உலகம் பலவிதம்
ஃபோட்டோ கமென்ட்
சினிமா
Published:Updated:

`ஷாக்'கா சொன்னாங்க நைனா!

`ஷாக்'கா சொன்னாங்க நைனா!
பிரீமியம் ஸ்டோரி
News
`ஷாக்'கா சொன்னாங்க நைனா!

`ஷாக்'கா சொன்னாங்க நைனா!

தைரியமான கருத்துகளைப் போகிறபோக்கில் பகிர்ந்துகொள்வது பாலிவுட்டின் லேட்டஸ்ட் ட்ரெண்ட். இதோ அண்மையில் பாலிவுட் பிரபலங்கள் உதிர்த்த போல்டான கருத்துகள்...

செர்லீன் சோப்ரா: ‘`காதலிக்கும்போது உடலையும் மனதையும் பகிர்ந்துகொள்வது எப்படி இயல்போ அதேபோலத்தான் அந்த உறவைத் துண்டிக்கும்போதும் ஒருவரை ஒருவர் காயப்படுத்தாமல் விலகிக்கொள்வதும். எனக்கு இவை நடந்திருக்கின்றன!’’

எம்ரான் ஹாஸ்மி: ‘`என்னை எல்லோரும் ‘சீரியல் கிஸ்ஸர்’ என்று வர்ணிக்கிறார்கள். ஆனால், முத்தமிடுவதைவிட வேறு பல விஷயங்களில் எனக்கு ஆர்வம் உண்டு!’’

`ஷாக்'கா சொன்னாங்க நைனா!

கரீனா கபூர்: ‘`எனக்குப் பயணம் செய்வது பிடிக்கும். அப்படிச் செல்லும்போது அடிக்கடி உடைகள் மாற்றுவது பிடிக்காது. ஒரே ஜீன்ஸ் பேண்ட்டை வாரக் கணக்கில் போட்டுக் கொள்வேன். அவ்வளவு ஏன், அதையே இரவில் போட்டுக்கொண்டும்கூட தூங்கி இருக்கிறேன். பயணம் செய்திருக்கிறேன். அதனால் சுத்தம் பற்றிப் பேசிக் குழப்பிக் கொள்ள வேண்டாம்!’’

ராதிகா ஆப்தே:
‘`செக்ஸ் தான் இன்றைய சினிமாவின் வியாபாரத்தைத் தீர்மானிக்கிறது.  இந்தியாவில் மிகப்பெரிய மூடநம்பிக்கையே செக்ஸ்தான்!’’

சித்ராங்கதா சிங்: ‘` ‘இன்கார்’ என்ற படத்தில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான பெண்ணாக தத்ரூபமாக நடித்ததற்கு எல்லோரும் பாராட்டினார்கள். ஆனால், என் வாழ்வில் டெல்லியிலும் மீரட்டிலும் எனக்கு நேர்ந்த பாலியல் ரீதியான தாக்குதல்களை நினைவில் கொண்டு வந்து நடித்தேன்.” 

வித்யா பாலன்: ‘`ஆரம்ப காலத்தில் ‘ஆன்ட்டி போல இருக்கிறீர்கள்’ என்று என் உடலை மோசமாக வர்ணித்து செல்போனில் போதையுடன் மெஸேஜ் அனுப்பிய பாலிவுட் ஹீரோ ஒருவர் இப்போது  ஜொள்ளு மெஸேஜ்களை அனுப்பி வந்தார். அவருக்கு தகுந்த பாடம் கற்பித்ததால் நான் இருக்கும் பக்கமே திரும்பிப் பார்ப்பதில்லை!’’

ரன்பீர் கபூர்: ‘`நான் நல்லவன் இல்லை. தீபிகாவையும் காத்ரீனாவையும் ஏமாற்றி இருக்கிறேன். எனக்கு காதலின் அருமை புரியும்போது என்னுடன் யாருமில்லை. இதுவும்கூட பக்குவத்திற்காகத்தான்!’’

`ஷாக்'கா சொன்னாங்க நைனா!

ரன்வீர் சிங்: ‘`என் முதல் செக்ஸ் அனுபவம் 15 வயதில் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் நிஜம்!  நான் என் படுக்கையைப் பகிர்ந்துகொண்ட பெண்களின் எண்ணிக்கையும் அதுதான். இதைச் சொல்ல நான் வெட்கப்படவில்லை. இப்போதும் என்வசம் காண்டம் உண்டு!’’

கஷ்மீரா ஷா: ‘`என் பாய்ஃப்ரெண்ட் கிருஷ்ணாவுடன் எனக்கு நெருக்கமான உறவு இருக்கிறது. அது என் வாழ்வை அழகாக்குகிறது!’’ 

அபய் தியோல்: ‘`செக்ஸைக் கொண்டாடிய தேசம் இது. அந்தரங்க உறுப்பின் வடிவில் கடவுளரை வணங்கும் தேசத்தில் போலீஸார், கலாசாரக் காவலர்களாகச் செயல்பட்டு விடுதிகளில் ரெய்டு நடத்துவது விந்தையாக இருக்கிறது!’’

அனுராக் காஷ்யப்: ‘`மிகச் சிறிய வயதில் நான் ஒரு இளைஞனால் செக்ஸ் ரீதியாக துன்புறுத்தப்பட்டிருக்கிறேன். வளர்ந்ததும் அவனைக் கோர்ட்டில் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்கலாம் என்றெல்லாம் முடிவு செய்து வைத்திருந்தேன்.  கடைசியில் ஏனோ அவனை மன்னித்து விட்டுவிட்டேன்.’’

`ஷாக்'கா சொன்னாங்க நைனா!

கோவிந்தா: ‘`எனக்கு என் மனைவியைத் தவிர இன்னொரு பெண்ணுடன் நெருக்கமான உறவு இருந்தது. அதை நான் பல வருடங்கள் மனைவிக்குத் தெரியாமல் மறைத்திருக்கிறேன். சொல்லப்போனால் மனைவிக்குத் தெரியாமல் இன்னொரு குடும்பத்தை உலகிற்கே தெரியாமல் நடத்தி வந்தேன். ஆனால், அதற்காக நான் கொடுத்த விலை அதிகம். கிட்டத்தட்ட அந்தப் பெண்ணுக்காக என் வாழ்வின் பாதியைச் செலவளித்திருக்கிறேன். இது தவறுதான். ஆனால், இனிமேலும் இதைச் சொல்லாவிட்டால் என் மனைவிக்கு நான் செய்த மிகப்பெரிய துரோகமாக ஆகிவிடும்! யார் அந்தப் பெண் என்பது எனக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருக்கட்டும்... ப்ளீஸ்!”

அர்ஜூன் கபூர்: ‘`தனித்தீவில் மாட்டிக்கொண்டால் உணவைவிட செக்ஸுக்கு முதலிடம் கொடுப்பேன்!’’

நர்கீஸ் ஃபக்ரி: ‘`செக்ஸ் பொம்மைகளை ஆன்லைனில் வாங்குவது என் பொழுதுபோக்கு!’’

ஆலியா பட்: ‘`இருட்டைக் கண்டால் பயப்படுவேன். இருட்டில் விளையாடும்போது திருட்டுத்தனமாக முத்தமிட்டு ஓடி ஒளிந்த ஆண் நண்பர்களை நினைத்து இப்போது பரிதாபப்படுகிறேன்!’’

சன்னி லியோன்:
‘`பெரிய ஸ்டார்கள் என்னுடன் நடிக்கத் தயங்குகிறார்கள். அவர்களின் மனைவிகள் அவர்களின் கணவன்மார்கள் என்னுடன்  நடிப்பதை விரும்பவில்லை. ஸ்டார்களின் மனைவிமார்களுக்கு ஒன்றே ஒன்றைச் சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். எனக்கு உங்கள் கணவன்மார்கள் எதற்காகவும் தேவைப்படப்போவதில்லை. ‘ஒன் நைட் ஸ்டாண்ட்’டுக்கு வேறு ஆட்கள் இருக்கிறார்கள்!’’

`ஷாக்'கா சொன்னாங்க நைனா!

சல்மான் கான்: ‘`நம்புங்கள் நண்பர்களே... சத்தியமாக நான் விர்ஜின் பையன்தான். இதுநாள்வரை படுக்கையை மட்டும் யாருடனும் நான் பகிர்ந்ததில்லை!’’

சோனம் கபூர்: ‘`செக்ஸியாக உடை அணிவதில் ஆர்வம் இல்லாமல் இல்லை. உடம்பு ஒல்லியாக இருந்தாலும்கூட என்னுடைய பின்னழகும் நீண்ட கைகளும் அப்படிப்பட்ட ஆடைகள் அணியும்போது தனித்துத் தெரிகின்றன. அது சமயங்களில் எனக்கே அசௌகரியத்தை உண்டு பண்ணிவிடுகிறது.”

கல்கி கோச்லின்:
‘`சிறுவயதில் உறவினர் ஒருவரால் நான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டவள். வெளியே சொல்ல வழி தெரியாமல், தவித்த நாட்கள் கொடூரமானவை!’’

மல்லிகா ஷெராவத்: ‘`அப்பட்டமாக உடம்பைக் காட்டித்தான் நான் பெரிய ஸ்டாராக வேண்டும் என்பது இல்லை. என்னிடம் இருப்பதை ரசிகர்களின் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன்!’’

- சரண்ஜித் சிங்