Published:Updated:

'' என்ன இப்போ... நான் சிங்கிளா, மேரீடானு தெரியணும்... அதானே!?'' - கெளசல்யா

இப்போ எனக்கு 38 வயசாகுது. இன்னும் சில காலம் பேச்சுலரா இருக்கவே ஆசைப்படுறேன்.

'' என்ன இப்போ... நான் சிங்கிளா, மேரீடானு தெரியணும்... அதானே!?'' - கெளசல்யா
'' என்ன இப்போ... நான் சிங்கிளா, மேரீடானு தெரியணும்... அதானே!?'' - கெளசல்யா

மிழ் சினிமாவில் பல ஹிட் படங்களில் நாயகியாக நடித்தவர் கெளசல்யா. விஜய், மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்கள் பலருடன் ஜோடியாக நடித்தவர். தற்போது பெங்களூருவில் வசித்து வருபவர், கேரக்டர் ரோல்களில் நடித்துவருகிறார்.

"நீங்க கல்யாணத்துக்குத் தயாராகியிருப்பதாக சமீபத்தில் வெளியான தகவல் உண்மையா?"

(சிரிப்பவர்) ''உங்களுக்கு நான் சிங்கிளா, மேரீடானு தெரியணும் அவ்வளவுதானே. சரி சொல்றேன். நான் கல்யாணத்துக்குத் தயாராகி இருப்பதாகவும், வரன் பார்த்துகிட்டு இருப்பதாகவும் வெளியான செய்தியை படிச்சேன். ஆனா, அது உண்மையில்லை. 'இந்த வயசுக்குள்ள கல்யாணம் பண்ணிக்கணும்'ங்கிறதில் எனக்கு உடன்பாடில்லை. இப்போ எனக்கு 38 வயசாகுது. இன்னும் சில காலம் பேச்சுலரா இருக்கவே ஆசைப்படுறேன். அந்தச் சுதந்திரத்தின் மகிழ்ச்சி கல்யாணத்துக்குப் பிறகு கிடைக்காதுனு நினைக்கிறேன். கல்யாணம் செய்துக்கிறதுல எனக்கு ஆர்வம் உண்டு. ஆனா, அதுக்கு இன்னும் உரியக் காலம் வரலைனு தோணுது. இன்னும் கொஞ்ச காலம் கழிச்சு நிச்சயம் கல்யாணம் பண்ணிப்பேன்." 

"உங்க ஸ்லிம் சீக்ரெட் பற்றி..."

"தினமும் யோகா, தியானம், உடற்பயிற்சி செய்றது வழக்கம். சில வருஷத்துக்கு முன்பு, கொஞ்சம் மென்டலி ஸ்ரெஸ்டா இருந்தேன். அப்போ வெயிட் போட்டேன். அப்புறம் எல்லாம் சரியாகி, உடல்நலத்தின் மேல கேர் எடுத்துக்க ஆரம்பிச்சேன். அதனால உடலும் உள்ளமும் ரொம்பவே ஆரோக்கியமாகிடுச்சு. உணவுக்கட்டுப்பாட்டில் போதிய அக்கறை செலுத்துறேன். ஷூட்டிங் இல்லாத தருணத்துல, கர்நாடக மாநிலத்துல இருக்கிற கோயில்களுக்கு அடிக்கடி போவேன். அதனால, என் மனசுக்கு நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்குது."

"ஹீரோயினா பரபரப்புடன் நடிச்ச காலத்துக்கும் இப்போதைக்குமான ஒப்பீட்டை எப்படிப் பார்க்கிறீங்க?"

"90-களின் இறுதியில தொடங்கி தென்னிந்திய நாலு மொழிகள்லயும் மாறி மாறி நடிச்சேன். பெரிய ஹீரோக்கள் பலருடனும் ஜோடியா நடிச்சேன். நிறைய ஹிட்ஸ் கிடைச்சுது. ஓடியாடி உழைச்ச அந்த  ஹீரோயின் காலம் முடிஞ்சது. சினிமா உலகத்தின் எதார்த்தப்படி, 30 வயசுக்குப் பிறகு எனக்குப் பட வாய்ப்புகள் குறைய ஆரம்பிச்சுது. அதனால, செலக்டிவான கேரக்டர் ரோல்கள்ல நடிச்சுகிட்டு இருக்கேன். முன்ன மாதிரி பெரிய பரபரப்பு எல்லாம் இப்போ இல்லை. எனக்குச் சினிமாதான் பிடிச்சிருக்குது. இந்த ஃபீல்டை விட்டாலும், எனக்கு வேற எதுவும் தெரியாது." 

"உங்களின் நீண்ட கால சினிமா ஃப்ரெண்ட்ஸ் பற்றி..." 

"அப்படி யாருமில்லை. ஷூட்டிங், வெற்றி விழா, கலைநிகழ்ச்சிகள் மாதிரியான சினிமா சார்ந்த நிகழ்ச்சிகளில் மீட் பண்ணும்போது சக நடிகர், நடிகைகளைப் பார்த்துப் பேசுவேன். மத்தபடி நெருங்கிப் பழகுறதில்லை. அப்படிப் பழகி அதனால ஏற்பட்ட வதந்திகளையும் எதிர்கொண்டிருக்கேன். அதனால, அப்போதிலிருந்து சினிமா ஃபீல்டுல யார்கூடவும் பர்சனலா எந்த நட்பும் வெச்சுகிறதில்லை. நடிப்பு, வீடுனுதான் இருப்பேன். என்னோட அம்மாதான் என் பெஸ்ட் ஃப்ரெண்ட்." 

"அப்கம்மிங் படங்கள்..."

"தெலுங்குப் படம் ஒன்றில் நாகசைதன்யாவின் ஃப்ளாஸ்பேக் அம்மாவா நடிக்கிறேன். மலையாளத்தில் 'மந்தாரம்' மற்றும் சில தமிழ்ப் படங்கள்ல நடிச்சுகிட்டு இருக்கேன்."

"அம்மா ரோல்ல நடிக்கத் தயங்கி இருக்கீங்களா?"

"ஆமாம். ஆனா, இப்போ இல்லை. ஆறு வருஷத்துக்கு முன்பே அம்மா ரோல் வந்துச்சு. அப்போ ரொம்பவே தயங்கினேன். இப்போ எந்தத் தயக்கமும் ஆட்சேபனையும் இல்லை. அதுவும் வெயிட்டான, முக்கியத்துவம் இருக்கிற அம்மா ரோலில் மட்டும்தான் நடிக்கிறேன்."