Published:Updated:

அப்போ அபிராமி... இப்போ தன்யா!

அப்போ அபிராமி... இப்போ தன்யா!
பிரீமியம் ஸ்டோரி
அப்போ அபிராமி... இப்போ தன்யா!

அப்போ அபிராமி... இப்போ தன்யா!

அப்போ அபிராமி... இப்போ தன்யா!

அப்போ அபிராமி... இப்போ தன்யா!

Published:Updated:
அப்போ அபிராமி... இப்போ தன்யா!
பிரீமியம் ஸ்டோரி
அப்போ அபிராமி... இப்போ தன்யா!
அப்போ அபிராமி... இப்போ தன்யா!

டுத்த எடுப்பிலேயே இயக்குநர்கள் மிஷ்கின், ராதாமோகன் படங்களில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் பழம்பெரும் நடிகர் ரவிச்சந்திரனின் பேத்தி தன்யா. எப்படிங்க இப்படி? எனக் கேட்டதும் கொஞ்சும் தமிழில் கொட்டுகின்றன வார்த்தைகள்...

“தாத்தா நடிச்சதைப் பார்க்கும்போதே எனக்கும் சினிமா ஆசை வந்துருச்சு. ஆனால், வீட்டில் முதல்ல படிச்சு முடி. அப்புறம் பார்த்துக்கலாம்னு சொல்லிட்டாங்க. ஒருவழியா எம்.ஓ.பி. வைஷ்ணவா காலேஜ்ல பி.காம் முடிச்சுட்டு இப்போவாச்சும் சினிமாவுக்குப் போகலாமாங்கிற மாதிரி வீட்டுல பேச்சை ஆரம்பிச்சேன். அப்பவும் கொஞ்சம் யோசிக்கத்தான் செஞ்சாங்க. நடிக்க வர்றதுக்கான எல்லா முயற்சிகளும் நானாகவே எடுத்ததுதான். ஃப்ரெண்ட்ஸோட சேர்ந்து போட்டோஷூட் எடுத்து நானே தேடிக்கிட்ட வாய்ப்புகள் இவை. மிஷ்கின் சாரோட அடுத்த படத்தில் ஹீரோயின் சான்ஸ் கிடைச்சதும் அவரைச் சந்திக்கப் போனேன். அபிராமிங்கிற பேரைக் கொஞ்சம் மாத்திக்கலாமான்னு கேட்டார். நீங்களே நல்ல பெயரா வெச்சுருங்கனு சொன்னேன். அபிராமி ‘தன்யா’வான கதை இதுதான்” படபடவென ஃப்ளாஷ்பேக் சொல்கிறார் தன்யா.

``நடிகர் ரவிச்சந்திரனுடைய பேத்தி என்பதற்காகவே எதிர்கொள்ளும் சவால்கள்?’’

“கண்டிப்பா இருக்கு. அவரோட திறமையையும் நல்ல குணங்களையும் நான் அப்படியே பிரதிபலிக்கணும். இப்போ நான் நடிக்க வந்ததுக்கு அப்புறம் ரவிச்சந்திரனோட பேத்திங்கிறதுதான் எனக்கு அடையாளமா இருக்கு. அவரோட அந்தப் பெயரை என்னோட நடிப்பால காப்பாத்தணும்ங்கிற பொறுப்பும் இருக்கு.”

“உங்கள் தாத்தாவோடு ஷூட்டிங் போயிருக்கீங்களா?”

“அவர் நடிச்சுட்டு இருக்கும்போது ‘பம்மல் கே. சம்பந்தம்’, ‘அருணாச்சலம்’ ரெண்டு படத்துக்கு மட்டும் போயிருக்கேன். படத்துல மட்டுமில்ல, இயல்பாவே அவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட். வேற எந்த ஷூட்டிங் ஸ்பாட்டுக்கும் கூட்டிட்டுப் போனதில்லை. நான் தமிழில் வாய்ப்புக்காகக் காத்திருந்ததுக்குக் காரணம், இது என் தாத்தா வாழ்ந்த திரையுலகம். அதனால் அந்த இடத்திலேயே ஆரம்பிக்கணும்ங்கிறது என்னோட ஆசை. என் தாத்தாவுக்கும் அதுதான் சந்தோஷமாக இருக்கும்னு நினைக்கிறேன்.”

“உங்களுக்கு அவர் கொடுத்த அட்வைஸ்?’’


“நீ எதைப் பண்ணினாலும் அரை மனசோட செய்யக்கூடாது. முழு மனசோட இறங்கிப் பண்ணணும்னு சொல்லுவார். அப்புறம், அவரைப் பார்த்தே பங்சுவல், டெடிகேஷன், எல்லாத்தையும் கத்துக்கிட்டேன்.”

“நடிக்கத் தொடங்கும்போதே ரெண்டு படம். அதுவும் ரெண்டு வித்தியாசமான இயக்குநர்கள்?”


“நான் ரொம்ப லக்கி. மிஷ்கின் சார்தான் என்னை முதலில் நடிக்க செலக்ட் பண்ணது. அதற்கு அப்புறம் கமிட்டான ராதாமோகன் சார் படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக இப்போ நடிச்சுட்டு இருக்கேன். ரெண்டு படத்திலேயும் எனக்கு ஒண்ணுக்கொண்ணு தொடர்பில்லாத கேரக்டர்கள். என்ன கேரக்டர்னு சொல்லக் கூடாதுனு ஸ்ட்ரிக்டா சொல்லிருக்காங்க. ஸாரி!”

“நடிப்பதைத் தாண்டி சினிமாவில் வேறு?”

“அம்மா கிளாஸிகல் டான்ஸர். அதனால, இயல்பாவே அதுல ஆர்வம் வந்துடுச்சு. 15 வருசமா கிளாஸிகல்

அப்போ அபிராமி... இப்போ தன்யா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

டான்ஸ் கத்துக்கிட்டு இருக்கேன். பரதநாட்டிய அரங்கேற்றம் பல முறை பண்ணின பெருமை இருக்கு. நிறைய பேர் பாராட்டியிருக்காங்க. அதனால, சினிமாவுல டான்ஸ் கண்டிப்பா நல்லா பண்ணுவேன்!”

“மறக்க முடியாத பாராட்டு?”


“நாலு வருஷத்துக்கு முன்னாடி, தமிழிசை நாடக மன்றத்தில் ஒரு அரங்கேற்றம் நடந்தப்போ எத்திராஜ முதலியார் என்னோட நாட்டியத்தைப் பார்த்துட்டு ஒரு லட்சம் ரூபாய் பரிசாகக் கொடுத்துப் பாராட்டினதை எப்பவும் மறக்க முடியாது.”

“ரோல்மாடல்?”

“ஒரு படத்தில் பணியாற்றும் அத்தனை கலைஞர்களும் தங்களோட விதவிதமான நடிப்புத் திறமையை வெளிப்படுத் துறாங்க. அப்படி இருக்கும்போது, ஒரே ஒருத்தரை ரோல் மாடலா வெச்சுக்கிட்டா நம்மளை நாமே சுருக்கிக்கிற மாதிரி இருக்கும்ல. அதான், எனக்கு எல்லோருமே ரோல்மாடல்.”

- விக்கி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism