Published:Updated:

``மதுரைப் பங்காளிங்க நாங்க!''

``மதுரைப் பங்காளிங்க நாங்க!''
பிரீமியம் ஸ்டோரி
``மதுரைப் பங்காளிங்க நாங்க!''

``மதுரைப் பங்காளிங்க நாங்க!''

``மதுரைப் பங்காளிங்க நாங்க!''

``மதுரைப் பங்காளிங்க நாங்க!''

Published:Updated:
``மதுரைப் பங்காளிங்க நாங்க!''
பிரீமியம் ஸ்டோரி
``மதுரைப் பங்காளிங்க நாங்க!''
``மதுரைப் பங்காளிங்க நாங்க!''

மிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் பிரெட்லீயோடு பிஸியாக இருந்த மா.கா.பா ஆனந்தை பிடித்தோம். பத்து வருடங்களுக்கு முன்பு அவருடைய நண்பர்களோடு சேர்ந்து எடுத்த போட்டோவைக்காட்ட  மனிதன் ஃபீலீங்ஸ் ஆஃப் முஸ்தஃபா ஆகிவிட்டார்.

``எங்க இருந்துயா இந்த போட்டோவைக் கண்டுபிடிச்சீங்க? இப்போப் பார்த்தா எனக்கே சிரிப்பா இருக்கு. 2006ல மிர்ச்சியில ஆர்ஜேவா  சேர்ந்த டைல்ம அகமதாபாத்ல டிரெயினிங் போட்ருந்தாங்க. அப்போ மதுரை டீம்ல கமல், சேது, ஆண்ட்ரூஸ், கோயம்புத்தூர் டீம்ல நான், ஆர்ஜே பாலாஜி, மிர்ச்சி செந்தில், டோங்லீ கார்த்தி எல்லோரும் தினம் சாயங்காலம் கிரிக்கெட் விளையாடுவோம். அப்போ மிர்ச்சி செந்தில் சொன்ன பாட்ஷா டான் கான்செப்ட்லதான் இந்த போட்டோ எடுத்தோம். சேது தான் பாஷா பாய். ஆர்ஜே பாலாஜி ரைட்ஹேண்ட். அப்புராணியா இருக்கு நான்தான் பாஷாபாயோட செல்லப்பிராணி.''

`பாஸ் இதோட முடியல. இந்த போட்டோவுல இருக்குற எல்லார்கிட்டயும் உங்க கிட்ட கேட்க வேண்டிய கேள்வியையும் வாங்கிட்டு வந்துருக்கோம்.' என்றதும் ரிலே பேட்டிக்குத் தயாரானார் மா.கா.பா.ஆனந்த்.

``மதுரைப் பங்காளிங்க நாங்க!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆண்ட்ரூஸ்:  ``மா.கா.பா!  இப்போ நீ நெறய தடவை ஃப்ளைட்ல போயிருக்கலாம். ஆனா நாம எல்லோருக்குமே இந்த அகமதாபாத் ட்ரெயினிங் போனதுதான் ஃபர்ஸ்ட் பிளைட். எப்படி இருந்துச்சு அந்த அனுபவம்?''

 ``ஹாஹாஹா. அது அனுபவமா? அத ஏன் கேட்குறீங்க. ஃபிளைட் டேக் ஆன உடனேயே சீட் பெல்ட்ட கழட்டி விசிலடிக்க ஆரம்பிச்சுட்டானுங்க.ஏர்ஹோஸ்டரஸ்லாம் வந்து வார்ன் பண்ற அளவுக்கு ஆகிப்போச்சு. உலகத்துலயே ஃபிளைட் டேக்ஆஃப் ஆனதுக்கு விசிலடிச்ச குரூப்னா அது நாங்கதான்!''

டோங்க்லீ கார்த்தி: ``நாம எல்லாம் எப்போ ஒண்ணா சேர்ந்து  திரும்ப எப்போ கொடைக்கானல் போகலாம்?''

