உலகம் பலவிதம்
ஃபோட்டோ கமென்ட்
சினிமா
Published:Updated:

சினிமா விடுகதை!

சினிமா விடுகதை!
பிரீமியம் ஸ்டோரி
News
சினிமா விடுகதை!

சினிமா விடுகதை!

காதலையும் சோகத்தையும் சொர்க்கமாக்கும் கே.ஜே.யேசுதாஸின் பாட்டுகள்தாங்க இந்தவார சினிமா விடுகதைக்கான பாடல்கள் பாஸ்..!

சினிமா விடுகதை!

1. கவியரசின் கடைசிப்பாட்டு. கமலஹாசன் நடிச்ச பாட்டு. நடுவுல மானே தேனே போட்டா முதல்லயே கண்டுபிடிச்சுடுவீங்களே... என்ன பாட்டு?

2. ஆடாத மார்க்கண்டேயனும் ஆட்டம் போட்டாரே, புட்டி தொட்டு புத்தி கெட்டுப் போனாரே இன்னும் கொஞ்சம் ஊத்தச்சொன்னா ஈஸியா பாட்டைக் கண்டுபிடிச்சுடலாம். என்ன பாட்டு?

3. இது அம்மா பாட்டுன்னாலும் அ.தி.மு.க. பாட்டு இல்லை. இதுக்கு மேல தாலாட்டுப் பாட வார்த்தை இல்லை. மூன்று எழுத்து டைரக்டருக்கு ரெண்டாவது படம். எஸ்எம்எஸ் நாயகனும் யதார்த்தமாக நடிச்ச படம். பாடுங்களேன் மக்கா!

4. இந்தப் படத்து குருவிக்கு மட்டும் ரெண்டுவால். கல்லணைக்கார ராசா பேரு பாட்டின் முதல் வரியிலிருக்கு. மைக் நடிகர் நடிச்சிருந்தாலும் பாட்டுல மைக் இல்லையே. இது என்ன பாட்டு?

5. கிடார் தூக்குற பார்ட்டிக்கெல்லாம் இந்தப் பாட்டுதானே கதி.  பாட்டு பாடுகிற ஹீரோவுக்கு ஷோபாதானே ரதி.  இது என்ன பாட்டு?

6. சாமி கொடுத்த வீடு இப்போ வீதியாச்சு... கொன்ன பாவம் தின்னா போச்சு. தத்துவம் சொன்ன பாட்டு. `ஒரு சீரியல்'னு சொன்னா அசால்ட்டா பாட்டைக் கண்டுபிடிச்சிடலாமே... என்ன பாட்டு இந்தப் பாட்டு?

7. எல்லாருமே பொம்மையினு சொன்ன பாட்டு. இந்த தாடிக்கார பாடகர் பாடிய முதல் பாட்டு. கொஞ்சம் பின்னால போயி பார்த்தா தன்னாலே பதில் வந்திடும். என்ன பாட்டுங்க இது?

8. ஊரைத் தெரிய வெச்ச பாட்டு. உலகத்தைப் புரிய வெச்ச பாட்டு. எல்லோரும் படிக்கிற இந்தப் பாட்டு படித்தவனும் பாடலாம். நேத்து இவன் ஏணி பாட்டைக் கண்டுபிடிச்சிட்டா இன்னைக்கி நீங்கதான் ஞானி. என்ன பாட்டு?

- ஜெ.வி.பிரவீன்குமார்

 விடைகள்:  1. கண்ணே கலைமானே, 2. தண்ணித்தொட்டி தேடிவந்த, 3. ஆராரிராரோ நான் இங்கேபாட, 4. ராஜராஜ சோழன் நான், 5. என் இனிய பொன் நிலாவே, 6. தெய்வம் தந்த வீடு, 7. நீயும் பொம்மை நானும் பொம்மை, 8. ஊரைத்தெரிஞ்சிக்கிட்டேன் உலகம் புரிஞ்சுக்கிட்டேன்