Published:Updated:

சினிமால்

சினிமால்
பிரீமியம் ஸ்டோரி
சினிமால்

சினிமால்

சினிமால்

சினிமால்

Published:Updated:
சினிமால்
பிரீமியம் ஸ்டோரி
சினிமால்
சினிமால்

* சமீபத்தில் உலகின் பணக்கார நாடான புரூனேவின் இளவரசி ஒரு விருந்தில் `ஆலுமா டோலுமா' பாடலைக் கேட்டுவிட்டு, அஜித்தைப் பற்றித் தெரிந்து கொண்டிருக்கிறார். அஜித் படத்தின் சில காட்சிகளைப் பார்த்தவர், இவ்வளவு அழகாக இருக்கிறார், அவரைப் பார்க்க வேண்டும் என விருப்பப்பட்டிருக்கிறாராம். பிரமாண்ட விருந்தும் அஜித்துக்காகத் தயாராக இருக்கிறதாம். நிஜமா தல?

* `லொள்ளு சபா' மூலம் தனக்கு வாழ்க்கை கொடுத்த இயக்குநர் ராம்பாலாவை `தில்லுக்கு துட்டு' இயக்குனராக வெள்ளித்திரைக்கு அழைத்து வந்து மரியாதை செய்தார் சந்தானம். கூடவே தன் கேரியரிலும் மிகப்பெரிய வெற்றியைச் சுவைத்தார். மீண்டும் ராம்பாலாவிடம் ஒரு கதையைக் கேட்டவர், இது ஜி.வி.பிரகாஷுக்குப் பொருத்தமாக இருக்கும். நானே பேசுறேன்' எனக் கூறி புதுக் கூட்டணியையும் உருவாக்கி விட்டிருக்கிறார். இந்த ஆண்டு இறுதியில் இணைகிறது இந்த நகைச்சுவைக் கூட்டணி. நண்பேண்டா!

* தெலுங்கில் சின்ன பட்ஜெட்டில் தயாராகி பல கோடி வசூல் செய்த `க்ஷணம்', `பெள்ளி சூப்புலு' போன்ற சில படங்களைத் தமிழில் ரீமேக் செய்ய போட்டா போட்டி நடக்கிறது. `க்ஷணம்' படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய சிபிராஜ் தானே அதில் ஹீரோவாக நடிக்கிறார். ஒரிஜினலில் நடித்த அடா ஷர்மாவையே தமிழில் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார். இன்னும் சில படங்கள் ரீமேக் போட்டியில் இருக்கிறது. மாற்றம் வரட்டும்!

* சமீபத்தில் இயக்குநர் தரணியைச் சந்தித்தாராம் விஜய். அப்போது `கில்லி பார்ட்-2'க்கு கதை ரெடியாக இருப்பதைச் சொல்லியிருக்கிறார் தரணி. கதையின் அவுட்லைனைக் கேட்ட விஜய்க்கு கதை பிடித்துப்போக, `விரைவில் நாம் இணையலாம்' என தரணிக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறாராம். சொல்லி அடிங்க.
 

சினிமால்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!


* `சினிமா டூ அரசியல்' ஹீரோயின்கள் வரிசையில் மலையாள நடிகை மஞ்சு வாரியரும் விரைவில் இணைவார் என்கிறார்கள். அதற்கு அச்சாரம் போடும் விதமாக பி.ஜே.பி மாநாட்டில் பிரதமர் மோடி, அமித்ஷா முன்னிலையில் நாட்டிய நாடகம் நடத்துகிறார் மஞ்சு. கட்சியில் இணைந்தபின் முக்கியப் பதவியும் வழங்கப்படும் என்கிறார்கள். இப்பவே சொல்லி வெச்சுக்குவோம், `மகளிர் அணிச் செயலாளர் மஞ்சு வாரியர் வாழ்க!'

* வருண்தவான் நடிக்க டேவிட்தவான் இயக்கத்தில் உருவாக இருக்கிறது `ஜூட்வா 2'. சல்மான் இரட்டை வேடங்களில் நடித்த சூப்பர் ஹிட் படமான `ஜூட்வா'வின் இரண்டாம் பாகமாக உருவாகும் இந்தப் படத்தில் பரினிதி சோப்ராவும், ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸும் வருணுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆனார்கள். இடையில் என்ன நடந்ததோ, ஜாக்குலின் வாய்ப்பைத் தட்டிப் பறித்திருக்கிறார் இடையழகி இலியானா. முக்கியப்புள்ளி ஒருவரின் சிபாரிசில்தான் அந்த வாய்ப்பு இலியானாவுக்குக் கிடைத்தது எனவும் பேசிக்கொள்கிறார்கள். இடையழகி ஆச்சே, இடையில் புகாம?

* பாபி சிம்ஹா தற்போது தன் படத்தைத் தானே தயாரிக்கும் அளவுக்கு வளர்ந்தது நல்ல விஷயம்தான். ஆனால், தயாரித்துக்கொண்டிருக்கும் ‘வல்லவனுக்கு வல்லவன்’ படத்தின் இயக்குனர் விஜய் தேசிங்கை படாதபாடு படுத்திவிட்டாராம். படத்தைத் தன் நண்பர்கள் நலன் குமாரசாமி மற்றும் கார்த்திக் சுப்புராஜுக்குப் போட்டுக் காட்டியவர், அவர்களின் ஆலோசனையால் படத்தின் இயக்குநருக்கே தெரியாமல் கிளைமாக்ஸை மாற்றி ஷூட் செய்து இணைத்திருக்கிறாராம். என் துட்டு, என் பைசா, என் படம்!

* நடித்தால், நல்ல படங்களில் மட்டுமே நடிக்கவேண்டும் என்ற மனநிலையில் இருக்கிறார் சமந்தா. அடுத்த ஆண்டு சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கவிருக்கும் சமந்தாவுக்கு, இப்போதும் பல வாய்ப்புகள் வருகின்றன. ஆனால், `எந்தக் கதையும் எனக்குப் பிடிக்கவில்லை' எனக் காத்துக்கொண்டிருக்கிறாராம். கொண்டை உள்ள சிங்காரி!

சினிமால்* லிங்குசாமி தயாரிப்பில் `ரா ரா ராஜசேகர்' என்ற படத்தை இயக்கி வந்தார் பாலாஜி சக்திவேல். நஷ்டத்தில் இருப்பதால் அந்தப் படத்தை டிராப் செய்துவிட்டார் லிங்குசாமி. இதனால், சும்மா இருந்த பாலாஜி சக்திவேலுக்காக ஒரு படம் தயாரிக்க முன் வந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர், இயக்குநர் விஜய் மில்டன். படத்தில் ஹீரோவாக நடிப்பவர், விஜய் மில்டனின் தம்பி பரத்சீனி. பாலாஜி சக்திவேலும் ஸ்கிரிப்டோடு களம் இறங்கி விட்டாராம். புதுசா புறப்பட்டு வாங்க!

* `ஜோக்கர்' படத்தில் ரம்யா பாண்டியன் நடிப்பைத் திரையுலகில் பாராட்டாதவர்களே இல்லை. பாராட்டுகளோடு நிறைய பட வாய்ப்புகளும் வருகின்றன. அதில் ஒன்றுதான் `ஆண் தேவதை'. இதில் சமுத்திரகனி ஜோடியாக நடிக்கிறார் ரம்யா. `ரெட்டச்சுழி' மூலம் பாலசந்தர், பாரதிராஜா இருபெரும் ஆளுமைகளை ஒரே படத்தில் நடிக்க வைத்த தாமிரா இந்தப் படத்தை இயக்குகிறார். அடடே!

* `வாலு' மாதிரி நீண்டாலும் பரவாயில்லை, அடுத்த படமும் சிம்புவோடுதான் எனப் பிடிவாதமாக ஒரு வருடத்துக்கும் மேல் காத்திருந்தார் இயக்குநர் விஜய் சந்தர். தெலுங்கு `டெம்பர்' படத்தை ரீமேக் செய்யலாம், உடனே பூஜை போடலாம் என நினைத்திருந்த நேரத்தில் விஷால் வந்து கட்டையைப் போட, அந்தத் திட்டத்தைக் கைவிட்டார்கள். பின் சிம்புவும் மற்ற படங்களில் நடிக்கவும், ஓய்வெடுக்கவும் சென்றுவிட்டார். இந்த கேப்பில் ஒரு பக்கா மாஸ் கதையைத் தயார் செய்து விட்டாராம் விஜய். சிம்பு ஓகே சொன்னதும் ஷூட்டிங் ரெடி. சிம்புவை நம்புவோர் சங்கத்து ஆளா இருக்கும்!

* ஐஸ்வர்யா ராஜேஷை ரெண்டாவது, மூணாவது ஹீரோயினாகப் பார்த்த பல தயாரிப்பாளர்கள், `இவர் எதுக்கும் ரெடிதான்' என நினைத்து விட்டனராம். தங்கள் படத்தில் குத்துப்பாட்டுக்கு ஆட வைக்கலாம் எனக் கணக்கு போட்டு, அட்வான்ஸோடு ஐஸ்வர்யாவை நெருங்கியிருக்கிறார்கள். `நடிப்புக்கு முக்கியத்துவம் இருந்தா சின்னரோல்னாலும் நடிப்பேன். குத்துப்பாட்டுக்கு வேற ஆளப் பாருங்க' என விரட்டிவிட்டாராம். இதுக்கு தான்மா கெஸ்ட்ரோல் பண்ண வேணாம்னோம்!
 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism