உலகம் பலவிதம்
கலாய்
சினிமா
Published:Updated:

ஹா[லிவு]ட் டைரி

ஹா[லிவு]ட் டைரி
பிரீமியம் ஸ்டோரி
News
ஹா[லிவு]ட் டைரி

ஹா[லிவு]ட் டைரி

ஹா[லிவு]ட் டைரி

‘டெத்ரேஸ் 2', ‘தி பாய்', `பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன்: டான் ஆஃப் ஜஸ்டிஸ்' போன்ற படங்களில் நடித்த லாரன் கோஹன்தான் இந்த வார ஹாட் கேக்!

மெரிக்காவின் பென்ஸில்வேனியா மாகாணத்தில் பிறந்து வளர்ந்த லாரன், பெற்றோருடன் இங்கிலாந்திற்கு இடம் பெயர்ந்தார். #ஒயிட் பியூட்டி!

மாடலாக இருந்து சினிமாவிற்குள் நுழைந்தவர், மாடலிங் வாய்ப்புகள் கிடைக்கும்வரை லாஸ் ஏஞ்சல்ஸில் ஓர் உணவகத்தில் சர்வராக வேலை பார்த்தார். #இந்தக் கையால சாப்பிடக் கொடுத்து வெச்சிருக்கணும்.

2014-ல் மேக்ஸிம் இதழின் உலகின் ஹாட்டான 100 பெண்கள் பட்டியலில் இடம் பிடித்தார். #இப்போ டைம்பாஸ்லயும்!

டிப்பில் பயங்கர கெட்டி. ஆங்கில இலக்கியம், நாடகம் ஆகியவற்றில் இளங்கலை டிகிரி முடித்திருக்கிறார். சொந்தமாக நாடகக் குழுவும் வைத்திருந்தார் #ஸ்டூடன்ட் நம்பர் ஒன்!

பென்சிங் எனப்படும் வாள் சண்டை, வில் வித்தை, துப்பாக்கி சுடுதல் ஆகிய விளையாட்டுகள் அத்துப்படி. இவை எல்லாமே படங்களில் நடிப்பதற்காகக் கற்றவை #பொறுப்பு பேபி!

ஹா[லிவு]ட் டைரி



ருமையாக பியானோ வாசிப்பார். அம்மணியின் குரலுக்கும் தனி ரசிகர் படை உண்டு. யோகா ரொம்பப் பிடிக்கும். #சூப்ப்ப்ப்பர் சிங்கர்!

டங்களில் நடித்துப் பெற்ற புகழைவிட சீரியல்களில் நடித்துப் பெற்ற புகழ் அதிகம். `சூப்பர் நேச்சுரல்', `வாக்கிங் டெட்' போன்ற சீரியல்களின் வழியே சூப்பர்ஸ்டார் ஆனார். #இங்கே கூட நிறைய சீரியல்கள் எடுக்குறாங்க கண்மணி!

ஹா[லிவு]ட் டைரி

டன் நடித்த ஸ்டீவன் யூனுடன் கிசு கிசுக்கப்பட்டாலும் மேடம் இப்போதுவரை சிங்கிள்தான். #நம்ப முடியலையே!

- ஃபாலோயர்