உலகம் பலவிதம்
ஃபோட்டோ கமென்ட்
சினிமா
Published:Updated:

சினிமால்

சினிமால்
பிரீமியம் ஸ்டோரி
News
சினிமால்

சினிமால்

•    `இருமுகன்' படத்தை அடுத்து `சாமி2'-ல் நடிக்க நினைத்திருந்த விக்ரம், `கருடா' படத்தை டிராப் பண்ணினார். `சாமி' தொடங்கக் கொஞ்சம் டைம் ஆகும் என்பதால் 4 வருடங்களுக்கு முன்பு டிராப்பான `கரிகாலன்' படத்தின் தயாரிப்பாளருக்கு அந்த கால்ஷீட்டைக் கொடுத்திருக்கிறாராம். `பிரம்மன்' இயக்குநர் சாக்ரடீஸ், `சேதுபதி' அருண்குமார் ஆகிய இருவரில் ஒருவர்தான் அந்தப் படத்தை இயக்க இருப்பவராம். `கருடா'வில் மிஸ்ஸான காஜல் அகர்வாலை இந்தப் படத்துக்கு ஒப்பந்தம் செய்யச் சொல்லிவிட்டாராம் விக்ரம். கருடப்பார்வை, மிஸ் ஆகாது!

•     இயக்குனர் விஜய்யைப் பிரிந்த பிறகு, மீண்டும் பழைய வேகத்துடன் படங்களில் நடிக்கத் தொடங்கிவிட்டார் அமலா பால். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளிலும் நடிக்கிறார். தமிழில் `வடசென்னை' படத்தைத் தொடர்ந்து சத்யராஜுக்கு ஜோடியாக `முருகவேல்' என்ற படத்திலும் நடித்து வருகிறார். மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக அமலா பால் நடித்த ‘லைலா ஓ லைலா’ படத்தின் ரீமேக்தானாம் இது. சீனியர் ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க தயக்கம் ஏதும் இல்லையாம். நீ பொழைச்சுக்குவமா!

சினிமால்

•    தமிழில் ஒரு படம் தோல்வியடைந்தால் `ஹீரோ ஒத்துழைக்கலை' என இயக்குநரும், `இயக்குனர் சொதப்பிட்டார்' என ஹீரோவும் மாற்றி மாற்றி தங்கள் நட்பு வட்டத்தில் தூற்றிக்கொள்வார்கள். ஆனால், இந்தி இயக்குனர் அனுராக் கஷ்யப் ஒருபடி மேலே போய், `ரன்பீர் கபூர் தோல்விக்கு நான்தான் காரணம். அவர் படங்கள் சீக்கிரமே வெற்றி அடையணும். அவருடன் மீண்டும் இணையும் வாய்ப்பு கிடைத்தால்  சந்தோஷப்படுவேன்' எனவும் கூறியிருக்கிறார். கால்ஷீட்டுக்குத்தான் ஐஸ் வைக்கிறாரோ?

•   நாயகியை மையப்படுத்திய படங்களாகத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் த்ரிஷா, அடுத்து இளவரசன் என்ற இயக்குநரின் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் புது முயற்சியாக 5 வித்தியாசமான வேடங்களில் நடிக்க இருக்கிறாராம். இதில் உடல் எடையை ஏற்றியும், குறைத்தும் நடிக்கப் போகிறாராம். 100 நாட்களுக்குமேல் கால்ஷீட் கொடுத்துள்ள த்ரிஷா 1 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார். தெலுங்கிலும் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்ய திட்டமாம். கொண்டை உள்ள சிங்காரி!

•   தனுஷ் இயக்குநராக அவதாரம் எடுத்திருக்கும் `பவர் பாண்டி' கலகலப்பான காமெடிப் படமாம். படத்தில் ராஜ்கிரண் தன் வயதான நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு செய்யும் அட்டகாசங்கள்தான் படத்தின் ஹைலைட்டாம். படத்தில் பிரசன்னா, சாயாசிங் ஜோடி இருந்தாலும் ராஜ்கிரணுக்கும் ஒரு ஜோடி இருக்காம். இப்போதும் இளமையாக இருக்கும் நதியாதான் ராஜ்கிரணுக்கு ஜோடியாக அவரது மனைவி கேரக்டரில் நடிக்கிறாராம். பூவே பூச்சூடவா!

•   தான் கவர்ச்சி பொம்மை மட்டுமல்ல என `உட்தா பஞ்சாப்' படத்தின் மூலம் நிரூபித்த ஆலியா பட் அடுத்து உருவாகும் ஒரு படத்தில் காஷ்மீர் பெண்ணாக நடிக்க இருக்கிறார். ஏற்கனவே சோனம் கபூர் நடித்த `ஆயிஷா' படத்தை இயக்கிய பெண் இயக்குநர் ராஜ்ஸ்ரீ ஓஜாதான் இந்த படத்தை இயக்குகிறார். முழுக்கதையும் ஆலியாவை மையப்படுத்திதான் அமைந்திருக்கிறதாம். நவாஜுதீன் சித்திக், ஷபனாஆஸ்மி முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள். ம்!

•   விஜய் மட்டும்தான், பெரிய இயக்குநர், தோல்விப்படம் கொடுத்த இயக்குநர், இப்போதைய டிரெண்டில் இருக்கும் இயக்குநர்கள் என எந்த பேதமும் இல்லாமல் கதை கேட்பவர். அப்படி கடைசியாக புதுமைப்பித்தன் பார்த்திபன் விஜய்க்குக் கதை சொல்ல அவரை அணுக, விஜய்யும் பார்த்திபனிடம் கதை கேட்டிருக்கிறார். கதை சொல்லி முடித்து விஜய்யின் அழைப்புக்காகக் காத்திருந்த பார்த்திபனுக்கு விஜய் சொன்ன பதில், `உங்க கதையே புரியல சார்' என்று கூறியிருக்கிறார். மாஸ் ஹீரோவையே குழப்பிட்டீங்களே!

• சிம்பு நடிக்கும் `அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ' படத்தில் எல்லாமே மூணுதானாம். மூன்று சிம்பு, மூன்று நாயகிகள், மதுரை, சென்னை, துபாய் என மூன்று ஊர்கள், 1980 - 2015 - 2040 என மூன்று காலகட்டங்கள். இதில் நாய்கள் சல்லாபத்தில் இருக்கும் போது கல்லால் அடித்துப் பிரித்து விடும் சிம்புவுக்கு முதலிரவே நடக்காதாம். மூன்று சிம்புவுக்கும் இதே பிரச்னை தானாம். அந்த சாபத்தில் இருந்து சிம்பு வெளிவருவதுதான் மொத்தக் கதையாம். த்ரிஷா இல்லனா நயன்தாராவைவிட டிரிபிள் ட்ரீட்டா இருக்குமாம். ஏஏஏ!

சினிமால்

•   `தில்லுக்கு துட்டு' படத்தின் பிரமாண்ட வெற்றியால் அடுத்தடுத்து நடிக்கும் படங்களின் பட்ஜெட்டையும் கதையையும் இன்னும் கொஞ்சம் அதிகமாக்கச் சொல்லி விட்டாராம் சந்தானம். காமெடி, பேய்ப் படங்களைத் தவிர்த்து ஆக்‌ஷன் கதைகளில் ஆர்வம் காட்டுகிறாராம். டான்ஸ், சண்டைக்காட்சிகளுக்குத் தயாராகி விட்டதால் காமெடியைக் குறைத்துவிட்டு எமோஷனல் ஏரியாவை அதிகப்படுத்தச் சொல்லி விட்டாராம். சத்தம் கம்மியா, ரத்தம் அதிகமா இருக்கணுமாம்!

•    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் காக்க காக்க, கஜினி பாணியில் ஆனும், காதலும் கலந்த படமாக உருவாக இருக்கிறதாம். இப்படத்துக்கு நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடந்து வருகிறதாம். சூர்யாவுக்கு அம்மாவாக சரண்யா பொன்வண்ணன் நடிக்க, அப்பாவாக நடிக்க முழுநேர நடிகராகிவிட்ட கே.எஸ்.ரவிக் குமாரிடம் பேசியிருக்கிறார்கள். நயன்தாரா தான் ஹீரோயினா இருப்பாங்களோ?

•   கிடாரி படத்தின் மூலம் தன் தோல்விப் பாதையை மாற்றி வெற்றிப் பாதையில் பயணிக்கத் துவங்கியிருக்கும் சசிகுமார் அடுத்து மீண்டும் ஒரு மதுரைக் கதையில் நடிக்க இருக்கிறார். பிரகாஷ் என்ற அறிமுக இயக்குநர் இயக்குகிறார். குறைந்தது 10 இயக்குநர்களையாவது அறிமுகப்படுத்தி விட்டுதான் நான் படம் இயக்குவேன் என சொல்லும் சசிகுமார், பாண்டிராஜ் தொடங்கி பிரகாஷ் வரை இத்தோடு ஏழு பேரை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.