உலகம் பலவிதம்
கலாய்
சினிமா
Published:Updated:

ரெட் அலெர்ட் செய்யும் `பிங்க்'!

ரெட் அலெர்ட் செய்யும் `பிங்க்'!
பிரீமியம் ஸ்டோரி
News
ரெட் அலெர்ட் செய்யும் `பிங்க்'!

ரெட் அலெர்ட் செய்யும் `பிங்க்'!

மிதாப் பச்சனின் அட்டகாசமான நடிப்பிற்காகவே தியேட்டர்களில் அப்ளாஸ் அள்ளுகிறது `பிங்க்' பாலிவுட் திரைப்படம்! `` `பிங்க்' பாத்தாச்சா? பாக்கலைனா பாத்துடுங்க' என கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் உங்களிடம் வந்து சொன்னால் கண்டிப்பா மிஸ் பண்ணிடாதீங்க பாஸ். உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்துகொள்ள `பிங்க்' பரிந்துரைக்கிறது. ராதிகாஆப்தேவின் நடிப்பில் வந்த `அந்தாகீன்' படத்தை இயக்கிய அனிருத்தா ராய் சௌத்ரிதான் டைரக்‌ஷன்!

அமிதாப் பச்சன், டாப்ஸி பன்னு, கிர்தி குல்ஹரி, ஆண்ட்ரியா டரியங், ஆகியோரின் நடிப்பில் படம் வேற லெவலில் இருக்கிறது. 

ரெட் அலெர்ட் செய்யும் `பிங்க்'!

ஒரு பெண்... அவள் மனைவியா இருந்தாலும் சரி, விலைமாதுவாக இருந்தாலும் சரி `அந்த' விஷயத்துக்கு ஆணிடம் ‘நோ’ என்று சொல்லிவிட்டால் அதற்கு ‘நோ’ என்றுதான் அர்த்தம். அதைத் தாண்டி ஆண்கள், வேறு நோக்கத்தில் பெண்களை `டச்’ செய்வது சரியல்ல என நெஞ்சுக்கு நேராய் நின்று நியாயம் பேசுகிறது படம்!

டெல்லியில் தனியாக வீடு எடுத்துத் தங்கி வேலைக்குப் போகும் டாப்ஸி பன்னு, கிர்தி குல்ஹரி, ஆண்ட்ரியா டரியங் மூவரும் பதற்றத்துடன் காரில் பயணிக்க, இன்னொரு காரில் ரத்த காயத்துடன் அங்கத் பேடி (ராஜ்வீர் சிங்) மற்றும் அவனது நண்பர்கள் பயணிப்பது போல் காட்சிகள் ஆரம்பிக்கின்றன. அடிபட்ட இளைஞர்  யார்? அவருக்கும் இந்த மூன்று பெண்களுக்கும் என்ன தொடர்பு? என்னும் சஸ்பென்ஸை படம் நெடுகிலும் ஓடவிட்டு ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்கிறார்கள். டாப்ஸி கைது செய்யப்படுவதும் அவளுக்காக வழக்கறிஞரான அமிதாப்புடன் இணைந்து மற்ற பெண்கள் போராடுவதுமாய் கோர்ட்டுக்குள் உட்கார வைத்து நம்மையும் சேர்த்து நியாயம் பேச வைக்கிறது திரைக்கதை.

ஒரு பெண் குடிப்பதாலோ, அரைகுறை ஆடை அணிவதாலோ, தாமதமாக வீட்டுக்கு வருவதாலோ அவளை வேறுநோக்கில் அணுகலாம் என்ற ஆணின் மனப்போக்குக்கு செம சவுக்கடி வசனங்கள்.

ரெட் அலெர்ட் செய்யும் `பிங்க்'!

``நீ வெர்ஜினா?’'

‘`இல்ல... நான் வெர்ஜின் இல்ல’'

‘`உன்னோட வெர்ஜினிட்டியை எப்ப இழந்த?’'

``19 வயசுல. என் பாய் ஃப்ரெண்ட் கூட!’'

‘`அவர்கிட்ட அதுக்காக நீங்க காசு வாங்குனீங்களா?’'

‘`இல்ல, எனக்கு பிடிச்சு செஞ்சேன். வாங்கலை. அதுக்கப்புறம் சில நண்பர்களோட!'’

``சரி... ராஜ்வீருக்கு என்ன பதில் சொன்னீங்க..?’'

`‘நோ சொன்னேன்’'

`` நோ என்றால் நோ தான் யுவர் ஹானர்!’'

- டாப்ஸிக்கும் அமிதாப்புக்கும் இடையே நடக்கும் வாதங்கள் தியேட்டரில் அனல் கக்குகின்றன.

வடகிழக்கு மாநிலப் பெண்கள் என்றாலே அவர்களை தவறாக சித்தரிப்பது, ஒரு பெண் தொட்டுப் பேசினாலே அவள் உடல் சுகத்துக்கு ஏங்குபவள் என நினைப்பது போன்ற மனப்போக்கை அமிதாப்பின் வாதங்கள் தோலுரிக்கின்றன. அதே சமயத்தில், எது பெண்களுக்கான சம உரிமை என்பதையும் `பிங்க்’ ரெட் அலெர்ட்டில் பதிவு செய்கிறது.

- பொன்.விமலா