Published:Updated:

சினிமா விடுகதை!

சினிமா விடுகதை!
பிரீமியம் ஸ்டோரி
சினிமா விடுகதை!

சினிமா விடுகதை!

சினிமா விடுகதை!

சினிமா விடுகதை!

Published:Updated:
சினிமா விடுகதை!
பிரீமியம் ஸ்டோரி
சினிமா விடுகதை!

ந்த வார சினிமா விடுகதையில் சின்னக்குயில் சித்ராவின் பாடல்கள்தான் விடைகள் பாஸ்...

சினிமா விடுகதை!

1.    விருது வாங்கிய இந்தப் பாட்டு வித்தியாசமான ராஜா பாட்டு. ஏட்டுல எழுதாத இந்தப் பாட்டை எழுதி வெச்சு பழக்கம் இல்லை. படம் பேரில் பைரவி இருந்தாலும் ‘பைரவி' படத்தில் இந்தப் பாட்டு இல்லையே. இப்போ சொல்லுங்க என்ன பாட்டுன்னு?

2.    உலக அழகி சினிமாவில் பாடும் பாட்டு... பாடி முடிச்சதும் சாக்கடைக்குள்ள போயி விழுற பாட்டு. பாடி நடிச்ச படத்தில் மட்டும் இல்லை. பட்டிதொட்டியும் ஹிட்டான இந்தப் பாட்டு எந்தப் பாட்டு?

3.    ஊர் உலகமே பாடிய பாட்டாம். தத்துவங்களைக் கக்கிய பாட்டு. எழுதியவருக்கு தேசிய விருது தந்த தரமான பாட்டாம். இந்தப் பாட்டுதானே பல பேருக்குப் பாடம். இது என்ன பாட்டு?

4.    இது மும்பைப் பாட்டு. ஆனா மும்பையில் பாடும் பாட்டு இல்லை. அந்தக் கால இளசுக்கெல்லாம் பிடிச்ச இந்தப் பாட்டு. இசைப்புயலும் இசைக்குயிலும் சேர்ந்தால் இன்னிசை மழைதானே... இந்தப் பாட்டை மனசில வெச்சுக்காம இங்கே சொல்லிடுங்க.

5.    ஆழ்ந்த வருத்தங்களுக்கு இன்னொரு அர்த்தம் இந்தப் பாட்டின் முதல் வார்த்தை. இந்தப் பாட்டுப் பேரில்தான் மணிரத்னம் படமும் வந்துச்சே. நாலு எலியோட ஒரு எலி சேர்ந்தா வந்துடுமே பாட்டு முதல் வரி. இது என்ன பாட்டு?

6.    பேருக்கு முன்னால் பட்டம் சேர்த்த பாட்டு. கேட்டாலே மனம் பட்டம் விடுற வயசுக்குப் போகுமே... மலையாள இயக்குநருக்கு பூக் கொடுத்து வரவேற்ற படத்தில் இடம் பெறும் இந்தப் பாட்டு என்ன பாட்டு?

7.    பாட்டுப் பாடுறவர் இசையமைச்ச படத்தில் அவரும் பாடிய பாட்டை இவங்களும் பாடினாங்களே... ஆனா மெட்டு வேறு . ரிதம் வேறு. வரிகள் மட்டும் வைரமானது. என்ன பாட்டு இந்தப் பாட்டு?

8.    மலையாள சூப்பர் ஸ்டார் தமிழில் தந்த அழகான படத்தில், மிகவும் கஷ்டமான பாட்டில் கலக்கினாரே சித்ரா... தொடையில் தாளம் தட்டி ரசிக்காதவர்கள் யார்? பாட்டு எழுதியவருக்கும் இசையமைச்சவருக்கும் பெயரில்தான் எத்தனை ஒற்றுமை. இந்தப் பாட்டு பாடுங்களேன்...

- ஜெ.வி.பிரவீன்குமார்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

 விடைகள்:  1. பாடறியேன் படிப்பறியேன்... (சிந்து பைரவி) 2. எங்கே எனது கவிதை... (கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்) 3. ஒவ்வொரு பூக்களுமே... (ஆட்டோகிராப்) 4. கண்ணாளனே எனது கண்ணை... (பம்பாய்) 5. அஞ்சலி அஞ்சலி புஷ்பாஞ்சலி... (டூயட்) 6. சின்னக்குயில் பாடும் பாட்டு கேட்குதா... (பூவே பூச்சூடவா) 7. உன்னைக் கண்ட பின்புதான்... (சிகரம்) 8. தத்தித்தோம்... வித்தைகள் கற்றிட... (அழகன்)

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism