உலகம் பலவிதம்
ஃபோட்டோ கமென்ட்
சினிமா
Published:Updated:

ஹா[லிவு]ட் டைரி

ஹா[லிவு]ட் டைரி
பிரீமியம் ஸ்டோரி
News
ஹா[லிவு]ட் டைரி

ஹா[லிவு]ட் டைரி

‘தி அமிட்டிவில்லி ஹாரர்', `ஹ்யூகோ', `கேர்ரி', `தி ஈக்வலைசர்' போன்ற படங்களில் நடித்த க்ளோ க்ரேஸ் மார்டேஸ்தான் இந்த வார ஹாட் பக்கங்களுக்குச் சொந்தக்காரர்.

ஹா[லிவு]ட் டைரி

• ஏழு வயதில் இருந்தே கேமரா வெளிச்சத்தில் இருக்கிறார் க்ளோ. குட்டிப்பாப்பா என்பதால் அவர் நடித்த படத்தையே கண்ணில் காட்டாமல் வளர்த்தார்களாம். #குட்டிச் சுட்டி!

• க்ளோவிற்கு நான்கு அண்ணன்கள். அவர்களின் பெயரையும், தன் அம்மாவின் பெயரையும் காலில் பச்சை குத்தியிருக்கிறார். #ஆனந்தக் குயிலின் பாட்டு!

• மாடலிங்கும் மேடத்திற்குக் கைவந்த கலை. வோக், மேரி க்ளேர், எல் போன்ற பிரபலமான நிறுவனங்களின் ஆஸ்தான மாடல் க்ரேஸ்தான். அடிக்கடி ரேம்ப்களிலும் நடை போடுவார். #பேஷன் பாப்பா!

• டைம் இதழின் அதிக செல்வாக்கு வாய்ந்த இளையவர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார் இந்த தேவதை #இருக்காதா பின்ன?

ஹா[லிவு]ட் டைரி

• பிரபல கால்பந்து வீரர் டேவிட் பெக்காமின் மகன் ப்ரூக்ளின் பெக்காமோடு ரிலேஷன்ஷிப்பில் இருந்தார். சமீபத்தில்தான் பிரேக் அப் நடந்தது. #ஆர் யூ ஓகே பேபி?

• பாலே, கால்பந்து, கூடைப்பந்து, ஐஸ் ஹாக்கி, ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல் என அதி தீவிர ஸ்போர்ட்ஸ் வெறியை. #ஹெல்த்துக்கு நல்லது!

• 19 வயதிற்குள் 55 படங்கள் நடித்திருக்கிறார் என்பதால் தற்காலிகமாக சினிமாவில் இருந்து ஒதுங்கப்போவதாக சமீபத்தில் அறிவித்திருக்கிறார். #மிஸ் யூ!

- ஃபாலோயர்