Published:Updated:

'வர்மா' படத்தின் ஆடிஷனில் இயக்குநர் பாலா!

'வர்மா' படத்தின் ஆடிஷனில் இயக்குநர் பாலா!
'வர்மா' படத்தின் ஆடிஷனில் இயக்குநர் பாலா!

'வர்மா' படத்தின் ஆடிஷனில் இயக்குநர் பாலா!

'நாச்சியார்' படத்தைத் தொடர்ந்து பாலா இயக்கயிருக்கும் திரைப்படம் 'வர்மா'. இந்தப் படம் தெலுங்குப் படமான 'அர்ஜூன் ரெட்டி' படத்தின் ரீமேக். தெலுங்கு வெர்ஷனில் இந்தப் படத்தில் நாயகன், நாயகியாக விஜய் தேவராகொண்டா மற்றும் ஷாலினி பாண்டே நடித்திருந்தனர். காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்தது. 


இதைத்தொடர்ந்து, இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் பாலாவிடம் சென்றது. தமிழில் இந்தப் படத்துக்கு 'வர்மா' என்று பேர் சூட்டினார் பாலா. மேலும், படத்தின் கதாநாயகனாக நடிகர் விக்ரம் மகன் துருவ் அறிமுகமாகிறார். இவர் அறிமுகமாவதால் படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் தற்போதிலிருந்தே அதிகமாகக் காணப்படுகிறது. மேலும், துருவ் ஜோடியாகப் படத்தில் நடிக்கப்போகும் நாயகி யாரென்பது இதுவரை தெரியவில்லை. இந்நிலையில் 'வர்மா' படத்தில் நடிக்கும் மற்ற கதாபாத்திரத்துக்கான ஆடிஷன்ஸ் சென்னையில் நடந்து வருகிறது. இதில் நாயகி தேர்வும் நடக்கலாம் என்று பேசப்படுகிறது. பாலா படத்தின் நாயகி யாராக இருக்கும் என்பது தற்போது சஸ்பென்ஸாக கோலிவுட் உலகில் பேசப்பட்டு வருகிறது. 
 

அடுத்த கட்டுரைக்கு