Published:Updated:

அட்மினா, ஹேக்கரா தெரியலயே..? நடிகர் அஜித் குமாருக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ் ட்விட்டரில் வாழ்த்து!

அட்மினா, ஹேக்கரா தெரியலயே..? நடிகர் அஜித் குமாருக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ் ட்விட்டரில் வாழ்த்து!
News
அட்மினா, ஹேக்கரா தெரியலயே..? நடிகர் அஜித் குமாருக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ் ட்விட்டரில் வாழ்த்து!

மே 1-ம் தேதி அஜித் பிறந்த நாள் அவரது ரசிகர்களும், திரையுலகப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் அஜித்துக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் , நடிகர் அஜித்துக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமா உலகின் உச்ச நடிகர்களுள் ஒருவரான அஜித்குமாரின் 47-வது பிறந்த நாளை அஜித் மட்டுமின்றி அவரின் ரசிகர்களும் இன்று (மே 1-ம் தேதி) கொண்டாடினர். தமிழகத்தின் பல இடங்களிலும் வெவ்வேறு விதமாக அஜித் ரசிகர்கள் வெகு விமர்சையாகக் கொண்டாடினர். ஃபேஸ்புக், ட்விட்டர் என சமூக வலைதளங்களை இன்று அஜித்தின் பிறந்தநாள் ஹாஸ்டேகுகள்தான் ஆண்டது.

இந்நிலையில், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர்  அஜித்துக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். துணை முதல்வரின் இந்தப் பதிவுக்குப்பின் அர்த்தம் என்னவாக இருக்கும் என கமென்ட் பாக்ஸில் சிலர் அரசியல் பேச விஜய்- அஜித் ரசிகர்கள் வழக்கம்போல் தங்களின் 'தேன் சிந்தும்' வார்த்தை சண்டையில் ஈடுபட்டனர். 

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

முன்னதாக, தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் அஜித்துக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அடுத்த சிறிது நேரத்திலேயே யாரோ எனது பக்கத்தை ஹாக் செய்து இந்த வாழ்த்து செய்தியை பதிவிட்டுள்ளனர் என செங்கோட்டையன் விளக்கமளித்தார். மேலும், அவரின் விளக்கத்தை அடுத்து ட்விட்டர் பக்கத்திலிருந்து அந்தப் பதிவு நீக்கப்பட்டது.  இந்த நிலையில்தான் அஜித்துக்கு துணைமுதல்வர் ஓ.பி.எஸ்ஸின் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து நாளை துணை முதல்வர்  "இது அட்மின் போட்டார், ஹேக்கர் போட்டர்"னு சொல்லாம இருந்தா சரி.