உலகம் பலவிதம்
ஃபோட்டோ கமென்ட்
சினிமா
Published:Updated:

``என் வேலை விமர்சனம்... அவங்க வேலை திட்டுறது!''

``என் வேலை விமர்சனம்... அவங்க வேலை திட்டுறது!''
பிரீமியம் ஸ்டோரி
News
``என் வேலை விமர்சனம்... அவங்க வேலை திட்டுறது!''

``என் வேலை விமர்சனம்... அவங்க வேலை திட்டுறது!''

``என் வேலை விமர்சனம்... அவங்க வேலை திட்டுறது!''

வெள்ளிக்கிழமை படம் ரிலீஸானதும் தியேட்டருக்குப் போறாங்களோ இல்லையோ... யூடியூப்ல நீலச்சட்டைக்காரரோட விமர்சனத்தைப் பார்க்குறவங்க அதிகம்.

``யாரு சார் நீங்க? உங்க ஃப்ளாஷ்பேக் என்ன?’’

``சொந்த ஊரு மதுரைப்பக்கம். எட்டாவதுக்கு அப்புறம் படிப்பு ஏறல. குடும்பமே சினிமா விநியோகத்தொழில்ல இருந்தாங்க. பதினைஞ்சு வருஷத்துக்கு முன்னால சிடி,கேபிள்டிவின்னு ஆக்கிரமிச்சப்போ சினிமால கொஞ்சம் இறங்குமுகம். நிறைய நஷ்டமும் ஆச்சு. இயக்குநர் ஹரிகிட்ட `வேல்’, `சேவல்’ படத்துக்கு ப்ரொடக்‌ஷன் மேனஜரா வேலை பார்த்தேன். அப்போ சாஃப்ட்வேர் நண்பர்களோட ஆலோசனையிலதான் யூ-டியூப் சேனல் தொடங்கலாம்னு யோசிச்சேன். அதான் விமர்சன வீடியோக்கள்.’’

``வகைதொகை இல்லாமல் சகட்டுமேனிக்கு எல்லா படத்தையும் பொளக்குறீங்களே ?’’

``இந்த சேனல் ஆரம்பிச்சதோட நோக்கமே அதான். 120 ரூபாய் கொடுத்து படம் பார்க்குறவனுக்கு உண்மையைச் சொல்லணும்.  ஒரு தடவை நியூஜெர்சியில இருந்து பத்து வயசுப் பொண்ணு போன் பண்ணுனாங்க.`நெட்ல நீலக்கலர் சட்டை போட்டு பேசுற அங்கிள்தானே? குடும்பத்தோட அஞ்சான் படத்துக்கு போயிட்டு வந்தோம். இவ்வளவு பணம் செலவு பண்ணிட்டோமேன்னு அப்பாவுக்கும்
அம்மாவுக்கும் சண்டை. உங்களோட அஞ்சான் விமர்சனம் பார்த்தோம். விழுந்து விழுந்து சிரிச்சோம். சண்டை நின்னுடுச்சு. தாங்க்யூ அங்கிள்'னு சொல்லுச்சு. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.’’

``நீங்க எப்படி கேமராவுக்கு முன்னாடி வந்தீங்க?''

``சேனல் ஆரம்பிக்கலாம்னு முடிவு பண்ணி கேமரா வாங்கிட்டோம். ஆனா தொகுத்து வழங்குறதுக்கு ஆள் கிடைக்கல. `கேரியருக்கு சரி வராது'னு பலபேரு விலகிட்டாங்க. சரி நாம ஸ்கிரிப்ட் எழுதி அதை இன்னொருத்தர் பேசுறதுக்கு நாமளே பண்ணிடலாம்னு முடிவெடுத்தேன். 45 வயசுல கறுப்பா ஒருத்தன் வந்தா ஏத்துக்குவாங்களான்னு தோணுச்சு. ஒரு நம்பிக்கையில பண்ணினேன்.

ஏத்துகிட்டாங்கனு நினைக்கிறேன்!’’

``சரி, இந்த நீலக்கலர் சட்டைக்குப் பின்னால ஏதும் சென்டிமென்ட் இருக்கா?’’

``அட நீங்க வேற. வாரா வாரம் புதுச்சட்டை போடுற அளவுக்கு வசதி இல்ல. அந்த `கீரீன்மேட்'டுக்கு நீலச்சட்டை தான் கரெக்ட்டா வந்துச்சு. இப்போ அதுவே அடையாளமா மாறிடுச்சு .’’

``பெரிய நடிகர்களோட ரசிகர் பட்டாளத்தை எப்படி சமாளிக்கிறீங்க?’’

``கஷ்டம்தான். சில பேரு ரசிகர்கள்னு சொல்லிட்டு அசிங்க அசிங்கமா திட்டி போன் பண்ணுவாங்க. எல்லாத்துக்கும் பொறுமையா பதில் சொல்லுவேன். அவங்களே போனை வெச்சிட்டுப் போயிருவாங்க. என் வேலையை நான் செய்றேன். அவங்க வேலையை அவங்க செய்றாங்க. ஹாஹாஹா!’’

``டைரக்டர் ஆகப்போறீங்களாமே?’’

``ஆமா. காசுபோட்டு படம் பார்க்குறவங்க சந்தோஷமா போற மாதிரி ஒரு கதை. நண்பரே தயாரிக்கிறார். பிப்ரவரில ரிலீஸ் பண்ணலாம்னு ப்ளான். பார்த்துட்டு சொல்லுங்க!'' என்றார்.

டெயில் பீஸ்: ஆங்...சொல்ல மறந்துட்டேன் இவரோட சொந்தப் பெயர் இளமாறன்செல்லக்கண்ணு. இவரைப்போல யூ-டியூபில் சினிமா விமர்சனம் பண்ணி இணையத்தைக் கலக்கும் இன்னும் சிலபேரைத் தெரிஞ்சுக்கணுமா? இதை க்ளிக் செய்யுங்க:  ‘‘நீ ஒரு சினிமா எடுத்துக்காட்டு பார்க்கலாம்!’’
 -  ந.புஹாரி ராஜா