Published:Updated:

குரு-சிஷ்யன்!

குரு-சிஷ்யன்!
பிரீமியம் ஸ்டோரி
குரு-சிஷ்யன்!

குரு-சிஷ்யன்!

குரு-சிஷ்யன்!

குரு-சிஷ்யன்!

Published:Updated:
குரு-சிஷ்யன்!
பிரீமியம் ஸ்டோரி
குரு-சிஷ்யன்!
குரு-சிஷ்யன்!

பாலசுப்ரமணியெம்... ஒளிஜாலக் காரர் பி.சி.ஸ்ரீராமின் சீடர்! `பிதாமகன்', `ரஜினிமுருகன், `இது நம்ம ஆளு' படங்களின் கலர்ஃபுல் ஃப்ரேம்களுக்கு சொந்தக்காரர்.உதயநிதி ஸ்டாலினின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர். `சரவணன் இருக்க பயமேன்' படத்தின் படப்பிடிப்புக்காக தேனிக்குக் கிளம்பிக்கொண்டிருந்தார்.

கோபி ஜெகதீஷ்... பாலசுப்ர மணியெம்மின் சீடர். `இனிமே இப்படித்தான்' படத்தை முடித்த கையோடு அருண்விஜய்யின் `வா டீல்' ரிலீஸ் வேலைகளில் பிஸியாக இருந்தார். ஃபேஸ்புக்கில் மட்டும்தான் See your memories இருக்க வேண்டுமா? நம்ம டைம்பாஸில் `see your memories' க்காக இந்த குரு-சிஷ்யர்களுக்கு இடையே ஒரு நாஸ்டால்ஜியா சந்திப்பு!

``ஒரு மாணவனாக பி.சி.ஸ்ரீராம் சாருடனான  உங்கள் முதல் சந்திப்பு.ஒரு ஆசிரியராக கோபியுடனான உங்கள் முதல் சந்திப்பு எப்படி இருந்தது?''


``காரைக்குடிதான் சொந்த ஊரு. கல்யாண போட்டோகிராபராக இருந்தேன். சினிமா ஆசை இருந்தாலும் சினிமான்னா என்னன்னே தெரியாது. பி.சி சார்கிட்ட சேரணும்னு மட்டும் மனசு சொல்லிக்கிட்டே இருந்துச்சு. ஒருவேளை திரைப்படக்கல்லூரியில் படிச்சாத்தான் சான்ஸ் கிடைக்குமோங்கிற பயத்துலயே அவரைப் பார்க்காம ஒரு ரெண்டு வருஷம் வேறவேற மீடியம்ல வேலை பார்த்துட்டு இருந்தேன். என்னோட ஃப்ரெண்டு ரிப்போர்ட்டரா இருந்தாங்க. பி.சி சாரைப் பேட்டி எடுக்கப்போறேன்னு சொன்னதும் நான் போட்டோ எடுக்கவர்றேன்னு அடம்புடிச்சு போயிட்டேன். போறப்ப சாருக்கு என்னெல்லாம் புடிக்குமோ அந்த மாதிரி எல்லாம் இருக்கணும்னு பார்த்துக்கிட்டேன். அவருக்கு கறுப்புன்னா பிடிக்கும். நானும் கறுப்புச்சட்டை வாங்கிப் போட்டுக்கிட்டேன். பேட்டி முடிஞ்சது. `என்ன பண்ற?'னு சார் கேட்டார். `உங்கக்கிட்ட சேரணும்'னு சொல்லி கையில இருந்த ஆல்பத்தைக் காமிச்சேன். எல்லாம் பார்த்துட்டு அந்த போட்டோக்களுக்கு டெக்னிக்கல் டீட்டெயில்ஸ் எல்லாம் கேட்டாரு. அவ்ளோ தான். சார் ஒண்ணுமே சொல்லலை.

குரு-சிஷ்யன்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!திரும்பவும் தினம் சார் வீட்டுக்கு அவரைப் பார்க்கப் போவேன். பார்க்க முடியாது. ஒருநாள், `நான் ஊருக்கே போயிரலாம்னு இருக்கேன் உங்க போட்டோ மட்டும் குடுங்க!'னு கேட்கப் போனேன். கறுப்பு வெள்ளையில் ஒரு போட்டோ கொடுத்தார். ஒரு வாரத்துல அந்த கறுப்பு வெள்ளை போட்டோவை ஆயில் பெயின்டிங்ல கலர் பெயின்டிங்கா மாத்தி வரைஞ்சு கொண்டு போயி கொடுத்தேன். வேகவேகமா கவரைப் பிரிச்சுட்டு அந்த பெயின்டிங்கைப் பார்த்துக்கிட்டே, அவுங்க அம்மாவைப் பார்த்தார். பி.சி சாருக்கு அவுங்க அம்மான்னா ரொம்பப் பிடிக்கும். நம்மள சேர்த்துக்கிருவார்னு தோணுச்சு. `நீ என் அசிஸ்டென்ட் திருவைப் போயி பாரு!'னு சொன்னார்.