``பார்ட்னர் இன் கிரைம்னு சொல்லுவாங்கள்ல... அது இவன் தான்! அப்போலாம் அடிக்கடி கொடைக்கானல் போவோம். அங்க நைட் ஆனா ரூம் நம்பர் போர்டு  பூராம் மாத்தி மாத்தி  வேற வேற ரூம்ல மாட்டி விட்டு வந்துருவோம். வேற யாராச்சும் ஆர்டர் பண்ற சாப்பாட்ட நாங்க சாப்பிட்டு  இருக்கோம். கண்டிப்பா கொடைக்கானல் போகலாம் டோங்க்லீ. நீ டிக்கெட் ஸ்பான்சர் பண்றதா இருந்தா.''

சேது:  ``ஆர்.ஜே.வா இருந்த, இப்போ சினிமாவுக்கு வந்துட்ட. இதுல நீ மிஸ் பண்ணின விஷயங்கள் என்ன? என்னைக்காவது, `ஹீரோ ஆவேன்'னு நெனச்சுப் பார்த்துருக்கியா?''

``ஆர்.ஜே.வா இருக்கும்போது தினம் புதுப்புது போன்கால் வரும். புதுப்புது ஆளுங்ககிட்ட நிறைய பேசுவேன். அது மிஸ்ஸிங். மத்தபடி ரெண்டும் ஒரே மாதிரிதான் போயிட்டு இருக்கு. உங்க கூடலாம் இருந்தா இருக்குற வேலை போயிடுமோன்னு தான் பயந்துகிட்டு இருந்துருக்கேன். இதுல எங்கே ஹீரோ ஆவேன்னு நெனச்சு பார்க்குறது? ஆனா நடந்துருச்சு.''

காரல் மார்க்ஸ்: ``காவிரி பிரச்சனையில நீ முதல்வரா இருந்தா என்ன நடவடிக்கை எடுத்துருப்ப?''

``பயபுள்ள கோர்த்து விடுறத பாருங்களேன். இவன் அப்போ இருந்தே அரசியல் பேசுற பய. டேய் அரசியல் உன் வீட்டோட நிப்பாட்டிக்க. என் குடும்பத்துல கும்மி அடிச்சுராத.''

``மதுரைப் பங்காளிங்க நாங்க!''

தாயுமானவன் கமல்: ``உன் மனைவிக்குத் தெரிஞ்சு எத்தனை கேர்ள் ஃப்ரெண்ட், தெரியாம எத்தனை கேர்ள் ஃப்ரெண்ட்? அப்புறம் முதல் சம்பளம் ஞாபகம் இருக்கா? இப்போ எவ்வளவு சம்பளம் வாங்குறே?''

 ``முதல் சம்பளம் ஆர்.ஜே.வா வாங்குன மூவாயிரத்து ஐநூறு ரூபாய்.இப்போ கடன் வாங்காத அளவுக்கு சம்பளம் வாங்குறேன். கேர்ள் ஃப்ரெண்ட் கண்டிப்பா உன்னையவிட கம்மிதான் மச்சி!''

ஆஸ்கர் நிகழ்ச்சிய தொகுத்து வழங்க ஒரு வாய்ப்பு. அதே நாள்ல ஷங்கர் சார் படத்துல நடிக்க ஆடிஷன் கூப்டுறாங்க. எது உன்னோட சாய்ஸ்?

ஷங்கர் சார் தான்.

ஆர்.ஜே.பாலாஜி: ``என்னோட சிரிப்பைப் பத்தி என்ன நெனைக்கிற?''

``கே.ஆர்.விஜயாவும் வி.கே.ராமசாமியும் சேர்ந்து சிரிச்சா எப்படி இருக்கும்.அப்படி ஒரு கலவைதான் பாலாஜியோட சிரிப்பு. சிரிச்சாலும் சீக்கிரம் நிப்பாட்டி தொலைக்க மாட்டான். அரை மணி நேரத்துக்கு சிரிச்சுட்டுதான் நிப்பாட்டுவான். கோயம்புத்தூர்ல ஒரு தடவை டூவீலர்ல போயிட்டு இருக்கும் போது, `லெஃப்ட்ல போ... லெஃப்ட்ல போ'னு சொல்றான். செக்கு மாடு மாதிரி ஒரு முட்டு சந்துல வண்டிய ஒடிச்சி ஓட்டி, எந்த லெப்டுன்னே தெரியாம அனாமத்தா நேராப் போயி ஒரு சாக்கடையில விழுந்துட்டோம். குங்குமப்பொட்டு கவுண்டர் படத்துல சத்யராஜும் கவுண்டமணியும் ஜெயில்ல இருப்பாங்க. சத்யராஜ், `என்ன இருந்தாலும் இந்த ஜெயில்ல கொசுக்கடியே இல்லைல பங்காளி'ன்னு சொல்லுவாரு. அந்த மாதிரி இவன் ஒரு ஓரமா உட்கார்ந்து கெக்கே பிக்கேன்னு சிரிச்சுக்கிட்டு இருக்கான், எனக்கு தான் செம வலி அன்னிக்கு!''

``தசாவதாரம் படத்துல நெப்போலியன் ரோல்ல நடிச்சது யாரு?''

``ஹாஹாஹா..! எனக்கு சினிமா பத்தியெல்லாம் அவ்வளவா தெரியாது. பாலாஜி இப்பமாதிரியே அப்பவும் அறுந்தவால். `தசாவதாரம்' படம் பார்த்துட்டு, `கமல் எத்தனை கெட்டப்ல நடிச்சுருக்காரு'னு எங்கிட்டே கேட்டான். நான் `பத்து'னு சொன்னேன்.

அதுக்கு அவன், `நாசமாப்போச்சு. நெப்போலியன் கேரக்டரும் கமல்தான் நடிச்சிருக்காரு. கன்ஃபார்ம் நியூஸ். நம்பிக்கை இல்லைனா இன்னொருவாட்டி பாரு'னு சொன்னான். அதையும் நம்பி திரும்ப அந்த படத்தை பார்த்துட்டு வந்தேன். ஞாபகம் இருக்கா மச்சி?''

``போத்தனேரி ரோடுகள்ல பைக் டிராவல்ல பேசுனது ஞாபகம் இருக்கா?''

``நல்லாவே இருக்கு. பாலாஜிக்கு நார்த்ல கோன் பனேகா குரோர்பதி ஷோ பண்ணனும்னு ஆசை. அதை என்கிட்ட சொல்லுவான். இந்தியில பாலாஜியும் தமிழ்ல நானும் பண்ணனும்னு அடிக்கடி சொல்லுவான்.

இந்த போட்டோவுல இருக்குற எல்லோருமே இன்னும் மீடியால தான் இருக்கோம். ஆனா வேறவேற இடத்துல அடுத்த அடுத்த லெவலுக்கு போயிட்டோம். பாலாஜியை உங்களுக்கே தெரியும். சேது மதுரைல நம்பர் ஒன் ஆர்.ஜே. கமல் `நாதஸ்வரம்', `தாயுமானவன்', `காக்க காக்க'னு சீரியல்ல பிஸி. ஆண்ட்ரூஸ் தந்தி டிவில பிஸி. டோங்க்லீ ரஹ்மான் சார் அனிருத்னு கான்செர்ட்ல பிஸியா இருக்கான். கார்ல் மார்க்ஸ் அமெரிக்கா  மலேசியானு பிஸியா ஈவெண்ட் மேனெஜ்மெண்ட் பண்ணிட்டு இருக்கான். சீக்கிரம் எல்லோரும் திரும்பவும் ஒண்ணா மீட் பண்ணனும். பாசக்கார மதுரைப் பங்காளிங்க நாங்க!''

`அற்புதமான நண்பர்கள் சேர்ந்தா வெற்றிகள் குவியுமடா. நம் வெற்றிகள் குவியுமடா. ஜல்சா பண்ணுங்கடா...' பாடல் பண்பலையில் ஒலித்துக்கொண்டிருந்தது.

 - ந.புஹாரி ராஜா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism