Published:Updated:

இயக்குனர் மணிரத்னம் அலுவலகம் முற்றுகை!

இயக்குனர் மணிரத்னம் அலுவலகம் முற்றுகை!
இயக்குனர் மணிரத்னம் அலுவலகம் முற்றுகை!
இயக்குனர் மணிரத்னம் அலுவலகம் முற்றுகை!

சென்னை: 'கடல்' படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடாததால் தங்களுக்கு இழப்பு  ஏற்பட்டுள்ளதாக கூறி திரைப்பட விநியோகஸ்தர்கள் இன்று இயக்குனரும், அப்படத்தின்  தயாரிப்பாளருமான மணி ரத்னத்தின் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.


அப்போது மணிரத்னம் அலுவலகத்தில் இல்லை. கடல் படத்தை அதன் தயாரிப்பாளரான மணிரத்னம், ஜெமினி  நிறுவனத்திற்கு மொத்தமாக விற்றுவிட்டார். அந்நிறுவனம்தான் தமிழகம் முழுவதும் கடல் படத்தை விநியோகம் செய்துள்ளது.

இதனாலேயே மணிரத்னம் அலுவலகத்தில்  இருந்தவர்கள், அவர்களுடன் பேச முடியாது என்றும், இங்கு பேச உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்றும்  கூறியதால், விநியோகஸ்தர்களுக்கும்,  அவர்களூக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

'கடல்' படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் மொத்தம் சுமார் 25 கோடி ரூபாய்க்கு  விற்கப்பட்டதாகவும், இதில் தமிழ் மொழியில் மட்டும் 14 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு,  275 திரையரங்குகளில் திரையிடப்பட்டு, தற்போது 70 திரையரங்குகளில்

##~~##
மட்டுமே  அப்படம் ஓடுவதாகவும், இதனால் படம் சுமார் 3 கோடி ரூபாய் அளவிற்கே  வசூலித்துள்ளதாகவும் கூறிய அவர்கள், தங்களுக்கு ஏற்பட்ட இழப்பை மணிரத்னம் ஈடு  செய்ய வேண்டும் என்று கோரினர்.
'கடல்'  படத்தில் நடிகர் கார்த்திக் மகன் கவுதம் மற்றும் நடிகை ராதாவின் மகள் துளசி ஆகியோர் ஜோடியாக நடித்திருந்ததால், இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.