நான் திருவைப் பார்த்தேன். `நாளைக்கு ஷூட்டிங் இருக்கு. மெரினா பீச்சுக்கு நாலரை மணிக்கு வந்துருப்பா!'னு சொல்லிட்டாங்க. ஐ.சி.எப்-ல இருந்து பஸ்புடிச்சு பீச்சுக்குப் போறதுக்குள்ள சூட் முடிஞ்சு வேற லொகேஷன் போயிட்டார். திரு மட்டும் இருந்தார். `ஸாரி சார்... பஸ் லேட்டாயிருச்சு'னு சொன்னேன். `எனக்குத் தெரியாது. சார போயிப் பாரு!'னு சொன்னார். வேற லொகேஷன்ல சாரைப் பார்க்கப் போனேன். `மீரா' படத்துல பனிவிழும் மாலையில் பாட்டு எடுத்துக்கிட்டு இருந்தாங்க. தயங்கிக்கிட்டே சாரைப் பார்த்தேன். மீட்டர் பாக்ஸைக் கையில கொடுத்துட்டு, `நீ ஒண்ணும் பண்ண வேணாம். சும்மா இங்கேயே நில்லு!' னு சொல்லிட்டு சார் ஷூட் ஆரம்பிச்சாரு. வேற உலகத்துல இருக்குற மாதிரி இருந்துச்சு.

ஒரு ஆசிரியரா கோபி கூட சந்திப்பும் வேற மாதிரி இருந்துச்சு. அதைக் கோபியே சொன்னா இன்னும் நல்லா இருக்கும்.''

கோபி தொடர்கிறார்...

``1996ல வாரப்பத்திரிகைல பாலு சாரோட பேட்டி படிச்சுட்டு இவர்கிட்ட சேரணும்னு முடிவு பண்ணிட்டு இருந்தேன். இப்போ எல்லாம் ஈசியா வாட்ஸ் அப்லயும் ஃபேஸ்புக்லயும் அசிஸ்டன்ட் சான்ஸ் கேட்குற மாதிரி அப்போ இல்ல. பிறகு இளையராஜா சாருக்கு ஒளிப்பதிவாளர் சங்கம் சார்பில் காமராஜர் அரங்கத்துல பாராட்டு விழா நடத்துனாங்க. அங்கதான் சாரைப் முதல் தடவை பார்த்தேன். நான் எடுத்த போட்டோ எல்லாம் காமிச்சேன். `ஆளு அதிகமா இருக்காங்க... சொல்றேன்பா!'னு சொல்லிட்டார். ஒரு ஆறு மாசம் காத்திருந்தேன். தொடர்ச்சியா சாரோட வீட்டுக்கு அவரைப் பார்க்கப் போவேன். சிலநேரம் பார்க்க முடியும். சில நேரம் முடியாது. ஒருநாள் எனக்கு தந்தி வந்துச்சு. `நாளைக்கு ஷூட் இருக்கு வாங்க!'னு.

குரு-சிஷ்யன்!`நரசிம்மா' படத்தோட டைரக்டர் திருப்பதிசாமி சார் டைரக்‌ஷன்ல ஒரு விளம்பரப் படம். அதான் என்னோட முதல் அனுபவம். அதுல இருந்து தனுஷ் சாரோட `குட்டி' படம் வரைக்கு வேலை பார்த்தேன். இது எனக்கும் பாலு சாருக்குமான இருபது வருஷ பந்தம்.

``முதன் முதலில் பாலசுப்ரமணியெம்னு டைட்டில் கார்டுல பெயர் பார்க்கும் போது எப்படி இருந்துச்சு?''

(லேசாக சிரிக்கிறார்) ``அதை என்னால எப்பவுமே மறக்க முடியாது. நான் கமல் சாரோட தீவிர ரசிகன். தேவர் மகன் பிரிவ்யூ பார்த்தோம். படம் முடிஞ்சு டைட்டில் கார்டுல பெயர் போட்டங்க. அதுல என்னோட பெயர் வரல. பி.சி சாரும் கமல் சாரும் வெளியில் நின்னுக்கிட்டு இருந்தாங்க. நான்  வேகமா போயி, `சார் என்னோட பேர் இல்லை'னு சொன்னேன். கமல் சார் சிரிச்சுட்டுப் போயிட்டார். பி.சி சார் என்ன நெனைச்சாருன்னு தெரில, `திரு இங்க வாங்க'னு கூப்பிட்டு, `என் பெயரை எடுத்து அதுக்கு பதிலா இவன் பேர போட்ருங்க!'னு சொல்லிட்டுப் போயிட்டாரு.

