Published:Updated:

தலமேட்டிக்ஸ்!

தலமேட்டிக்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
தலமேட்டிக்ஸ்!

தலமேட்டிக்ஸ்!

தலமேட்டிக்ஸ்!

தலமேட்டிக்ஸ்!

Published:Updated:
தலமேட்டிக்ஸ்!
பிரீமியம் ஸ்டோரி
தலமேட்டிக்ஸ்!

மேத்தமெட்டிக்ஸ் தெரியும். இது `தலமேட்டிக்ஸ்'! நீங்க அஜீத்குமார் நடிச்ச படங்களைப் பார்த்திருந்தா கீழே அவர் பேசின 11 வசனங்களை வெச்சே அவர் நடிச்ச படங்களின் டைட்டிலைச் சொல்லுங்க பார்ப்போம்.  டெஸ்ட் ரிசல்ட் கீழே...

தலமேட்டிக்ஸ்!

1. ``என்னோட சுதந்திரம்கிறது உங்களோட மூக்கு நுனி வரைக்கும்தான். உங்க மூக்கைத் தொடுறது இல்லை!''

2.``இந்த 12 மணிநேரத்துக்குள்ள ஒரே ஒரு தடவை நான் உங்களுக்கு போன் பண்ணுவேன். போனை எடுத்து ஹலோனு சொல்றதுக்குப் பதிலா... சிவானு என் பெயரை நீங்க சொல்லணும். அதான் பந்தயம்!''

3.``பிரியா! உங்கிட்ட நான் சொன்ன கதை பொய்யா இருக்கலாம். ஆனா, என் காதல் பொய் இல்லை!''

4.``வாய் தப்பு செஞ்சா கண்ணு காட்டிக் கொடுத்துடும்!''

5.``உட்கார்ந்து வேலை வாங்குறவனுக்கும் உயிரைப் பணயம் வெச்சி வேலை பார்க்குறவனுக்கும் வித்தியாசம் இருக்கு!''

6.``நம்ம கூட இருக்குறவங்களை நாம பார்த்துக்கிட்டா நம்ம மேல இருக்குறவன் நம்மளை பார்த்துப்பான்!''

7.``இன்னொரு நிமிஷம் நீ இங்கே இருந்தே... உன் தலை இருக்காது!''

8.``நான் பார்த்துப் பார்த்து தண்ணி ஊத்தி வளர்ந்த வீட்டு மரம் கிடையாது. தானா வளர்ந்த காட்டுமரம்! வெட்ட நினைச்சா கோடாலிகூட சிக்கிக்கும்!''

9..``இனிமே கோர்ட் பக்கம் உன்னைப் பார்த்தேன். உடம்புல கையிருக்கும் காலிருக்கும். மூக்கிருக்கும் முழி இருக்கும். ஆனா உயிர் இருக்காது!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

10.``லைட்டைப் போட்டு வண்டி ஓட்டணும். லைட்டாப் போட்டு வண்டி ஓட்டவே கூடாது!''

11.``நான் தனி ஆள் இல்ல. துடிக்கத் துடிக்க படுகொலை செய்யப்பட்ட 690 பேரின் ஆத்மா!''

11 படங்களையும் கரெக்ட்டா கண்டுபிடிச்சிருந்தீங்கன்னா நீங்க கொலவெறி `தல' ரசிகர். 10 படங்களைக் கண்டுபிடிச்சிருந்தா நீங்க நடுநிலைவாதிகள். 10க்கும் கீழே கண்டுபிடிச்சிருந்தா நீங்க தளபதி ரசிகர்! கூட்டிக் கழிச்சிப்பாருங்க கணக்கு சரியா வரும்!

- சரண்ஜி

விடைகள்: 1.காதல் கோட்டை, 2.காதல் மன்னன், 3.வாலி, 4.அசல், 5.பில்லா-2, 6.வீரம், 7.என்னை அறிந்தால், 8.அமர்க்களம், 9.தீனா, 10.மங்காத்தா, 11.சிட்டிசன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism