொன்னீங்களே,  கமல்ஹாஸன்  ‘வசூல்ராஜா’வில் ‘ஆழ்வார்பேட்டை ஆளுடா அறிவுரையைக் கேளுடா’ன்னு வெச்சி செஞ்ச!  (சொன்ன )தத்துவத்தை வசமாக மறந்துட்டீங்களே. ‘சொல்லுறதைதான் செய்வேன் செய்றதைதான் சொல்வேன்’ னு ரஜினு சொன்னதை ஞாபகம் வெச்சுருக்கீங்க. ‘நா சொன்னா செஞ்சிடுவேன்’ னு ‘தூங்காவனம்’ படத்துல கமல் சொன்னதை  மட்டும் ஏன் தூங்கிக்கிட்டே மறந்துட்டீங்க?

ரஜினி மட்டும்தான் சிகரெட் பிடிச்சு ஸ்டைலாகப் புகைவிடுவாருனு எல்லாம் சொன்னீங்களே. ‘சிவப்பு ரோஜாக்கள்’ படத்து ஆன்ட்டி ஹீரோ கமலை எப்படி பாஸ் மறந்தீங்க? கமல் மட்டும்தான்  புரியாத  மாதிரியே பேசுவாருன்னு சொன்னீங்களே. ‘ஒருதடவை சொன்னா நூறு தடவை சொன்னமாதிரி’னு ரஜினி சொன்னாரே... ஆமா ஆக்சுவலா இதுக்கு என்னதாங்க மீனிங்? எனக்கே தெரிஞ்சிக்கணும் போல இருக்கு. அப்புறம் அந்த எச்சச்ச கச்சச்ச கச்சச்சா  அப்டின்னா என்னானு நாங்க கேட்க மாட்டோம்.

அந்த மாதிரி கபாலினு நினைச்சீங்களா?

அஜீத்துனா கூலரை மாட்டி  நடையா நடப்பாரு. கோபிநாத்தைவிட அதிகமா கோட்டு போட்டு நடிப்பார்ன்னு சொல்லியே இந்தப் பசங்களை வளர்த்துக்கிட்டு இருக்கீங்களே.. . ‘வில்லு’,  ‘சுறா’ படங்களில் கலர்ஃபுல்லா கோட்டு போட்டு நடையோ நடைன்னு விஜய் நடப்பாரே... ஏன், ஏன் பாஸ் அதையெல்லாம் சொல்லாம மிஸ் பண்ணீங்க?

விஜய்தான் சுவர் விட்டு சுவர் தாவுவாரு, அந்தரத்தில் மந்திரம் பண்ணுவாருனு சொல்ற நெட்டிசன்ஸ் ‘சிட்டிசன்’ படம் பார்த்தீங்களா,  ‘ஆரம்பம்’ படத்து க்ளைமாக்ஸ் சீனையெல்லாம் கவனிச்சீங்களா?  இன்னும் எம்புட்டோ இருக்கு.. ஹ்ம்ம்ம் ஆனாலும் கத்திச்சண்டைனா எம் ஜி ஆர் தான். அப்படிதானே மக்களே...

 - ஜெ.வி.பிரவீன்குமார்