சார் போனதும் எல்லாரும் என்னைய `என்னடா எப்டி பேசணும்னு தெரியாம பேசிட்டியே?'னு சொன்னாங்க. ஆனா படத்துல கடைசில என் பேரும் இருந்துச்சு. நான் முன்னாடி கவனிக்கல. ஊருல கொண்டாடித் தீர்த்துட்டேன். தேவர் மகன் இப்போ பார்த்தாலும் அந்த டைட்டில் கார்டு சம்பவம் மனசுல வந்து போகும்.''

``எப்படி அமைந்தது இருவருக்குமான முதல் பட வாய்ப்பு?''

``அஞ்சு ஆறு படம் முடிஞ்சப்போவே கே.வி. ஆனந்த் சார், ராம்ஜி சார், ஜீவா சார், திரு சார் எல்லாரும் தனியா படம் பண்ணப் போயிட்டாங்க. இப்போ நான் சாருக்கு ஃபர்ஸ்ட் அசிஸ்டன்ட்டா இருந்தேன். தேவர்மகன் படத்துல கமல் ரேவதி கல்யாண சீன் எல்லாம் பி.சி சார் என்னைத்தான் எடுக்கச் சொன்னார். `இவன் கல்யாண போட்டோகிராபரா இருந்தவன்பா. இவனே எடுக்கட்டும்'னு சொல்வார். அந்த வேலை கமல் சாருக்கு பிடிச்சிருந்திருக்கணும்னு நெனைக்கிறேன்.

கமல் சார் என்னய வச்சு படம் பண்றேன்னு பிசி சார்கிட்ட கேட்டிருக்கார் போல, ஒரு நாள்,, `உன்னய ஒரு பெரிய ஆளு படம் பண்ண கூப்டுறாரு. போயிப்பண்ணுனு பி.சி சார் தான் என்னய மகளிர் மட்டும் இந்தி வெர்சனுக்கு அனுப்பி வச்சார். ஐ லவ் பி.சி சார்.''

இப்போது கோபி தொடர்கிறார்...

``ஒவ்வொரு டைரக்டருக்குமே தன்னோட அசிஸ்டன்ட் நல்ல கம்பெனிக்கு படம் பண்ணணும்னு ஆசை அக்கறை இருக்கும். அது பாலுசார்கிட்ட ரொம்பவே இருக்கும். இப்போ `தூங்காவனம்' படம் பண்ணுன ராஜேஷ் எம் செல்வாவோட முதல்படம் `காலைப்பனி'. குறைஞ்ச  பட்ஜெட் படம். படம் சரியா போகல. ஆனா டெக்னிக்கலா நல்ல பெயர் வாங்கிக் குடுத்துச்சு.''

குரு-சிஷ்யன்!``உங்களோட மாணவனா கோபிகிட்ட நீங்க பார்த்த தனித்துவம் என்ன?''


``எல்லாருமே எனக்கு ஸ்பெஷல்தான். ஆனா கோபிகிட்ட என்னன்னா என்னை அப்படியே பார்க்குற மாதிரி இருக்கும். வேலை விஷயத்துலயும் சரி ஆட்கள் பழகுற விஷயத்துலயும் சரி. `நண்பேண்டா' படம் வெளிநாட்டுல ஒரு பாட்டு எடுக்கணும். என்னால போக முடியல. கோபிதான் எடுத்தான். அவுட்புட் பார்க்குறப்போ என் ஸ்டைல் அப்டியே இருந்துச்சு. கோபிக்கு சீக்கிரமே பெரிய பிரேக் கிடைக்கணும். கிடைக்கும்!''

``ஒரு ஆசிரியரா பாலசுப்ரமணியெம்கிட்ட என்ன கத்துக்கிட்டீங்க?''


பாலு சார்கூட எந்த டைரக்டர் வேல பார்த்தாலும் ஒரு கம்ஃபர்ட் இருக்கும். கம்மியான செலவு அதிகபட்ச ரிச்னெஸ் காட்டுவாரு. இது படத்தோட தயாரிப்பு சுமைய பயங்கரமா குறைச்சுரும். இதை நான் பாலு சார்கிட்ட இருந்துதான் கத்துக்கிறேன்.

ஐ லவ் பாலு சார்!''

- ந.புஹாரி ராஜா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism