உலகம் பலவிதம்
ஃபோட்டோ கமென்ட்
சினிமா
Published:Updated:

சுட்ட படம்!

சுட்ட படம்!
பிரீமியம் ஸ்டோரி
News
சுட்ட படம்!

சுட்ட படம்!

சுட்ட படம்!

`விருதகிரி' - கேப்டனே எழுதி, இயக்கி, தயாரித்து நடித்த இந்தப் படம்தான் இந்த வார சுட்ட படம். கேப்டனுக்கு அரசியலில் செம டிமாண்ட் இருந்த காலத்தில் பலப்பல பஞ்ச் வசனங்களோடு வெளியான படம். அதெல்லாம் சரிதான். ஆனால், அதுக்காக அப்படியே ஒரு இங்கிலீஷ் படத்தில் இருந்து சுடுவதெல்லாம் ரொம்ப ஓவர்  கேப்டன் ஜி! 2008-ல் வெளியான `டேக்கன்' என்ற ஆக்‌ஷன் படத்தின் அப்பட்டமான காப்பிதான் `விருதகிரி'.

டேக்கனின் கதை என்ன? தன் மனைவி, மகளை விட்டுப் பிரிந்து வாழ்கிறார் ஓய்வுபெற்ற சி.ஐ.ஏ அதிகாரியான ப்ரையன் மில்ஸ். மகள் கிம் மேல் அதீத பாசம் ப்ரையனுக்கு. இதனால் அவளுக்கு ஒரு பெரிய கான்செர்ட்டில் பாட வாய்ப்பு வாங்கித் தருகிறார். சரியாக அந்த நேரம் பார்த்து தன் தோழியோடு பாரீஸ் கிளம்புகிறாள் கிம். இஷ்டமே இல்லாமல் மகளை வழியனுப்பி வைக்கிறார் மில்ஸ்.

பாரீஸ் ஏர்போர்ட்டில் கிம்முக்கு பீட்டர் என்பவனின் அறிமுகம் கிடைக்கிறது. கிம், அவளின் தோழி அமண்டா, பீட்டர் மூவரும் ஒரே டாக்ஸியில் பயணிக்கிறார்கள். அமண்டாவின் உறவினர் வீட்டில் கிம்மும் அமண்டாவும் தங்குகிறார்கள். கிம்முக்கு அவள் அப்பா போன் செய்ய, அவள் உள்ளறையில் போய் பேசுகிறாள். அந்த நேரம் பார்த்து கதவை உடைத்துக்கொண்டு வரும் சில பேர், அமண்டாவைக் குண்டுக்கட்டாகத் தூக்கிச் செல்கிறார்கள். இதைப்பார்த்து கட்டிலுக்கு அடியில் ஒளிந்துகொள்கிறாள் கிம்.

கடத்தல்காரர்களின் அடையாளங்கள் பற்றி முடிந்த அளவு நோட் செய்து சொல்லும்படி மகளிடம் கூறுகிறார் மில்ஸ். அவளும் தன்னால் முடிந்த அளவுக்குத் தகவல்களைப் பார்த்துச் சொல்கிறாள். இதற்குள் கிம்மைக் கண்டுபிடிக்கும் கடத்தல் கும்பலின் தலைவன் போனைப் பிடுங்குகிறான். `எங்கே இருந்தாலும் என் பொண்ணைக் காப்பாற்ற வருவேன்டா' என்கிறார் மில்ஸ். `குட்லக்' எனச் சொல்லிவிட்டு போனைக் கட் செய்கிறான் கடத்தல்காரன்.

சுட்ட படம்!

கடத்தல்காரனின் குரல் மற்றும் மகள் சொன்ன அடையாளங்களை வைத்து அவன் அல்பேனிய மாஃபியாவைச் சேர்ந்த மார்க்கோ எனக் கண்டுபிடிக்கிறார் மில்ஸ். உடனே பாரீஸுக்குப் பறக்கிறார். அங்கே அவர்கள் இருந்த வீட்டில் கிம்மின் போனைக் கண்டுபிடிக்கிறார். அதிலிருக்கும் பீட்டரைத் தேடி அலைகிறார். ஏர்போர்ட்டில் அவனைக் கண்டுபிடிக்கும் மில்ஸ் அவனைத் துரத்த, பயந்து ஓடும் பீட்டர் ஒரு லாரி மோதி பலியாகிறான்.

வேறு வழியே இல்லாமல் பாரீஸில் இருக்கும் தன் பழைய நண்பரின் உதவியை நாடுகிறார் மில்ஸ். அவரின் ஆலோசனைப்படி உள்ளூர் விபசார விடுதி ஒன்றுக்குச் செல்கிறார். அங்கு ஒரு பெண் கிம்மின் ஓவர்கோட்டை வைத்திருப்பதைப் பார்த்து அவளை விசாரிக்கிறார். அவள் மூலம் அல்பேனிய மாஃபியா பெண்களை ஒளித்து வைத்திருக்கும் இடத்தைத் தெரிந்துகொள்கிறார். பெண்களை விலைக்கு வாங்க வந்த வியாபாரி என்ற போர்வையில் அந்த இடத்துக்கு செல்லும் மில்ஸ் கண்ணில்படுகிறான் மார்க்கோ. அவனைப் பிடித்து அடித்து உதைத்து அங்கிருக்கும் பெண்களை மீட்கிறார். ஆனால் அந்தக் கூட்டத்தில் கிம் இல்லை. மீண்டும் மார்க்கோவை தன் ஸ்டைலில் 'கவனிக்க' அவளை விற்ற இடத்தைச் சொல்கிறான் மார்க்கோ.

அவன் சொன்ன இடத்துக்குச் செல்கிறார் மில்ஸ். அது பெண்களை ஏலத்துக்கு விடும் கூட்டம். அங்கு இருக்கும் அனைவரையும் `டிஷ்யூம் டிஷ்யூம்' எனச் சுட்டுத் தள்ளிவிட்டு கிம்மை தேடுகிறார் மில்ஸ். அங்கும் அவள் இல்லை. அவளை ஒரு ஷேக் விலைக்கு வாங்கிவிட்டதைத் தெரிந்துகொண்டு அங்கே செல்லும் மில்ஸ் தன் வீரதீர பராக்கிரமத்தை அரங்கேற்றி மகளை மீட்கிறார். தி எண்ட்.

சுட்ட படம்!

இப்போது தமிழ் வெர்ஷனுக்கு வருவோம். முதல் முக்கால்மணி நேரத்துக்கு கேப்டன் புகழ், திருநங்கைகளின் உறுப்புகளைத் திருடும் கூட்டம் எனக் கதை வேறு மாதிரிதான் இருக்கும். அதன்பின் வருபவை எல்லாமே சுட்டதுதான். என்ன, ஹீரோயினுக்கு அப்பாவாக கேப்டனைக் காட்டினால் ரசிகர்கள் சங்கடப்படுவார்களே என கார்டியனாகக் காட்டியிருப்பார்கள். இடைவேளையில் வரும் `குட்லக்'கைக் கூட சுட்டிருப்பார் கேப்டன்.

என்னதான் சுட்ட கதையாக இருந்தாலும், `வாழ்க்கைங்கிறது ஐஸ்க்ரீம் மாதிரி, சீக்கிரம் சாப்பிடலனா கரைஞ்சுடும்' போன்ற கேப்டனின் பொன்மொழிகளுக்காகவும், `ஐ வில் பைண்ட் யூ அண்ட் கில் யூ' போன்ற கேப்டனின் பீட்டருக்காகவும் விருதகிரியை மஸ்ட் வாட்ச் பட்டியலில் வைக்கலாம்!

- இன்னும் சுடும்